அதிமுக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அதிமுக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

28 நவம்பர் 2017

செல்வியா ஜெயலலிதா?!

'செல்வி' ஜெ.ஜெயலலிதா ஒரு முறை சட்டமன்றத்திலேயே கூறினார்; என்னை 'அம்மா' என்று அழைப்பது தான் பிடித்திருக்கிறதென...



10 ஏப்ரல் 2017

தேர்தல் என்னும் ஏமாற்றுவேலை!



இராமானுஜமும், சாணக்கியனும் கூட தினகரனிடம் தோற்றுவிடுவார்கள் போல! (89,65,80,000ரூபாய் ÷ 4000ரூபாய் = 2,24,145வோட்டுகள்.)  கண்டிப்பா 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம்.

தேர்தல் விதிமுறை மீறப்பட்டதாக சொல்லி, தேர்தலை ரத்து செய்வது தேவையேயில்லை. யார் அந்த விதிமுறைகளை மீறினார்களோ, அது சம்பந்தமான ஆதாரங்கள் இருந்தால் அதை வைத்தே அவர்களை வேட்பாளர்கள் போட்டியிலிருந்து தகுதிநீக்கம் செய்துவிட்டு மீதமுள்ளவர்களை களத்தில் வைத்து தேர்தலை நடத்தி விடலாம். யாரோ ஒரு வேட்பாளர் வீதிமீறி இருப்பதால், ஒட்டுமொத்த தேர்தலை நிறுத்துவது வீண்வேலை. நேர்மையான முறையில் களம்காணும் அத்தொகுதியின் மற்ற வேட்பாளர்கள் மட்டும் ஏமாளிகளா என்ன? இப்படி தேர்தலை ரத்து செய்வதனால் பண விரயம்; காவலர்கள் / அலுவர்களின் நேர விரயம்;

இப்படியாக எல்லா தேர்தலையும் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, ஆர்.கே.நகர் என ஒத்திவைத்தே சென்றால் யாருக்கு லாபம்? மீண்டுமொருமுறை இதைவிட அதிகமாக பணப்பட்டுவாடா செய்வார்கள். அவர்களுக்கு பயமே வராது. ”பணத்தை அள்ளி வீசுவோம், நிச்சயமாக தேர்தலில் வெற்றி கிடைத்து விடும். இல்லையென்றால் தேர்தலே தள்ளி போய்விடும்!” என ஒவ்வொரு வேட்பாளரும் நினைத்து விட்டார்கள். தேர்தல் முறையிலான மக்களாட்சி என்பது அதன் மரியாதையையே இழந்து விடுமே?!

தினகரன் தரப்பு தான் 89 கோடி ரூபாய் அளவுக்கு பணப்பட்டுவாடா கொடுத்தது என்பதற்கான ஆதாரம் தேர்தல் ஆணையத்திடம் இருக்குமேயானால், அதை வைத்தே தினகரனை இந்த தேர்தல் போட்டியிலிருந்து தகுதிநீக்கம் செய்யலாமே? ஏன் அதை தேர்தல் ஆணையம் செய்யவில்லை? அதற்கு தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரமில்லையெனில் அதை எதிர்க்காமல் இருப்பது ஏன்? தேர்தல் ஆணையம், சி.பி.ஐ. போன்றவை தன்னாட்சி கொண்ட தனி அதிகாரமுள்ள ஆளும் அரசாங்கத்தின் சார்பற்ற அரசு அமைப்புகள் என்ற மாயையும் இதுபோன்ற நிகழ்வுகளால் சமீப காலமாக சாமானியர்களின் பொதுபுத்தியிலிருந்து சுக்குநூறாய் உடைத்தெறியப்படுகிறது.

14 மார்ச் 2017

கமலின் அரசியல்!


தமிழ்நாட்டில் அரசியல் செய்ய ஜெயலலிதாவிடம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு விசயம் இருக்கிறது. அது, தனக்கு இணையான எதிரிகளை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொண்டு அவர்களை மட்டுமே எதிர்த்து அரசியல் செய்வது; மற்ற யாரும், ஜெயலலிதாவை நேரடியாக தாக்கி பேசியோ, அறிக்கை விட்டோ விமர்சனம் செய்தால் கூட அவர்களுக்கெல்லாம் பதில் சொல்லாமல் கடந்து விடுவது; வேண்டுமென்றால், தன் கட்சியிலுள்ள இரண்டாம் கட்ட தலைவர்களை வைத்து, பதிலடி கொடுப்பது; அந்த முறையில், கடைசி வரை ஜெயலலிதா எதிர்த்தது கருணாநிதியை மட்டும் தான்.

இதையெல்லாம் கவனிக்க தெரியாமல், ஜெயலலிதாவிற்கு மாற்றாக முதலமைச்சர் பதவியை வகிக்கும் எடப்பாடி பழனிச்சாமியோ, கமல்ஹாசனுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்கின்றார். நடப்பதை பார்க்கும் போது, சிவாஜி படத்தில் வரும் "சும்மா இருந்தவனை சூப்பர் ஸ்டார் ஆக்கி விட்டுட்டோம்" என்ற வசனம் தான் நினைவுக்கு வருகிறது. என் கணிப்பு சரியாக இருக்குமெனில், ஒருவேளை கமல்ஹாசன் நேரடி அரசியலுக்கு வந்தால், பல பேரின் அரசியல் கனவு சுக்குநூறாகும் அளவுக்கு, தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக கமல் இருப்பார்.

