விஜய் மல்லையாவும் தேசபக்தர் தான்!விஜய் மல்லையா கூட தீவிரமான தேசப்பக்தியும் - ஆன்மீகப்பற்றும் உடையவர் தான். ’மேக் இன் ஹிந்தியா’ என்ற திட்டத்தின் முன்னோடியாக, உலக நாடுகளுக்கெல்லாம் தனது ’கிங்பிஷர்’ மதுபானத்தை ஏற்றுமதி செய்த பெருமைக்குரியவர். எனவே, அவருக்கு கொடுத்த கடனை ஸ்டேட் பேங்க் தள்ளுபடி செய்து, மேலும் சிலபல கோடிகளை நன்கொடையாகவும் வழங்க முன்வர வேண்டுமென்பது, அனைத்து தேசப்பக்தர்களின் விருப்பமாக உள்ளது.விஜய் மல்லையா மட்டும் தான், வங்கியில் பல்லாயிரம் கோடி ரூபாய்களை கடனாக வாங்கிவிட்டு, பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றிய திருடன் என்பது போல பலர் கோபத்தோடு பேசுகிறார்கள்.

உண்மையில் கோபப்பட வேண்டியது, விஜய் மல்லையாவிடம் வாங்கி குடிக்கும் ஆளும் - ஆண்ட ஹிந்திய சர்க்காரையும், இத்தனை கோடிகளை கடன் கொடுக்க ஒத்துழைப்பு கொடுத்த வங்கியையும் தான்.

கல்விக்கும், விவசாயத்திற்கும் சில லட்சங்களை கடனாக தரவே, அறவே மறுக்கும் வங்கிகளையும் அதனை கண்டுகொள்ளாமல் அதற்கான விதிமுறைகளையும் தளர்த்தாமல் வேடிக்கை பார்க்கும் அரசாங்கங்களுக்கும், விஜய் மல்லையா தான் சரியான செருப்படி!

நீ கலக்கு சித்தப்பு...

- இரா.ச.இமலாதித்தன்

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment