23 அக்டோபர் 2014

ஒரு சமூகத்தின் தலைக்கு மேலே கத்தி!

"ஐயாயிரம் கோடி கடன் வாங்கினவன், பணத்தை கட்ட முடியலைன்னு மீடியா முன்னாடி கையை விரிக்கிறானே தவிர தற்கொலை பண்ணிக்கல. அந்த கடனை கொடுத்த பேங்க் காரனும் தற்கொலை பண்ணிக்கல. ஆனால், வெறும் ஐயாயிரம் ரூபாய் கடனை கட்ட முடியாத விவசாயி அவமானம் தாங்க முடியாம தற்கொலை பண்ணிக்கிறான்” - இது கத்தி படத்தில் திரு.விஜய் பேசும் வசனம். அச்சு அசலாக இந்த வசனத்தை ரொம்ப நாளுக்கு முன்னாடியே திரு.சீமான் பல மேடைகளில் பேசி இருக்கார். ஆனால் கத்தி படத்தில் கதை திரைக்கதை வசனம் இயக்கம் திரு ஏ.ஆர்.முருகதாஸ் பேருதான் வருது. எனக்கென்னமோ பல வசனங்களை திரு. சீமான் தான் எழுதி கொடுத்திருப்பாருன்னு தோணுது. அதுனால தான் லைக்கா பிரச்சனையில கத்திக்கு எதிராக சீமான் குரல் கொடுக்கலை போல.

”மக்களின் முதல்வர்" என்பதை போன மாசத்துல இருந்து கேள்வி பட்டிருப்பீங்க. ஆனால் "மக்களின் சூப்பர் ஸ்டார்" என்பதை இனிமே எப்போதும் கேட்பீங்கன்னு நினைக்கிறேன். எங்க ஊரு நாகப்பட்டினம் தியேட்டர் வாசல் முழுக்க ஃப்ளக்ஸ் போர்டுகளில் இப்படித்தான் இருந்துச்சு.
மக்களின் சூப்பர் ஸ்டார் விஜய் நடிக்கும் கத்தி!

கோலா கோலா என எல்லாரும் கொக்கரிப்பதை பார்க்கும் போது ஒரேவொரு சந்தேகம் தான் வருகின்றது. என்னமோ திரு. விஜய் சொல்லித்தான் இவர்களெல்லாம் பெப்சி/கோலா குடிக்கவே ஆரம்பித்தது போல அலப்பறை செய்கிறார்கள். அப்படியென்றால், இன்று அதே திரு.விஜய் தானே, விவசாயம் பார்க்க சொல்கிறார். அதை செய்ய முயற்சி செய்ய வேண்டியது தானே? அதை விட்டுவிட்டு, விஜய் விஜய் என ஏளனம் செய்வது நேர விரயம் தான். ஒரு காலத்தில் இதே திரு.ரஜினியை பைத்தியமென சொன்னதும் உங்களை போன்ற ஓரு கூட்டம் தான். ஆனால் தொடர்ச்சியாக பத்து வருடங்களுக்கு மேலாக, அதே திரு.ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு இருந்ததும் உங்களை போன்ற ஒரு கூட்டம் தான். நினைவில் கொள்ளுங்கள், வாழ்க்கை என்பது நேர் கோடு அல்ல. அது மிகப்பெரிய ஒரு வட்டம்! இங்கே ஏளனம் செய்யப்படுவையெல்லாம் எட்டமுடியா உயரத்தில் உச்சம் தொட்டு விட்டது என்பதே கடந்த கால வரலாறு.

கத்தி திரைப்படம் மூலம், நாகப்பட்டினம் - தஞ்சாவூர் - திருவாரூர் உள்ளிட்ட டெல்டாவிலுள்ள விவசாய நிலங்களில், மீத்தேன் வாயு எடுத்து காவிரி படுகையை பாலைவனமாக மாற்ற முயலும் அந்நிய பன்னாட்டு நிறுவனத்தின் சதியை, கடைகோடி பாமரனுக்கும் சென்றடைய வைத்துள்ள நடிகர் திரு. விஜய் அவர்களின் மக்கள் இயக்கத்தினர் உள்பட அனைவரும் சமூக களத்திலும் போராட்ட குணத்தோடு கால் பதிப்பார்கள் என நம்புகிறேன். மீத்தேன் எதிர்ப்பு இளையோர் குழுவோடு இணைய தொடர்பு கொள்க.
Ganesa Moorthy : 9500796349 | Sabari Nivas : 9865713466


- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக