17 அக்டோபர் 2014

தேவர்மகன்களின் சுயரூபம்?!

“காட்டுமிராண்டிக் கொலைகளுக்கு… யாரடா கௌரவக் கொலை.. என்று பெயரிட்டது” - வினவு

http://www.vinavu.com/2014/10/16/vimaladevi-honour-killing-mugilan-cartoon/
சோ கால்டு காட்டுமிராண்டி கொலைகளுக்கு கெளரவக்கொலை என்ற பெயரை யார் வைத்தார்கள் என்பதை ஆய்வு செய்யும் இதே வேளையில், பள்ளுப்பாட்டு பாடல்பெற்ற பண்டைய காலம் தொட்டே பள்ளர் என்று அறியப்பட்டவர்களுக்கு, தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயரை யார் வைத்தார்கள் என்பதையும் ஆய்வு செய்து கேலி சித்திரம் ஒன்றை ஓவியர் முகிலன் மூலமாக வரைய சொல்லி தனிப்பதிவை வினவு போடலாம். மேலும், இந்த திரு.பாரதிராஜா - திரு.கமலஹாசன் - திரு. சசிகுமார் மூவருமே மூன்று வித சாதி பின்னணிகளை கொண்டவர்கள். அதிலும் திரு.பாரதிராஜா மட்டும் தான் தேவர் சாதியை சேர்ந்தவர். அவர் சாதியால் தேவரென அறியப்பட்டாலும் தேவர் சாதி சார்ந்த விசயத்தில் மாற்று கருத்துடையவர். தன் மகனுக்கு கூட வேறுவொரு சாதியில் தான் திருமணம் முடித்துள்ளார் என நினைக்கின்றேன்.

ஆனால், இந்த மூவருக்குள்ளும் உள்ள ஒரே ஒற்றுமை என்னவெனில், மூவருமே தென் தமிழகத்தை சேர்ந்தவர்கள். சாதியால் வேறுபட்டிருந்தாலும் மக்களின் வாழ்க்கையைத்தான் படமாக பதிவு செய்துள்ளார்கள். அது தேவர்மகன் ஆகட்டும். வினவு திரை விமர்சனம் எழுதிய படமான சுந்தரபாண்டியனாக இருக்கட்டும். இது மக்களின் நடைமுறை வாழ்க்கையை தான் படத்திலும் காட்டிருப்பார்கள். இதை விமர்சிப்பது தவறில்லை. ஆனால், உங்களது விமர்சனத்தை கண்டு அஞ்சு யாருமே இனி தேவர் சாதி மக்கள் சார்ந்த படமே எடுக்கமால் இருக்க போவதில்லை.

விரைவிலேயே திலகர் என்ற படம் வெளிவர விருக்கின்றது. அதுவும் முழுக்க முழுக்க தேவர் சாதி படம் தான். திருநெல்வேலி - வெள்ளலூர் கிராமத்தில் நடந்த உண்மை சம்பவம் தான். திலகரை, தேவர்மகன் பாட் 2 என்றும் சொல்கின்றனர். அந்த படத்தை எடுத்திருக்கும் இயக்குனர் வெள்ளாள பிள்ளைமார் சமூகத்தை சேர்ந்தவர். அவருக்கு திரைத்துறையில் பாலுத்தேவர் என்ற அடைமொழியும் உண்டாம். இந்த பாலுத்தேவர் என்ற காதாப்பாத்திரத்தை வைத்து தான் பாரதிராஜா, சாதிங்கிறது படிச்சு வாங்கின பட்டமா?ன்னு கேட்டாரு. அவரையே இன்னைக்கு கேலி சித்திரம் மூலம் விமர்சிக்கிறீங்க. தொடரட்டும் உங்கள் பணி.

நிறைய தேவர் சாதி இயக்குனர்கள் சமகாலத்தில் படம் இயக்கி கொண்டே இருக்கின்றனர். மேலும் பல புதுமுக இயக்குனர்களும் அணிவகுத்து காத்திருக்கின்றனர். குட்டிப்புலி படத்தை இயக்கிய தேவர்சாதி இயக்குனர் முத்தையாவின் அடுத்த படைப்பான கொம்பனுக்கும், பெருமாள் பிள்ளை இயக்கிய திலகருக்கும் வினவு விமர்சனம் எழுதுவீர்களென நம்புகிறேன். ஏனெனில் உங்களுக்கு அட்டைக்கத்தி/மெட்ராஸ் இயக்குனர் ரஞ்சித் மட்டும் தான் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவராக தெரியலாம். ஏனெனில் அவர் தேவர்சாதி இல்லை என்பதால்!

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக