பாகிஸ்தான் வெல்லட்டும்!

பாகிஸ்தான் அணியை இந்தியாவில் விளையாட அனுமதிக்காமல் இருப்பதில் தான் தேசபக்தி இருக்கிறதா என்ன? பிசிசிஐ என்ற தன்னாட்சி நிறுவனம் இந்தியாவில் நடத்தும் உலகளாவிய போட்டியில் பிசிபி என்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் விளையாடுவதில் என்ன தவறு? ரவிசங்கர் குருஜியின் விழாவிற்காக இராணுவ வீரர்களை பணியாட்களாக ஈடுபடுத்தும் போதே உங்களது தேசப்பற்று பல்லிளிக்க வில்லையா?

நாங்கள் கடவுள் நம்பிக்கையாளர்கள் தான். இந்த மண்ணையும், கல்லையும், மலையையும், மரங்களையும், நதியையும், கடலையும் கடவுளாக வணங்கும் நாங்கள் தீவிர கடவுள் நம்பிக்கையாளர்கள் தான். இந்த தாய்மண்ணையே தன்னுயிர் போல நேசிக்கும் உண்மையான தேசபக்தி எங்களுக்கு உண்டு. ஆனால், எங்கள் தாய்மண்ணின் வளத்தையும், எங்கள் வரிபணத்தையும், அதானிகளும் - அம்பானிகளும் - மல்லையாக்களும் சுரண்டும் போது உங்களுக்கு வராத தேசபக்தி, இந்த கிரிக்கெட்டில் தான் வருகிறதா?
சென்றமுறையே டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியிடம் வெற்றி பெற்றிருக்க வேண்டிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இம்முறை உலக கோப்பையை இந்தியாவில் வெல்லட்டும்!

சோ கால்டு ஹிந்தியனாக என் வாழ்த்துகள்!

- இரா.ச. இமலாதித்தன்

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment