ஓ.பி.எஸ் எனும் விசுவாசி!கடலூர் நிவாரண பணிகளின் போது எடுக்கப்பட்ட இந்த ஒற்றைப்படம் போதும் ஓ.பி.எஸ். என்ற பச்சைத்தமிழனின் எளிமையை.

அனைத்து தரப்பட்ட மக்களாலும் அறியப்பட்ட, ஊழல் கறை படியாத ஓ.பி.எஸ் என்ற தமிழர் முதலமைச்சராக ஆவதை வரவேற்க காத்திருக்கிறது இந்த ஒட்டுமொத்த தமிழ்நாடும். தமிழகத்தில் எந்த தொகுதியில் சுயேட்சையாக நின்றாலும் கூட, மாபெரும் வெற்றி பெறும் வல்லமை அவருக்குண்டு.
வருங்கால தமிழக முதலமைச்சர் ஓ.பி.எஸ்க்கு சக தமிழ் வாக்காளனாக வாழ்த்துகள்!

ஓ.பி.எஸ் மீது என்ன தான் மாற்று கருத்து இருந்தாலும், அதிமுகவில் ஜெயலலிதாவிற்கு அடுத்தது அவர்தான் என்பதில் துளி கூட சந்தேகமில்லை. ஓ.பி.எஸ் ஒருவர் மட்டும் தான் இருமுறை தமிழக முதலமைச்சராக இருந்த, படித்த பட்டதாரி தமிழர் என்பதும் யாரும் மறுக்க முடியாத சமகால அரசியல் வரலாறு.

Time to Lead!

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment