25 டிசம்பர் 2015

மூன்று தேசியங்களுக்குள் டிசம்பர் 25!

நாகை மாவட்டம் கீழ வெண்மணியில், கூலி உயர்வுக்காக ஆளும் வர்க்கத்திற்கு எதிராக குரலெழுப்பிய சக தமிழ்குடிகளான பள்ளர்-பறையர்களின் உரிமைக்குரல்வளையை ஒரே குடிசையில் வைத்து 44 உயிர்களை கொன்றொழித்த வடுக பண்ணையாரின் வஞ்சகம் நிறைந்த நாள் இன்று.

‪#‎தமிழ்தேசியம்‬

பல சிற்றரசுகளையும், பல மாகாணங்களையும், பல சமஸ்தானங்களையும், வல்லபாய் படேல் போன்றோரின் முயற்சியால் இந்தியம் என்ற ஒற்றைச்சொல்லில் கட்டமைக்கப்பட்ட இந்த நவீன தேசத்தின் அப்பழுக்கற்ற ஓர் உன்னத தலைமை அமைச்சராக விளங்கிய, முன்னாள் பிரதமரான உயர்திரு. அடல் பிகாரி வாஜ்பாயி அவர்களின் பிறந்தநாள் இன்று.

‪#‎இந்தியதேசியம்‬

உலகெங்கும் வணிகமும் மொழியும் உலகமயமாக்கல் ஆக்கப்பட்ட அதே நேரத்தில், தன் பங்கிற்கு உலகமாயாக்கப்பட்ட மதம் தான் கிருத்துவம். எங்கெல்லாம் இம்மதம் பரப்பப்பட்டதோ அங்கெல்லாம் அம்மக்களின் வாழ்வியல் கலச்சாரத்தோடு தன்னையும் உருமாற்றி கொண்டு, அம்மண்ணில் பேசப்பட்ட மக்களின் மொழியின் வாயிலாகவே எளிய மக்களையும் மனரீதியாக மதமாற்றம் செய்த மதமான கிருத்துவத்தின் அதிமுக்கியமான கிருஸ்துமஸ் நாள் இன்று.

‪#‎சர்வதேசியம்‬

துக்கமும் - மகிழ்ச்சியும் - வாழ்த்துகளும் என கலவையாக நிறைந்த நினைவேந்தல் அனுசரிக்கக் கூடிய மறக்க முடியாத நாள் இந்த டிசம்பர் 25!

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக