கிரிக்கெட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிரிக்கெட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

10 மார்ச் 2016

பாகிஸ்தான் வெல்லட்டும்!

பாகிஸ்தான் அணியை இந்தியாவில் விளையாட அனுமதிக்காமல் இருப்பதில் தான் தேசபக்தி இருக்கிறதா என்ன? பிசிசிஐ என்ற தன்னாட்சி நிறுவனம் இந்தியாவில் நடத்தும் உலகளாவிய போட்டியில் பிசிபி என்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் விளையாடுவதில் என்ன தவறு? ரவிசங்கர் குருஜியின் விழாவிற்காக இராணுவ வீரர்களை பணியாட்களாக ஈடுபடுத்தும் போதே உங்களது தேசப்பற்று பல்லிளிக்க வில்லையா?

நாங்கள் கடவுள் நம்பிக்கையாளர்கள் தான். இந்த மண்ணையும், கல்லையும், மலையையும், மரங்களையும், நதியையும், கடலையும் கடவுளாக வணங்கும் நாங்கள் தீவிர கடவுள் நம்பிக்கையாளர்கள் தான். இந்த தாய்மண்ணையே தன்னுயிர் போல நேசிக்கும் உண்மையான தேசபக்தி எங்களுக்கு உண்டு. ஆனால், எங்கள் தாய்மண்ணின் வளத்தையும், எங்கள் வரிபணத்தையும், அதானிகளும் - அம்பானிகளும் - மல்லையாக்களும் சுரண்டும் போது உங்களுக்கு வராத தேசபக்தி, இந்த கிரிக்கெட்டில் தான் வருகிறதா?
சென்றமுறையே டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியிடம் வெற்றி பெற்றிருக்க வேண்டிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இம்முறை உலக கோப்பையை இந்தியாவில் வெல்லட்டும்!

சோ கால்டு ஹிந்தியனாக என் வாழ்த்துகள்!

- இரா.ச. இமலாதித்தன்

07 மார்ச் 2015

மோக்கா மோக்கா!

223 ரன் கூட அடிக்க முடியாம 34 ஓவர்லேயே ஆல் அவுட் ஆகுறவய்ங்களுக்கு ’மோக்கா மோக்கா’ன்னு பெருசா பில்டப் கொடுத்தாய்ங்களே, வழக்கம் போல இந்த வேர்ல்ட் கப்லயும் கோட்டை விட்டுடுவாய்ங்களோ... காலிறுதி வாய்ப்பை தக்க வைத்துள்ள ஆசிய/அண்டை நாடான பாகிஸ்தானுக்கு வாழ்த்துகள்!

02 அக்டோபர் 2014

ஜீவா - நேர்மையான படம்!

'ஜீவா' படத்தை இன்னைக்கு தான் பார்த்தேன். படம் சூப்பர். இத்தனை வருடங்களாக இந்திய கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் பார்பனியத்தை தோலுரித்து காட்டிருக்கும் இயக்குனர் சுசீந்திரன் மிகச்சிறந்த கதாசிரியர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கின்றார். காதலும் - நட்பும் - கிரிக்கெட்டும் - கூடவே ஆழமான கருத்தையும் கதையோடு இணைத்திருக்கும் விதம் அருமை. வாய்ப்பு கிடைக்காமலேயே தோற்று போவது இந்தியாவில் மட்டும் தான்! என்பதை க்ளைமேக்ஸ் வசனத்தில் பஞ்ச் வைத்திருக்கின்றார். படத்தில் தமிழ்நாட்டு கிரிக்கெட் கிளப்பின் தலைவராக வரும் பார்த்தசாரதியை பார்க்கும் போது இந்தியா சிமெண்ட் சீனிவாசன் மட்டும் தான் நினைவுக்கு வருகின்றார். மேலும் பார்த்தசாரதி & சகாக்கள் அனைவரும் நெற்றியில் நாமத்தோடு காட்சிப்படுத்தப்பட்டு இருப்பதும், ’உங்க ஆளுக’ என பார்பனரை குறிவைத்து சொல்லும் வசனங்களிலும், ஸ்ரீராம்-சேஷபாலன் என பல கிரிக்கெட் வீரர்களின் பெயர்களிலும் சில விசயத்தை நமக்கு புரிய வைத்திருக்கின்றார் சுசீந்திரன். இந்த படத்திற்கு பிறகு ஐ.பி.எல் மீதும், ஐ.பி.எல்.லுக்கு முன்னோடியான ஐ.சி.எல்.லை உருவாக்கிய கபில்தேவ் மீதும் ஒருபடி மரியாதை என்னுள் கூடி இருகின்றது. குறிப்பாக, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் பற்றியும், இந்திய கிரிகெட் அணி தேர்வாளர்களின் பார்பன வெறி பற்றியும் உண்மையை மிக தைரியமாக சொல்லியுள்ள ஒரு தரமான படம் இந்த ’ஜீவா’! கண்டிப்பா பாருங்க; உங்க மனசையும் தொடும்.

- இரா.ச.இமலாதித்தன்

27 பிப்ரவரி 2014

இந்திய கிரிக்கெட் அணி பலமா? பலவீனமா?

கோலி, ரஹானே அபாரம்: வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா.
- தி ஹிந்து

வின்னர் விராத்: இந்தியாவிடம் வீழ்ந்தது வங்கதேசம்.
- தினமலர்

வங்காளதேசத்தை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது இந்தியா விராட் கோலி அபார சதம்.
-தினத்தந்தி

வங்கதேசத்துக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றி தேடித்தந்தார் கோஹ்லி.
- தினகரன்

இன்னும் எத்தனை நாளுக்குத்தான் ஃபேட்ஸ்மேன்களை மட்டுமே நம்பி இருக்க போகிறது இந்திய கிரிக்கெட் அணி? சச்சின், கங்குலி, சேவாக், தோனி, கம்பீர் யென்ற வரிசையில் இப்போது கோஹ்லியை பிடிச்சிக்கிட்டு தொங்குறதுக்கு வெட்கமாவே இருக்காதா? உருப்படியான ஒரு பவுலரை உருவாக்க வக்கிலாமல் போய்விட்டதா இங்கே? நேற்றைய வங்கதேசதுக்கு எதிரான போட்டியில், வருண் ஆரோன், முகமது சமி, புவனேஷ்வர் குமார் உள்ளிட்ட வேக பந்துவீச்சாளர்களின் செயல்பாடு படுமோசம். இந்தமாதிரியான ஒன்றுக்கும் உதவாத பந்துவீச்சை கொண்ட அணியை வைத்துக்கொண்டு இந்திய அளவிலான ரஞ்சி ட்ராபியை கூட வாங்க முடியாது என்ற நிலையில் இண்டர்நேசனல் போட்டிகளில் பங்கேற்று என்ன ஜொலிக்க போகிறார்கள்? இப்போது நடந்து கொண்டிருக்கும் ஆசிய கோப்பையையும் இந்தியா கை நழுவ விட்டால், அதற்கு ஃபேஸ் பவுலிங் மற்றும் மிடில் ஆர்டர் பேட்டிங் மட்டுமே காரணமாக இருக்கக்கூடும் என்பது என் அனுமானம். மேலும், முக்கியமாக இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் டன்கன் ஃபெளக்சர்ன்னு ஒருத்தர் இருக்காரே, அவர் என்ன பண்றாருன்னு எப்போது பிசிசிஐ கேட்குதோ? அதுவரையிலும் இந்திய கிரிக்கெட் அணி சரிவை நோக்கியே செல்லும் என்பதே எதார்த்தம்.

- இரா.ச.இமலாதித்தன்