17 அக்டோபர் 2014

பறையோசை தமிழனின் இசை!

பறை இசை மற்றும் தப்பாட்டம் போன்றவை சாதீய ஒடுக்குமுறையின் விளைவாக தலித் சமூகத்தின் ஒரு பிரிவினரால் செய்யப்பட்டவை. அவைகள் அந்த ஒடுக்குமுறையை மறு உறுதி செய்வதாக இருப்பதால் அவை தடை செய்யப்படவேண்டும்.

- திரு. ரவிக்குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (பி.பி.சி. தமிழ்)


எவ்வளவு முட்டாள் தனமான கோரிக்கை இது? பறையோசை என்பது தமிழனின் அடையாளம். அந்த ஒலிக்குள் தானே தமிழர் வாழ்வியல் சார்ந்த நல்லது - கெட்டது ஒளிந்துருக்கின்றது. பக்தியையும், மகிழ்ச்சியையும், செய்தியையும், பிறருக்கு பரப்பும் ஓர் இசை ஊடகமாக இருந்து வந்த பறையோசையை தடை செய்ய சொல்வது அயோக்கிய தனமானது. மேலும், ஒரு மனிதனின் இறப்பில் தானே, பிறப்பை விட சடங்கு சம்பிரதாயங்களுக்கு அதிக முக்கியத்துவமும் கொடுக்கப்படுகின்றது. அங்கே பறையோசை தானே முதன்மையானதாக கருதப்படுகிறது. சராசரி தமிழனின் வாழ்வியலோடு தொடர்புடைய பறையோசையை, அடிமை முத்திரை போல நினைத்து, அதை தடை செய்ய சொல்லும் எண்ணத்தை திரு. ரவிக்குமார் இனியாவது மாற்றிக்கொள்ள வேண்டும்.

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக