13 அக்டோபர் 2014

கல்யாணம் என்னும் கடல் தேடி!

ஒரு பைசாவுக்கு ப்ரோயசனம் இல்லாம ஊர்ல உரண்ட இழுத்து, பஞ்சாயத்தை கூட்டி வீட்டுக்கு செலவை வச்சிக்கிட்டு திரிஞ்ச பயலுகயெல்லாம், பொண்டாட்டி புள்ளைங்களோட பைக்ல ட்ரிபிள்ஸ் போய்கிட்டே "அண்ணே எப்போ கல்யாணம்?"ன்னு நக்கலா கேட்டுகுறாய்ங்க. பின்னாடி உள்ள அவன் பொண்டாட்டி யாருன்னு பார்த்தா, பக்கத்து ஊர்ல மூக்கு ஒழுகிக்கிட்டு கிடந்த வண்டு சிண்டா இருக்குது. இவன் இப்படி கேட்ட உடனே அது கூட நம்மள பார்த்து நக்கலா சிரிக்குது. முருகா! என்னடா இது உன் பக்தனுக்கு வந்த சோதனை?

கொஞ்ச நேரம் ஓவர்டைம் ஒர்க் பண்ணினாலேயே, "உங்களுக்கு என்ன ஜி குடும்பமா? குட்டியா? நைட் ஃபுல்லா இங்கயே கிடக்கலாம். நாங்களாம் அப்படியா? இருட்டுறதுக்குள்ள வீட்டுல போய் அடைஞ்சிடணும்"ன்னு நக்கல் பண்றாய்ங்க! என்னய்யா இது, கல்யாணம் ஆனாத்தான் குடும்பமா? கல்யாணமாகாத எங்களுக்கும் ஒரு குடும்பம் இருக்குய்யா... முருகா! இதுக்கெல்லாம் காரணம் நீ தான்.

 - இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக