03 டிசம்பர் 2015

சென்னை வெள்ளத்திற்கு பின்னால், மனிதமும் - வேசமும்!


மழை வெள்ளத்திற்காக மசூதிகள் இடம் கொடுத்து உதவுவதையும், மதம் பிடித்த சிலர் இசுலாமிய சார்பு துதி பாட ஆரம்பிக்கின்றனர். செய்த உதவியை சொல்லிக்காட்டி மனிதாபிமானத்தை மதமாக்கி அவமான படுத்தாதீர்கள்


நாட்டை ஆளும் முதல்வரின் வயது 67, பாட்டை ஆளும் இசைஞானியின் வயது 72!


வெள்ள நிவாரணத்திற்காக டிவிட்டர் மூலமாக ட்ரெண்ட் உருவாக்கி, நேரடியாக களத்திலும் உதவிகளை ஒருங்கிணைத்த, சித்தார்த் - RJ பாலாஜியை பார்க்கும்போது "ஆய்த எழுத்து" படம் தான், நினைவுக்கு வருகிறது! இனியாவது இளைஞர்கள் அரசியலை கைப்பற்ற வேண்டும்.


தன் உழைப்பில் சேர்த்த பணத்தை கொண்டு நிவாரணமாக அனுப்பிய பொருட்களிலெல்லாம், ஊர் பணத்தில் கொள்ளையடிப்பவர்களின் படத்தை ஒட்டி வினியோகம் செய்யும் இழிபிறவிகளை எதை கொண்டு அடிப்பது? எச்சில் இலைகளை பொறுக்கும் தெரு நாய்களே, இனியாவது திருந்துங்கள்



ராஜாதி ராஜ, ராஜ கம்பீர, ராஜ மார்த்தாண்ட, ராஜ குலோத்துங்க... த்தூ

(கன்னட + மராட்டிய) ரஜினி என்ற போலி தமிழனை விட, அல்லு அர்ஜுன் என்ற நிஜ தெலுங்கனுக்கு, தமிழனாக எம் நன்றி!

#

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு நாகையில் இருந்து கூட நூற்று கணக்கான பேரு போனாங்க. இது மாதிரி எல்லா மாவட்டத்திலிருந்தும் ஒன்றியம் வாரியாக தேர்தல் பணிக்கு ஆட்களை வர சொன்ன அதிமுகவின் ராஜ'தந்திரம்', இப்போதும் சென்னை மழைவெள்ள மீட்பு பணிக்கு பயன்பட்டிருந்தால் பெருமைப்படலாம். ஆனால்... இப்போதுதானே அது வெறும் தந்திரமென சாமானியனுக்கும் புரிகிறது.

#

நான் பிறந்த என் சாதியின் மக்கள்தொகையை மனதில் வைத்து ஆண்ட சாதி பெருமை பேசிய எந்த சாதித்தலைவனும் இந்த மழை வெள்ளத்திற்காக நேரடியாக களத்திற்கு வந்து நிவாரணம் செய்த மாதிரி தெரியவில்லை. வாழும் தேவர், வீர மருதுன்னு அடைமொழி வைத்துகொண்டால் மட்டும் போதாது. வீரத்தையும், விவேகத்தையும், கொடைத்தன்மையையும் இதுமாதிரியான சூழலில் வெளிக்காட்டணும்.

#

வலது கை கொடுக்கிறதை, இடது கைக்கு கூட தெரியக்கூடாது!ன்னு சொல்லுவாங்க. ஆனால் இங்கே உதவியை கூட ஓட்டுக்களாக மாற்ற நினைக்கும் ஈனத்தனமான புத்தியை என்ன சொல்லி திட்டுவது? ஜெயலலிதா படம் போட்ட பை பிரிண்ட் அடிக்க நேரமானதால், நூற்று கணக்கான சாப்பாட்டு பொட்டலங்கள் வீணாகி போனதாகவும் செய்தி வருகிறது. ஜெயலலிதா படம் போடலைன்னா, தெய்வ குத்தமாவா ஆகிடும்? காங்கிரஸ் போலவே திராவிட அடிமைகள் நம்பியிருக்கும் இந்த இரண்டு கட்சிகளின் ஆட்சியும் தமிழ்நாட்டில் ஒழியணும்.

#

பெருமழை/புயல் உண்டுயென சொல்லப்பட்டிருந்த பஞ்சாங்கத்தை பழித்த பஹூத்தறிவு கி.வீரமணி எங்க இருக்காப்ள?

#

பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல், பாதியிலேயே பேட்டியை முடித்து கொண்டு அமைச்சர்கள் - அரசு அலுவலர்கள் ஓட்டம்.
இதுதான் "அம்மாவின் ஆணைக்கினங்க ஆட்சியின்" ஒர்த்!


#

மழை வெள்ளத்தை பயன்படுத்தி, அன்றாட பொருட்களின் விலையை பலமடங்கு விலையேற்றி விற்கும் வியாபாரிகளின் பணத்தையெல்லாம் கொள்ளையடிக்க ஒருத்தன் பிறக்காமலா போய்ட போறான்?!

#

இலங்கை இராணுவத்தால் மீனவன் சாகும் போதெல்லாம் கண்டுகொள்ளாத மக்களையெல்லாம், இன்று இந்திய இராணுவத்திற்கு முன்பாகவே தன் படகுகளை கொண்டு தானாகவே முன்வந்து காப்பாற்றி வருவபவனும் மீனவனே!

மீனவர் சூழ் நாகப்பட்டினத்து காரனாய் நான் பெருமை கொள்கிறேன்.

#


அனைத்து பள்ளிவாசல்களையும் திறந்துவிட சொல்லி, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மத வேறுபாடின்றி அடைக்கலம் கொடுக்க சொன்ன ஜமாத்தை மறந்துவிட்டு, ஜெயலலிதாவிற்கு நன்றி சொல்லும் மீரான் மாதிரியான இசுலாமியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

"தண்ணீரில் தத்தளித்த தமிழகத்தை தனித்து நின்று காப்பாற்றிய தரணி போற்றும் தாயே!"

#

பறையருக்கான அரசியல் கட்சியென்று அடையாளப்படுத்தி கொண்டு அரசியலுக்கு வந்த திருமாவளவனெல்லாம் இந்நேரம் என்ன செய்கிறார்? சென்னையில் குடிசை வீடுகளை இழந்த பெரும்பாலான விளிம்புநிலை மக்களை வைத்து அரசியல் செய்யும் திருமாவளவனுக்கு இந்த மழைவெள்ள பாதிப்பெல்லாம் தெரியாதா? அடங்க மறுக்க சொன்னவரே, இந்த மழைக்கு ஒரேயடியாக அடங்கி விட்டார் போல.

#

'மழைய பத்தி இன்னைக்காவது இந்தம்மா வாய தொறந்துச்சே!'ன்னு டீக்கடையில பெரியவர் ஒருத்தர் சொல்லிட்டு இருக்காரு. அவரு இன்னும் ஜெயா நியூஸ் பார்க்கலன்னு நினைக்கிறேன்.

#

இவ்ளோ மழை பேய்ஞ்சு மேடான ஏரியாவே குளமா மாறினதுக்கு அப்பறமும், வயல்வெளி - குளம் - குட்டை - ஏரியில வீட்டுமனை போட்டு ரியல் எஸ்டேட்ங்கிற பேர்ல விளம்பரம் பண்றவனெல்லாம் அடங்க மாட்றாய்ங்க.

#

இந்தியாவின் மெட்ரோ சிட்டி என சொல்லப்படுகின்ற சென்னையை தவிர்த்த டெல்லி - மும்பை - கொல்கத்தாவில் இந்த மாதிரியான மழை பொழிந்திருந்தால், இந்நேரம் நாடே மூழ்கி விட்டது போன்ற பிம்பத்தை இந்திய ஊடகங்கள் உருவாக்கி ஒப்பாரி வைத்திருக்கும்!

#

எதற்கெடுத்தாலும் 'நான்' என்ற ஆணவத்தை இயற்கையாக மாற்றிக்கொள்ளாவிட்டால், இயற்கையே மாற்றும் என்பதை ஆள்பவர்கள் இனியாவது புரிந்து கொள்ளட்டும்.

#

இவ்வளவு நடந்து தலைநகரமே தண்ணியில மிதக்குது. இந்த மானங்கெட்டவனுங்க நான்காண்டு சாதனை பற்றிய செய்தியை வெட்கமே இல்லாமல் போட்டுக்கிட்டு இருக்காய்ங்க. த்தூ

#

ஜெயாடிவி அலுவலகத்துக்குள்ளயே மழை தண்ணீர் புகுந்தது தான் ஹைலைட்டே... பேச்சாடா பேசுனீங்க?! இனிமே நீச்சலடிச்சுக்கிட்டே, "அம்மாவின் ஆணைக்கினங்கே, ஜெயாடிவி அலுவலகத்தில் மழைநீர் புகுந்து புண்ணியம் தேடிக்கொண்டது" என வழக்கம்போல செய்தியை சொல்லிட்டா கணக்கு சரியாயிடும்.

#

சென்னைக்கு கடலூர் இளக்காரமா தெரிஞ்சது போலவே, டெல்லிக்கு சென்னை இளக்காரமா தெரியுது.

#

உலகம் முழுக்க சுற்றினாலும் தமிழக மழை வெள்ள பாதிப்பை ஹெலிகாப்டரில் வந்து நேரில் பார்த்து உடனடியாக ரூ.1940 கோடி ஒதுக்கிய மோடியிடமிருந்து, இந்த லேடி கத்துக்க வேண்டிய விசயம் நிறைய இருக்கு.
தங்களது கட்சி வேட்பாளர் ஊராட்சி மன்ற தலைவராக இல்லாத கிராமத்திற்கு அரசாங்க சலுகைகளை கொடுக்கக்கூட மனமில்லாத இந்த லேடியை விட, தன் கட்சி ஆட்சியை பிடிக்கவே வாய்ப்பில்லாத ஒரு மாநிலத்திற்கு நேரடியாக களத்திற்கே வந்த மோடி போற்றுதலுக்கு உரியவர்.
இனியாவது தமிழக மழை வெள்ள பாதிப்புகளை இந்திய ஊடகங்கள் பேசட்டும் நன்றி, பாரத பிரதமர் உயர்திரு. நரேந்திர மோடி!
- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக