தனிப்பெரும் தமிழருக்கு வீரவணக்கம்!

'தனித் தமிழர் சேனை'யின் நிறுவனத்தலைவரும், தமிழ்தேசிய சிந்தனையாளரும், ஐயா அரப்பா தமிழன் அவர்களின் உடன்பிறந்தவரும், 'சுயமரியாதைச் சுடரொளி' சிவகங்கை இராமசந்திரன் சேர்வை அவர்களின் பெயரனுமான ஐயா நகைமுகன் அவர்களின் இழப்பானது அகமுடையார் சமுதாயம் மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழ் இனக்குழுக்கே மிகப்பெரிய பின்னடைவு.

'தமிழக தலைமை அகமுடையார் சங்கம்' ஒருங்கிணைத்த அனைத்து பொது மேடைகளில் அவர் உடல்நிலையை கூட கவனத்தில் கொள்ளாமல் உணர்ச்சிமிகு பேச்சுகளால் அலங்கரித்தார். அவரது பேச்சை கேட்பதற்காகவே பல மணிநேரம் காத்திருந்திருக்கிறோம் என்பதே பெருமையான விசயம். அவரது கண்ணியமும், சொல்வன்மையும், அறிவார்ந்த சிந்தனைகளும், அடுத்தக்கட்ட இளம்தலைமுறையினருக்கு கண்டிப்பாக தேவையாக இருந்தது.

85 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சையில் ஒருங்கிணைத்த அகமுடையார் மாநாட்டுக்கு பலவித எதிர்ப்பு வந்து, மாநாட்டு பந்தலுக்கு அனுமதிக்காத காவல்துறையின் அடக்குமுறையை தனி ஒருவனாக நின்று அனுமதி பெற்றுத்தந்த அப்படிப்பட்ட செயல்தலைவரை, இன்று இழந்து நிற்கிறோம்.
திருவண்ணாமலை மாநாடு முடிந்த பின்னால், மாநாட்டு பந்தலுக்கு அருகேயுள்ள பிரதான சாலையோரம் ஐயா அரப்பா அவர்கள் என்னை அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அரைமணி நேரத்திற்கும் மேலாக அன்றிரவு அவரோடு உரையாடிய நிகழ்வை என்றைக்கும் மறக்கவே முடியாது.

அன்னாரது இறுதி நிகழ்வு நாளை 15.03.2016 செவ்வாய் திருப்பத்தூர் தெக்கூரில் நடைபெறும்.

தனிப்பெரும் தமிழருக்கு வீரவணக்கம்

- இரா.ச. இமலாதித்தன்

Comments

Popular posts from this blog

சமுதாய வளர்ச்சியில் பெண்கல்வி

கிருஷ்ணசாமி சொல்வது போல சண்டியரும், கொம்பனும் தேவர் சாதியின் அடையாளமா?

நான் முதலில் அகமுடையார்; அதன்பிறகு தேவர்!