அன்று, ஜெயலலிதாவிற்காக தான் பேசாமல் இருந்தாராயென தெரியவில்லை; ஆனால், இன்று பேசுவதற்கு காரணம், கெளதமி தான்; வாழ்த்துகள்!

16 ஏப்ரல் 2016

யாருக்காக இந்த அரசு?

கடந்த ஒரு வார காலமாக தொடர்ச்சியாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு அரசாங்க பணிகளை புறக்கணித்து வரும், மிகப்பெரிய பொறுப்புகளிலுள்ள பதவியில் இருக்கும் அரசு பணியாளர்களை பற்றி எந்த ஊடகமும் வாயே திறக்கவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் அனைத்து அரசு பணிகளும் முற்றிலுமாக முடங்கி கிடக்கிறது. ஆனாலும் அதை பற்றியெல்லாம் 'என் தலைமையிலான ஆட்சி' என்று நொடிக்கொரு முறை தம்பட்டம் அடித்து கொள்ளும் ஜெயலலிதாவுக்கும் கவலையில்லை.

அந்த அரசு அலுவலர்களின் நியாயமான கோரிக்கைகளையாவது நிறைவேற்றி தரலாம். இல்லையென்றால் போராட்டக்காரர்களின் பிரதிநிதிகளை அழைத்து பேசி இந்த வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட சொல்லலாம். எதுவுமே செய்யாமல் இருப்பதற்கு, ஒரு அரசு தேவையா?!
மக்களுக்காகவே அரசு. மக்களுக்கு சேவை செய்யவே, அரசாங்க அலுவலர்களுக்கு சம்பளம். மக்களின் தேவையறிந்து மக்களுக்கு பணியாற்றவே, அரசியல்வாதிகளுக்கு அரசாங்க பதவிகளை மக்கள் வழங்கியுள்ளனர். "மக்களுக்காகவே நான், எனக்கென்று யாருமில்லை" என்ற சொன்னதெல்லாம், வெறும் வார்த்தைகளாகவே இருக்கிறது என்பதை இனியாவது ஜெயலலிதா புரிந்து கொள்ளட்டும்.

- இரா.ச.இமலாதித்தன்

10 ஏப்ரல் 2016

அரசியலில் புறக்கணிக்கப்படும் அகமுடையார் சமூகம்!

கள்ளர் கட்சியான அதிமுகவில் அகமுடையாருக்கான அங்கீகாரமில்லை. முக்குலத்தோர் என்ற போர்வையில், பெரும்பான்மை சமூகமான அகமுடையார்களை புறக்கணிக்கும் அதிமுகவின் தலைமை, இனி அகமுடையார்களின் வாக்குகளும் தேவையில்லையென அறிவிக்க தயாரா?




அகமுடையார் வாக்கு அந்நியருக்கும் இல்லை! அதிமுகவுக்கும் இல்லை!


தமிழகத்திலேயே அதிக கிளைகளை கொண்ட அமைப்பாக விளங்கிய "தேவர் பேரவை"யின் நிறுவனர், மரு. வி.இராமகிருஷ்ணதேவர் பிறப்பெடுத்த அந்த அகமுடையார் இனத்தை தேர்தலில் ஒதுக்கியதற்கு வேற யார் காரணமாக இருக்க முடியும்? சசிகலாவை தவிர!

11 மார்ச் 2016

நாம் தமிழர் கட்சிக்கும் வாழ்த்துகள்!

விஜயகாந்த் கிட்ட, அதிமுக என்ன மாதிரியான 'பேக்கரி டீலிங்' செய்ததென தெரியவில்லை. இது இப்படியே போனால், நிச்சயமாக அடுத்த தேர்தலில் 'முரசு' சின்னத்தின் நிலையும் 'பம்பரம்' போல ஆகிவிடும்.
விஜயகாந்த் மீதான விமர்சனத்தை அவர் இந்த முடிவால் தகர்த்தெறிந்திருக்கலாம். ஆனால் நட்டம் தேமுதிகவுக்கு தான் என்பதும், தனித்து களம் காண்பதென்பதால் நேரடியாகவே அதிமுகவுக்கு மட்டும் தான் மிகப்பெரிய லாபம் என்பதையும் விஜயகாந்தை இயக்கும் பிரேமலதா தேர்தல் முடிவுக்கு பின் புரிந்து கொள்வார்.

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதை விட, இப்போதே நமஸ்காரம் செய்து கொள்ளலாம் சூரியனை! என்பதுதான் தேமுதிகவை சார்ந்த பல மாவட்ட செயலாளர்களின் ஏக்கமாக இருக்கிறது என்பதை பிரேமலதா புரிந்திருந்தால் இதுபோன்ற முடிவை விஜயகாந்த் அறிவித்திருக்க மாட்டார்.
நான்கில் இரண்டு திராவிட கட்சிகள் இந்த தேர்தலோடு ஓரம்கட்டப்படலாம் என்பது மட்டும் தான் ஒரே ஆறுதல். மேலும், இதனால் மறைமுக லாபம் அடைய போகும் நாம் தமிழர் கட்சிக்கும் வாழ்த்துகள்!

- இரா.ச. இமலாதித்தன்

03 மார்ச் 2016

ஓ.பி.எஸ் எனும் விசுவாசி!



கடலூர் நிவாரண பணிகளின் போது எடுக்கப்பட்ட இந்த ஒற்றைப்படம் போதும் ஓ.பி.எஸ். என்ற பச்சைத்தமிழனின் எளிமையை.

அனைத்து தரப்பட்ட மக்களாலும் அறியப்பட்ட, ஊழல் கறை படியாத ஓ.பி.எஸ் என்ற தமிழர் முதலமைச்சராக ஆவதை வரவேற்க காத்திருக்கிறது இந்த ஒட்டுமொத்த தமிழ்நாடும். தமிழகத்தில் எந்த தொகுதியில் சுயேட்சையாக நின்றாலும் கூட, மாபெரும் வெற்றி பெறும் வல்லமை அவருக்குண்டு.
வருங்கால தமிழக முதலமைச்சர் ஓ.பி.எஸ்க்கு சக தமிழ் வாக்காளனாக வாழ்த்துகள்!

ஓ.பி.எஸ் மீது என்ன தான் மாற்று கருத்து இருந்தாலும், அதிமுகவில் ஜெயலலிதாவிற்கு அடுத்தது அவர்தான் என்பதில் துளி கூட சந்தேகமில்லை. ஓ.பி.எஸ் ஒருவர் மட்டும் தான் இருமுறை தமிழக முதலமைச்சராக இருந்த, படித்த பட்டதாரி தமிழர் என்பதும் யாரும் மறுக்க முடியாத சமகால அரசியல் வரலாறு.

Time to Lead!

27 பிப்ரவரி 2016

தருமபுரி பஸ் எரிப்பு - வாக்குமூலம்!


பஸ் எரிப்பதெல்லாம் பெருமைன்னு நினைச்சு உண்மை தொண்டர்கள் ப்ளக்ஸ் அடிக்கிறாங்க. விசுவாசம் என்றாலே உண்மையாக இருப்பது தானே? அதென்ன அதிமுகவில் மட்டும் உண்மை தொண்டன்; உண்மை விசுவாசிகள்; என தனித்தனியாக போட்டுக்கொள்கிறார்கள்? ஒருவேளை மாமன் மச்சான் அண்ணன் தம்பி என யாருக்காகவாவது பொய்யான தொண்டனாகவும் கட்சியில் இருக்கிறார்களோ?!

அகமுடையாரின் கலகக்குரல்!



கலகக்குரல் தான் என்றைக்குமே அகமுடையாரின் தனித்தன்மை. இனியாவது, அரசியலில் அகமுடையாருக்கென புது விடியல் பிறக்கட்டும்!

25 பிப்ரவரி 2016

அதிமுகவில் இருக்கும் அகமுடையாரே!


கள்ளரான சசிகலா, அதிமுகவின் தலைமை பொறுப்பில் இருக்கும் ஜெயலலிதாவோடு நெருக்கமாக இருக்கும் வரை, அதிமுகவில் ஓர் அகமுடையார் கூட தலையெடுக்க முடியாது. என்ன முக்கினாலும் ஒரு மாவட்ட செயலாளராக கூட ஓர் அகமுடையார் வர முடியாது. ஏனெனில் அகமுடையார் என்ற சாதியே ஜெயலலிதாவுக்கு தெரியுமா என தெரியாது. கள்ளர் - மறவரின் உட்பிரிவு தான் அகமுடையார் என்று கூட யாரவது சொல்லிருக்க கூடும்.

முக்குலத்தோரில் பெரும் எண்ணிக்கையில் இருக்கும், அதிமுக ஆதரவு அகமுடையார்களே, உங்களால் ஒரு மாவட்ட செயலாளராக கூட வரமுடியவில்லையே! அது ஏன் என சிந்தித்தது உண்டா? ஆனால் முக்குலத்தோரில் இத்தனை பேர் கள்ளரும் - மறவரும் மாவட்ட செயலாளராக இருந்தும் கூட, அந்த தகுதி ஏன் அகமுடையாருக்கு இல்லையென யோசித்தது உண்டா?

18 பிப்ரவரி 2016

பி.வி.ரமணாவை விமர்சிக்கும் உத்தமன் யார்?

அமைச்சர் பி.வி.ரமணாவும் அவரது மனைவியும் நெருக்கமாக இருக்கும் படங்களை பகிர்ந்து ஆளாளுக்கு ஒவ்வொரு கருத்தை தரம் தாழ்ந்து பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். அமைச்சராக இருக்க கூடியவரும் சக மனிதன் தானே? குடும்பம், இல்லற சுகம் எதுவுமற்றவர் தான் அமைச்சராக இருக்க வேண்டுமென்ற ஏதாவது நியதி, தமிழக அரசியலில் இருக்கிறதா? ஒருவேளை பி.வி.ரமணா யாரோவொரு பெண்ணோடு உல்லாசமாகவே இருந்து விட்டு போகட்டுமே. அதனால் மற்றவர்களுக்கு என்ன இழப்பு?

ஒரு பெண்ணின் சம்மதத்தோடு உடலறவு வைத்து கொள்வதே சட்டப்படி நியாயமென உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்திருக்கிறது. மேலும், விபச்சாரமே அரசாங்க ஒத்துழைப்போடு இந்நாட்டில் நடைபெற்று கொண்டிருக்கும் போது, ஒருவரின் தனிப்பட்ட அந்தரங்கத்தில் தலையிட யாருக்குமே உரிமை இல்லை. இன்னொருவனின் படுக்கையறையை எட்டிப்பார்த்து தான் சிலரின் ஒவ்வொரு இரவும் கழிகிறது போல.

காமம் என்பது உடலியல் சார்ந்த இச்சை. அது இல்லாத மனிதனே இல்லை. அதை கடக்க தெரிந்தவன் தான் ஞானியாகிறான்; அடக்க தெரியாதவன் சம்சாரி ஆகிறான். வாய்ப்பு கிடைக்காததால் யோக்கியனாக காலம் கடத்தும் சிலரின் விமர்சனங்களால், தனி மனிதனாக பி.வி.ரமணாவுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் மனரீதியான தாக்குதல் ஏற்படலாம். அதை தாங்கி கொள்வதற்கான வல்லமையை பி.வி.ரமணாவுக்கு இப்பிரபஞ்சம் வழங்கட்டும்.

- இரா.ச.இமலாதித்தன்

06 பிப்ரவரி 2016

ஸ்டிக்கர் கல்யாணம்!

ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணவே வக்கில்லாம இன்னொரு கட்சிக்காரன் கிட்ட போய், கண்ட இடத்துல ஸ்டிக்கர் ஒட்டிக்கிற அடிமைகளே உங்களுக்கெல்லாம் எதுக்கு கல்யாணம்? 'கல்யாணம் பண்ண கூட காசு பணம் இல்ல'ன்னு அந்த அடிமைகளுக்கு, அரசியலில் அடிமையாகி போன சிலர் சப்பைக்கட்டு கட்டலாம். அந்த 'சோ கால்டு' ஏழைகளுக்கு திருமணம் செய்ய ஒரு மஞ்சள் கயிறும், கோவில் வளாகமும் போதாதா? 'காசு பணம் இல்லங்கிறதுனால தான் கல்யாணம் பண்ணி வச்சவங்க, கண்ட இடத்துல ஸ்டிக்கர் ஒட்டினா கூட சகிச்சுக்கிட்டோம்' ன்னு சொல்லக்கூடும்.
என் கேள்வி இதுதான், கல்யாணத்துகு பிறகு குடும்பம் நடத்த காசும் பணமும் தேவைப்படுமே? அப்போ எதை சகித்து கொள்வீர்கள்? ஒருவேளை "எதை" வேண்டுமானாலும் சகித்து கொள்வீர்களா?

ஒரு பெண்ணை ஒருநாளில் தாலிக்கட்டிட்டு அந்த பெண்ணுக்கு புருசனாக மாறுவது பெருமை இல்லை. கல்யாணத்துக்கு பிறகும், அந்த பெண்ணை பொருளாதாரத்துக்காக வேறு யாரிடமும் கையேந்த வைக்காத ஆண்மை இருக்கணும். அதுக்கு வக்கற்றவர்கள், கல்யாணமே பண்ணிக்காம தனிக்கட்டையாவே வாழ்ந்துட்டு போய்டணும். த்தூ...





ஸ்டிக்கர் ஒட்டின அடிமைகளை விட, ஓசியில தாலிக்கு ஓடிப்போன இந்த அடிமைகளை தான் காரி துப்பணும்...

28 ஜனவரி 2016

பழ.கருப்பையா எனும் அரசியல்வாதி!

எம்.எல்.ஏ.வாக தோற்று விட்டேன்; துறைமுக மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். எதிர் கருத்து சொல்பவர்களுக்கு நாட்டில் பாதுகாப்பு இருக்க வேண்டும். எதிர்கருத்து சொல்பவர்களை ஆள் வைத்து அடிப்பதை ஏற்று கொள்ள முடியவில்லை. எதிர் கருத்துகளை ஏற்க முடியாத கட்சி, காலப்போக்கில் காணாமல் போகும்.

- பழ.கருப்பையா

பழ.கருப்பையாவின் தைரியத்திற்கு தலை வணங்குகிறேன். பத்திரிகையாளர் சங்கத்தில் அதிமுக அரசின் தவறையெல்லாம் கிழி கிழியென கிழித்து தொங்க போட்டு கொண்டிருக்கிறார். மது, இலவசம், ஊழல், ஜெயலலிதாவின் மறதி, சென்னை துறைமுக பள்ளிகூடத்து சேர்ந்த பல கோடி மதிப்புள்ள வளாகத்தை அபகரித்த அதிமுக நிர்வாகி, உட்கட்சி ஆட்களின் ஊழல்யென பல விசயங்களை மிகவும் வெளிப்படையாக உண்மையையெல்லாம் போட்டு உடைத்து கொண்டிருக்கிறார்.

கிரேட்!

எல்லா ஊடகங்களும் இன்றைக்கு விவாதப்பொருளாக பழ.கருப்பையாவை வைத்திருப்பதே அவருக்கு கிடைத்த வெற்றிதான்!

27 ஜனவரி 2016

அதிமுக முக்குலத்தோர் கட்சியாம்!



அப்பறம் ஏன் இன்னமும் ஒரு சீட்டுக்கும் ரெண்டு சீட்டுக்கும் அம்மா தாயேன்னு ஜெயலலிதா கிட்ட பிச்சை எடுக்குறீங்க? நேரா அதிமுகவில் இணைந்துவிட வேண்டியது தானே? தேவையில்லாமல் லெட்டர் பேடு அமைப்பு வச்சிக்கிட்டு நானும் தலைவனென பீற்றி என்ன ஆகிவிட போகிறது? அக்டோபர் மாதம் தவிர மற்ற நாட்களெல்லாம் நீண்ட உறக்கத்தில் தானே இருக்கிறீர்கள்? தேர்தல் நேரத்தில் மட்டும் 'வாழும் வேலுநாச்சியார்' என ஜெயலலிதாவுக்கு ஜால்ரா போஸ்டர் அடிச்சு அந்த வீரப்பேரரசி வேலுநாச்சியாரையே இழிவு படுத்துவீர்கள்.

முக்குலத்தோர் கட்சியென அதிமுகவில் இருக்கும் அகமுடையார்களே, முக்குலத்தோரில் எத்தனை அகமுடையாருக்கு எம்.எல்.ஏ. தொகுதிகளை ஜெயலலிதாவும் - சசிகலாவும் கொடுக்கிறார்களென கணக்கு பாருங்கள். அதன் பிறகு தெரியும். அதிமுக முக்குலத்தோர் கட்சியா? இல்லை, அகமுடையார் விரோத கட்சியா? என...

- இரா.ச. இமலாதித்தன்

21 ஜனவரி 2016

அதிமுகவை அகமுடையார்கள் ஆதரிக்கலாமா?

அகமுடையார்கள் ஏன் அதிமுகவை ஆதரிக்க கூடாது என்பதற்கான ஒரு சின்ன உதாரணத்தை இன்னும் கொஞ்ச நாளில் தெரிந்து கொள்ளலாம். இன்றைக்கு தானே, விருப்ப மனுவை வாங்கி தொடங்கி இருக்கிறார் ஜெயலலிதா. இதன் பின்னால், சசிகலாவின் சாதியான கள்ளர்களுக்கே அதிக பட்ச தொகுதிகள் வழங்கப்படும். ஆனால் கள்ளர்களுக்கு கொடுக்கப்பட்ட அந்த தொகுதிகளெல்லாம் முக்குலத்தோர் வேட்பாளர்கள் என ஊடகங்கள் மூலம் சொல்ல வைப்பார்கள். முக்குலத்தோரில் மூன்றில் இரண்டு பங்கு இருக்கும் அகமுடையாருக்கு, ஒருசில தொகுதிகள் சசிகலாவின் கருணையால் கிடைக்க கூடும். அகமுடையார் பெரும்பான்மையாக இருக்கும் தொகுதிகளிலும் கள்ளர்களும், மறவர்களும் வேட்பாளர் ஆவார்கள். இது தான் ஜெயலலிதாவின் திராவிட அரசியல். இதுதான் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் முக்குலத்து அரசியல்.

உதாரணமாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட அதிமுகவின் மாவட்ட செயலாளர் பட்டியலை கவனித்து பார்த்தால் ஒன்று புரியும்; சசிகலாவின் கருணையால் எத்தனை கள்ளர்கள் மா.செ. பதவியில் அமர வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதும் புரிய வரும். ஓர் அகமுடையாரை மாவட்ட செயலாளராக கூட ஆக்க மனமில்லாத சின்னம்மா சசிகலாவா, எம்.எல்.ஏ. ஆக்க போகிறார்? கள்ளர்கள் சிறுபான்மையாக இருக்கும் மாவட்டத்திலும் - அகமுடையார் பெரும்பான்மையாக இருக்கும் மாவட்டத்திலும் கூட, கள்ளரே மா.செ. ஆக நியமிக்கப்பட்டதன் உள்ளரசியல் புரிகிறதா? கள்ளருக்கும் - மறவருக்கும் பதவியை கொடுத்துவிட்டு, அகமுடையாருக்கு அல்வா கொடுத்து கொண்டிருக்கும் அதிமுகவை நிச்சயம் சொரணைவுள்ள அகமுடையார்கள் இந்த தேர்தலில் புறக்கணிப்பார்களென நம்புகிறேன். பார்க்கலாம்...

- இரா.ச.இமலாதித்தன்

12 ஜனவரி 2016

அகமுடையார் அரசியல்!

அகமுடையார் சாதியிலுள்ள வாக்காளர்களுக்கு தற்போதைய அரசியல் சூழலை ஆழமாக உணரும் பக்குவம் இருந்தால், நிச்சயமாக ஜெயலலிதாவுக்கு சொம்பு தூக்க மாட்டார்கள். அதிமுகவை வரும் தேர்தலில் புறக்கணிப்பார்கள்.

என் ஓட்டு, இந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு எதிராகவே இருக்கும். இந்த விசயத்தில் யாரை ஆதரிக்க வேண்டும் என்பதை விட, முதலில் யாரை புறக்கணிக்கணும் என்பதில் ஒரு தெளிவு இருக்கணும்.

அகமுடையார் ஓட்டு அந்நியருக்கும் இல்லை!
அகமுடையார் ஓட்டு அதிமுகவும் இல்லை!

#

முதலியார் - சேர்வை - தேவர் - உடையார் - பிள்ளை - வாணாதிராயர்- மணியக்காரர் - பல்லவராயர் - நாட்டார் - நாயக்கர் - அம்பலம் - தந்துடையார் - அதிகாரி - தேசிகர் உள்ளிட்ட பல பட்டங்களை கொண்ட "அகமுடையார்" தமிழ்க்குடியானது தமிழகமெங்கும் பூர்வகுடிகளாகவே வாழ்ந்து வருகின்றனர்.
ஒரே பட்டம் பல சாதிகளுக்கும் இருப்பதால் தான், இங்குள்ள பல சாதிகளுக்குள் நிறைய குழப்பம் ஏற்படுகிறது. ஆனால் சாதி சான்றிதழ் வாயிலாகவும், வரலாற்றின் வாயிலாகவும், பல பட்டங்களை கொண்ட "அகமுடையார்" சாதியானது, ஒரே மரபு வழி வந்தவர்களே என்பது நிரூபணம் செய்யப்பட்ட ஒன்று.
(பட்டம் : தேவர், பிரிவு : பதினெட்டு கோட்டைப்பற்று நாடு, சாதி : அகமுடையார்)
அகமுடையார்களாக ஒன்றிணைவோம்!
- இரா.ச.இமலாதித்தன்.

06 டிசம்பர் 2015

நான் நேரில் கண்ட சம்பவம்!



மிகப்பெரிய பதவியில் இருக்கும் அந்த அரசியல்வாதி, மழைவெள்ளத்தால் தேங்கிநின்ற தண்ணீரை வடியவைக்க நாற்பது அம்பது ஆட்களோடு வருகிறார். தன் சகாக்களின் வண்டியையெல்லாம் பக்கத்து தெருவில் வரிசையாக நிறுத்திவிட்டு கொஞ்சம் தூரம் நடக்கிறார். தூர்வாறும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அங்கே அருகில் வருகிறார். சட்டென தேங்கிருந்த நீரின் ஒருதுளி, அவரது சலவை செய்யப்பட்ட வெள்ளை சட்டையில் பட்டுவிடுகிறது. உடனே கோபம் கொப்பளித்து, தன் உதவியாட்களிடம் சொல்லி வாட்டர் பாட்டிலை கொண்டு வரச்சொல்லி, அந்த தண்ணீரையே தண்ணீரால் துடைக்கிறார். இதையெல்லாம் கூடியிருந்த இளைஞர் பட்டாளம் செல்போனில் போட்டோ பிடிக்கிறது. ஆனால், அவரின் எடுபிடிகளால் மிரட்டப்பட்டு எடுத்த போட்டோக்களையெல்லாம் டெலிட் செய்யப்படுகிறது. இதற்கிடையில், அவருக்கு அருகில் சென்ற அவருடைய கேமராமேன்கள் "அண்ணன்! இப்போ அந்த மம்வெட்டிய கையி் பிடிச்சு க்ளீன் பண்ணுங்க அண்ணன்..." ன்னு சொன்ன உடனேயே மூன்று போட்டோகிராஃபரின் கேமராக்களையும் பார்க்காமலேயே போட்டோவுக்கு வெகு இயல்பாக போஸ் கொடுத்து விட்டு, மடித்து கட்டிருந்த தன் கட்சிக்கரை போட்ட வெள்ளவேட்டியை இறக்கி விட்டு காரில் பறந்து விட்டார். காத்திருக்கிறோம் 2016 தேர்தலுக்காக! அவரை பதவியில் இருந்து பறக்க வைக்க...

- இரா.ச.இமலாதித்தன்.

03 டிசம்பர் 2015

சென்னை வெள்ளத்திற்கு பின்னால், மனிதமும் - வேசமும்!


மழை வெள்ளத்திற்காக மசூதிகள் இடம் கொடுத்து உதவுவதையும், மதம் பிடித்த சிலர் இசுலாமிய சார்பு துதி பாட ஆரம்பிக்கின்றனர். செய்த உதவியை சொல்லிக்காட்டி மனிதாபிமானத்தை மதமாக்கி அவமான படுத்தாதீர்கள்


நாட்டை ஆளும் முதல்வரின் வயது 67, பாட்டை ஆளும் இசைஞானியின் வயது 72!


வெள்ள நிவாரணத்திற்காக டிவிட்டர் மூலமாக ட்ரெண்ட் உருவாக்கி, நேரடியாக களத்திலும் உதவிகளை ஒருங்கிணைத்த, சித்தார்த் - RJ பாலாஜியை பார்க்கும்போது "ஆய்த எழுத்து" படம் தான், நினைவுக்கு வருகிறது! இனியாவது இளைஞர்கள் அரசியலை கைப்பற்ற வேண்டும்.


தன் உழைப்பில் சேர்த்த பணத்தை கொண்டு நிவாரணமாக அனுப்பிய பொருட்களிலெல்லாம், ஊர் பணத்தில் கொள்ளையடிப்பவர்களின் படத்தை ஒட்டி வினியோகம் செய்யும் இழிபிறவிகளை எதை கொண்டு அடிப்பது? எச்சில் இலைகளை பொறுக்கும் தெரு நாய்களே, இனியாவது திருந்துங்கள்



ராஜாதி ராஜ, ராஜ கம்பீர, ராஜ மார்த்தாண்ட, ராஜ குலோத்துங்க... த்தூ

(கன்னட + மராட்டிய) ரஜினி என்ற போலி தமிழனை விட, அல்லு அர்ஜுன் என்ற நிஜ தெலுங்கனுக்கு, தமிழனாக எம் நன்றி!

#

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு நாகையில் இருந்து கூட நூற்று கணக்கான பேரு போனாங்க. இது மாதிரி எல்லா மாவட்டத்திலிருந்தும் ஒன்றியம் வாரியாக தேர்தல் பணிக்கு ஆட்களை வர சொன்ன அதிமுகவின் ராஜ'தந்திரம்', இப்போதும் சென்னை மழைவெள்ள மீட்பு பணிக்கு பயன்பட்டிருந்தால் பெருமைப்படலாம். ஆனால்... இப்போதுதானே அது வெறும் தந்திரமென சாமானியனுக்கும் புரிகிறது.

#

நான் பிறந்த என் சாதியின் மக்கள்தொகையை மனதில் வைத்து ஆண்ட சாதி பெருமை பேசிய எந்த சாதித்தலைவனும் இந்த மழை வெள்ளத்திற்காக நேரடியாக களத்திற்கு வந்து நிவாரணம் செய்த மாதிரி தெரியவில்லை. வாழும் தேவர், வீர மருதுன்னு அடைமொழி வைத்துகொண்டால் மட்டும் போதாது. வீரத்தையும், விவேகத்தையும், கொடைத்தன்மையையும் இதுமாதிரியான சூழலில் வெளிக்காட்டணும்.

#

வலது கை கொடுக்கிறதை, இடது கைக்கு கூட தெரியக்கூடாது!ன்னு சொல்லுவாங்க. ஆனால் இங்கே உதவியை கூட ஓட்டுக்களாக மாற்ற நினைக்கும் ஈனத்தனமான புத்தியை என்ன சொல்லி திட்டுவது? ஜெயலலிதா படம் போட்ட பை பிரிண்ட் அடிக்க நேரமானதால், நூற்று கணக்கான சாப்பாட்டு பொட்டலங்கள் வீணாகி போனதாகவும் செய்தி வருகிறது. ஜெயலலிதா படம் போடலைன்னா, தெய்வ குத்தமாவா ஆகிடும்? காங்கிரஸ் போலவே திராவிட அடிமைகள் நம்பியிருக்கும் இந்த இரண்டு கட்சிகளின் ஆட்சியும் தமிழ்நாட்டில் ஒழியணும்.

#

பெருமழை/புயல் உண்டுயென சொல்லப்பட்டிருந்த பஞ்சாங்கத்தை பழித்த பஹூத்தறிவு கி.வீரமணி எங்க இருக்காப்ள?

#

பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல், பாதியிலேயே பேட்டியை முடித்து கொண்டு அமைச்சர்கள் - அரசு அலுவலர்கள் ஓட்டம்.
இதுதான் "அம்மாவின் ஆணைக்கினங்க ஆட்சியின்" ஒர்த்!


#

மழை வெள்ளத்தை பயன்படுத்தி, அன்றாட பொருட்களின் விலையை பலமடங்கு விலையேற்றி விற்கும் வியாபாரிகளின் பணத்தையெல்லாம் கொள்ளையடிக்க ஒருத்தன் பிறக்காமலா போய்ட போறான்?!

#

இலங்கை இராணுவத்தால் மீனவன் சாகும் போதெல்லாம் கண்டுகொள்ளாத மக்களையெல்லாம், இன்று இந்திய இராணுவத்திற்கு முன்பாகவே தன் படகுகளை கொண்டு தானாகவே முன்வந்து காப்பாற்றி வருவபவனும் மீனவனே!

மீனவர் சூழ் நாகப்பட்டினத்து காரனாய் நான் பெருமை கொள்கிறேன்.

#


அனைத்து பள்ளிவாசல்களையும் திறந்துவிட சொல்லி, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மத வேறுபாடின்றி அடைக்கலம் கொடுக்க சொன்ன ஜமாத்தை மறந்துவிட்டு, ஜெயலலிதாவிற்கு நன்றி சொல்லும் மீரான் மாதிரியான இசுலாமியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

"தண்ணீரில் தத்தளித்த தமிழகத்தை தனித்து நின்று காப்பாற்றிய தரணி போற்றும் தாயே!"

#

பறையருக்கான அரசியல் கட்சியென்று அடையாளப்படுத்தி கொண்டு அரசியலுக்கு வந்த திருமாவளவனெல்லாம் இந்நேரம் என்ன செய்கிறார்? சென்னையில் குடிசை வீடுகளை இழந்த பெரும்பாலான விளிம்புநிலை மக்களை வைத்து அரசியல் செய்யும் திருமாவளவனுக்கு இந்த மழைவெள்ள பாதிப்பெல்லாம் தெரியாதா? அடங்க மறுக்க சொன்னவரே, இந்த மழைக்கு ஒரேயடியாக அடங்கி விட்டார் போல.

#

'மழைய பத்தி இன்னைக்காவது இந்தம்மா வாய தொறந்துச்சே!'ன்னு டீக்கடையில பெரியவர் ஒருத்தர் சொல்லிட்டு இருக்காரு. அவரு இன்னும் ஜெயா நியூஸ் பார்க்கலன்னு நினைக்கிறேன்.

#

இவ்ளோ மழை பேய்ஞ்சு மேடான ஏரியாவே குளமா மாறினதுக்கு அப்பறமும், வயல்வெளி - குளம் - குட்டை - ஏரியில வீட்டுமனை போட்டு ரியல் எஸ்டேட்ங்கிற பேர்ல விளம்பரம் பண்றவனெல்லாம் அடங்க மாட்றாய்ங்க.

#

இந்தியாவின் மெட்ரோ சிட்டி என சொல்லப்படுகின்ற சென்னையை தவிர்த்த டெல்லி - மும்பை - கொல்கத்தாவில் இந்த மாதிரியான மழை பொழிந்திருந்தால், இந்நேரம் நாடே மூழ்கி விட்டது போன்ற பிம்பத்தை இந்திய ஊடகங்கள் உருவாக்கி ஒப்பாரி வைத்திருக்கும்!

#

எதற்கெடுத்தாலும் 'நான்' என்ற ஆணவத்தை இயற்கையாக மாற்றிக்கொள்ளாவிட்டால், இயற்கையே மாற்றும் என்பதை ஆள்பவர்கள் இனியாவது புரிந்து கொள்ளட்டும்.

#

இவ்வளவு நடந்து தலைநகரமே தண்ணியில மிதக்குது. இந்த மானங்கெட்டவனுங்க நான்காண்டு சாதனை பற்றிய செய்தியை வெட்கமே இல்லாமல் போட்டுக்கிட்டு இருக்காய்ங்க. த்தூ

#

ஜெயாடிவி அலுவலகத்துக்குள்ளயே மழை தண்ணீர் புகுந்தது தான் ஹைலைட்டே... பேச்சாடா பேசுனீங்க?! இனிமே நீச்சலடிச்சுக்கிட்டே, "அம்மாவின் ஆணைக்கினங்கே, ஜெயாடிவி அலுவலகத்தில் மழைநீர் புகுந்து புண்ணியம் தேடிக்கொண்டது" என வழக்கம்போல செய்தியை சொல்லிட்டா கணக்கு சரியாயிடும்.

#

சென்னைக்கு கடலூர் இளக்காரமா தெரிஞ்சது போலவே, டெல்லிக்கு சென்னை இளக்காரமா தெரியுது.

#

உலகம் முழுக்க சுற்றினாலும் தமிழக மழை வெள்ள பாதிப்பை ஹெலிகாப்டரில் வந்து நேரில் பார்த்து உடனடியாக ரூ.1940 கோடி ஒதுக்கிய மோடியிடமிருந்து, இந்த லேடி கத்துக்க வேண்டிய விசயம் நிறைய இருக்கு.
தங்களது கட்சி வேட்பாளர் ஊராட்சி மன்ற தலைவராக இல்லாத கிராமத்திற்கு அரசாங்க சலுகைகளை கொடுக்கக்கூட மனமில்லாத இந்த லேடியை விட, தன் கட்சி ஆட்சியை பிடிக்கவே வாய்ப்பில்லாத ஒரு மாநிலத்திற்கு நேரடியாக களத்திற்கே வந்த மோடி போற்றுதலுக்கு உரியவர்.
இனியாவது தமிழக மழை வெள்ள பாதிப்புகளை இந்திய ஊடகங்கள் பேசட்டும் நன்றி, பாரத பிரதமர் உயர்திரு. நரேந்திர மோடி!
- இரா.ச.இமலாதித்தன்

25 நவம்பர் 2015

என் பார்வையில் இந்த வாரம்

விஜய் தொலைக்காட்சியின் 'ஒரு வார்த்தை ஒரு லட்சம்' என்ற தமிழ் வார்த்தைகளை கண்டுபிடிக்கின்ற மாணவர்களுக்கான அறிவுபூர்வமான பொழுதுபோக்கு நிகழ்ச்சியின் இன்றைய பகுதியில், பெரும்பாலான வார்த்தைகளில் தமிழில்லை; சமக்கிருதம் தான்!

#



விகடன் மீது அ.தி.மு.க.விற்கும், தந்தி மீது தி.மு.க.விற்கும், ஆமீர்கானின் மனைவி சொன்ன 'அது' இல்லை போல!


#

பல லட்ச மக்களை தங்களது பேச்சுகளாலும், எழுத்துகளாலும் கட்டிப்போட்டு ஆட்சியை பிடித்த தி.மு.க., இன்று தந்தி டி.வி.போன்ற ஊடக விவாதக்களங்களில் ஒருசிலர் மத்தியில் கூட தனது ஆளுமையை நிரூபணம் செய்ய முடியாமல் ஒதுங்கி செல்வது ஆச்சர்யம் தான்.
களத்தில் வெற்றி தோல்வி என்பதை விட, தோல்வியடைவோம் என்ற எண்ணத்தில் அந்த களத்தையே இழப்பது தான் பலவீனம் என்பது போலவே தி.மு.க.வின் இந்த முடிவும் அமைந்திருக்கிறது.

#

திரு. நெப்போலியன் ரெட்டியாரும், பா.ஜ.க.வின் மாநில துணைத்தலைவரானார்!

வாழ்க தமிழக பா.ஜ.க.!

#

கருணாநிதியை சந்தித்த கோவன் மீதான புரட்சி - புடலங்காய் - நம்பிக்கையெல்லாம், இனி சந்தேகத்திற்கு உள்ளானாலும் துளியும் தவறில்லை.

#
கூகிள் போன்ற இணைய தேடுபொறிகளில், Tiger என தேடினால் புலி வருமா என தெரியாது. கண்டிப்பாக எம் அண்ணன் பிரபாகரன் வருவார்.
‪#‎Hbd_TamilTiger‬
#

கோமள விலாஸ் உணவகம்
தமிழ் முரசு பத்திரிகை
தமிழ்

சிங்கப்பூர்!

இந்தியா
நரேந்திர மோடி
ஹிந்தி

#

19 நவம்பர் 2015

ஆளும் வர்க்கத்தின் அரஜாகம் - மருதுபாண்டியர் நினைவுத்தூண் அகற்றம்!



விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகிலுள்ள ஆத்திப்பட்டியில், சுதந்திர போராட்ட வீரர்களும், தமிழ் தமிழ் தேசியம் காத்தவர்களான மாமன்னர் மருது பாண்டியர்களின் உருவம் பதித்த நினைவுத்தூணை அரசு சார்பில் தரைமட்டமாக அகற்றப்பட்டுள்ளது. தமிழக தலைநகரிலே, நாட்டிற்காக என்ன சாதனை செய்தாரென்றே தெரியாத தெலுங்கர் சோபன்பாபு சிலையெல்லாம் பாதுபாப்பாக இருக்கையில், ஏதோவொரு கிராமத்து மூலையில் பெருந்தமிழர்களான மருது சகோதர்களின் நினைவுத்தூணை அகற்றுவதுதான் நாடு போற்றும் நான்காண்டு சாதனை போல.
ஆளும் வர்க்கத்தின் அராஜக போக்கான இச்செயலை, அனைத்து தமிழ் உறவுகளும் நிச்சயம் கண்டிப்பார்களென நம்புகிறேன்.

- இரா.ச.இமலாதித்தன்