அதிமுகவும் - தேவர் குருபூஜையும்!சென்ற வருடம், தேவர் ஜெயந்திக்கு 144 தடை போட்டாங்க; தீடீரென்று ஒருநாள், "மண்-பெண்-பொன்" மீது பற்றற்ற பசும்பொன் தேவருக்கு அ.இ.அ.தி.மு.க. சார்பில் தங்க கவசம் சாத்தினாங்க. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இராமநாதபுரம் தொகுதியில் வெற்றி பெறவும் - வெற்றி பெற்ற பின்னும், இசுலாமியரான திரு.அன்வர்ராஜா இருமுறை பசும்பொன்னுக்கு வந்து பிராத்தனையும் செய்து விட்டு போனார். இப்போது செல்வி ஜெயலலிதாவின் விடுதலைக்காக பசும்பொன் தேவருக்கு அ.இ.அ.தி.மு.க. சார்பாக சிறப்பு பூஜை கூட பண்றாங்க. ஆனால், போன வருடம் தடை போட்ட போது நடுத்தர மற்றும் வயது முதிர்ந்த பெண்களெல்லாம் அக்டோபர் 30ம் தேதியன்று பசும்பொன் சன்னதியில் ஒப்பாரி வைத்து "தேவர் கூலி கொடுப்பாரு!"ன்னு இது மாதிரி நிறையா சாபங்களை செல்வி ஜெயலலிதாவிற்குகொடுத்தார்கள். அது இப்போது இன்னமும் சப்தமாக என் காதில் ஒலித்து கொண்டு இருக்கின்றது. வினை விதைத்தால் வினையைத்தானே அறுக்க வேண்டும்? அதுதான் விதி!

- இரா.ச.இமலாதித்தன்

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment