'சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்த அகமுடையார்!'


முக்குலத்தோர் என்ற பெயரில் நடத்தப்படும் எந்த போராட்டத்தாலும் வெற்றி கிடைத்ததில்லை என்பதே கடந்தகால வரலாறு. இந்த மாதிரியான போரட்டங்களுக்கு பிறகு, புதுப்புது அமைப்புகளும், புதுப்புது தலைவர்களும் தான் உருவெடுப்பார்கள். அதுவும் இப்போதைய சூழல் என்பது தேர்தல் நேரமென்பதால், இந்த மாதிரியான போரட்டங்களால் சிலர் அதை தங்களுக்கு சாதகமாக்கி கொள்வார்கள். ஏதாவதொரு திராவிட கட்சிகளிடம் கூடிய கூட்டத்தை கணக்கு காட்டி, முக்குலத்தோர் இளைஞர்களெல்லாம் எங்கள் பக்கம். அதனால் இம்முறை உங்களுக்காக தேர்தல் பணியாற்றுகிறோம் என்று கூறி சாதியை ஓட்டு என்ற பெயரில் அடகு வைக்க கூடும்.

மாமன்னர் மருதுபாண்டியர்கள் பிறப்பெடுத்த நரிக்குடி - முக்குளத்தில் மணிமண்டபம் கட்ட அகமுடையார் அமைப்புகள் மட்டும் போராட்டம் செய்வதுதான் சரியான நடைமுறை. மாறாக, முக்குலத்தோர் அமைப்புகளை வைத்து போராட்டம் செய்வதால் எந்த பயனும் கிடைக்க போவதில்லை.
ஏனெனில், இதே முக்குலத்தோர் அமைப்புகள் தான், சிவகங்கை சமஸ்தானத்தில் ஆட்சியாளர்கள் பட்டியலுள்ள கல்வெட்டில் மாமன்னர் மருதுபாண்டியர் பெயர்களை இடம்பெற செய்யாமல் விட்ட போதும், மாமன்னர் மருதுபாண்டியர்களின் வரலாற்றை திட்டமிட்டு அழித்தொழிக்கும் செயலுக்கு மறைமுகமாக ஆதரவும் தந்து கொண்டிருப்பவர்கள்.

நரிக்குடி பிரச்சனையை முதலில் அங்குள்ள அகமுடையார்களோடு கலந்து பேசி சரி செய்து, மணிமண்டபம் பற்றிய கோரிக்கையை அரசுக்கு நேரடி கவனத்திற்கு கொண்டு செல்லாமல், செய்யப்படுகின்ற இந்த மாதிரியான போராட்டங்களால் எந்த பயனுமில்லை என்று நிச்சயமொரு நாள் புரிந்து கொள்ளப்படும் அனைவராலும்.

- இரா.ச. இமலாதித்தன்

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment