17 மார்ச் 2016

இந்த வாரம்!

-01-

இந்த பக்கம், ஸ்டார் ஸ்போர்ட்ஸ்ல ஆப்கானிஸ்தான் அணி தென்னாப்ரிக்காவுக்கு எதிராக 5 ஓவருக்கு 60 ரன் அடிக்கிறாங்க. அடிச்ச ஆளுக அவுட் ரெண்டு விக்கெட் விழுந்துடுச்சு. அந்த பக்கம், ஸ்டார் விஜய்ல 'இளையராஜா 1000'க்காக ஜானகி அம்மா இல்லாத மேடைகளில் அவரது பாடலை யாராரோ பாடிக்கொண்டிருக்கிறார்கள்.

-02-

முதலமைச்சராக இருக்கும் ஜெயலலிதா, 'தமிழக தலைமை செயலகம்' போனாலே ப்ளாஷ் நியூஸ்ல போடுவாங்க. அவரது வழித்தடத்தை பின்பற்றும் ஓ.பி.எஸ், 'அதிமுக தலைமை அலுவலகம்' போனதற்கும் கூட ப்ளாஷ் நியூஸ்ல போட்டுட்டாய்ங்க.
ஊஊஊ ஊடகம்!

-03-

சென்ற வாரங்களில் ட்விட்டர் ட்ரென்டிங்கில் முதலிடத்திலேயே இருந்த ஓ.பி.எஸ் என்ற தனிமனிதர் அல்லாது அவர் சார்ந்த சமூகம் மீதான பயத்தால் தான் போயஸ் கார்டனுக்கு அவரை ஜெயலலிதா அழைத்து சமாதானப்படுத்தி இருக்க வேண்டுமென தோன்றுகிறது. ஏற்கனவே உளவுத்துறை எச்சரித்து இருக்கும் வேளையில் தனிக்கட்சி போல ஓ.பி.எஸ் செயல் பட ஆரம்பித்தால் மேலும் தமக்கு செல்வாக்கு குறையும் என்பதால் தான் நேரடியாக சந்தித்து பேசிருக்கிறார் போல. அநேகமாக தேர்தல் முடிந்ததும், ஓ.பி.எஸ்.க்கும் அதிமுகவுக்குமான தொடர்பு முடிவடையடையலாம்.


-04-

"அட்டவணை சாதிக்கு தான் சட்டமென்றால்,
வீசும் காற்றில் விசம் பரவட்டும்!"

-05-

'ஐயா' என்பதை 'அய்யா' என தொடர்ச்சியாக பயன்படுத்தும் பா.ம.க.வினரை, எந்த தமிழ்தேசியவாதிகளும் கேள்வி கேட்பதே இல்லை என்ற எதார்த்தத்தை புரிந்து கொண்டாலே போதும், இன்றைய தமிழ் தேசியத்தின் நிலைப்பாட்டை புரிந்து கொள்ளலாம்.

-06-

சென்ற வருடம் எங்களது டெல்டா பகுதியான காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த வினோதினியை ஆசிட் வீச்சுக்கு ஆளாக்கியதும் கூட இந்த காதல் தான் என்பதையும் மறந்துவிட முடியாது.

-07-

தமிழ் சாதி உறவுகளான நான்கு பறையர்களை குறிஞ்சாக்குளத்தில் காந்தாரி அம்மன் கோவில் கட்டும் பிரச்சனையில் தெலுங்கு நாயக்கர்கள் வெட்டி கொன்றதை பற்றி இதுவரைக்கும் வாயையே திறக்காத திருமாவளவன், இப்போது காதலினால் ஏற்பட்ட இரு குடும்பத்தினரின் தனிப்பட்ட பிரச்சனையில் உயிரிழந்த ஒருவருக்காக வைகோவுடன் சேர்ந்து கொண்டு பல முறை கண்டனக்குரல் எழுப்புகிறார் என்பதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது.

-08-



- இரா.ச. இமலாதித்தன்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக