27 டிசம்பர் 2015

திருவண்ணாமலை அகமுடையார் மாநாட்டு துளிகள்!

01. அதிக பெரும்பான்மையாக உள்ள 62 தொகுதிகளில் அகமுடையாரை வேட்பாளராக நிறுத்தும் கட்சிக்கு மட்டுமே ஆதரவு. இல்லையென்றால் தேர்தலை புறக்கணிப்போம்.

02. முக்குலம் தேவையில்லை; (அகமுடையார் என்ற) இக்குலம் போதும்!


03. அகமுடையார்கள் மற்ற தமிழ் சாதிகளிடம் நட்பு பாராட்டுவது போலவே, இனி கள்ளர் - மறவர்களிடம் நண்பர்களாகவே இருக்க விரும்புகிறோம். அகமுடையார்களுக்கு மாமன் - மச்சான் - மாப்பிள்ளைகளாக கள்ளரும், மறவரும் இருக்கட்டும்; ஆனால், பங்காளிகளாக அகமுடையார்களுக்குள் மட்டும் இருந்து விடுகிறோம். எங்களுக்கு முக்குலம் தேவையில்லை.

04. இராமநாதபுரத்தில் "அகமுடையார் பல்கலை கழகம்!" விரைவில் தொடங்கப்படும்.

- ஸ்ரீபதி செந்தில்குமார், நிறுவனத்தலைவர்,
தமிழக தலைமை அகமுடையார் சங்கம்.




திருவண்ணாமலை அகமுடையார் மாநாட்டில் கொடுக்கப்பட்ட நாட்காட்டி!


வேட்டவலம் அகமுடையாரின் ப்ளக்ஸ்!

திருக்கோவிலூர் தொழிலதிபர் திரு. டி.கே.டி.முரளி அவர்களால் அகமுடையார் மாநாட்டு கொடியேற்றம்!

அமிர்தா இண்டர்நேஷனல் இன்ஸ்டியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட்டின் நிறுவனர் திருச்சி திரு. எம்.எல்.சதீஸ்குமார் அகமுடையார் அவர்களால் அகமுடையார் சங்கப்பாடல்களின் இரண்டாம் பாகம் மாநாட்டில் வெளியிடப்பட்டது.

அனைத்துலக அருணகிரிநாதர் அறங்காவலர் குழுத்தலைவரான ஐயா. தனுசு அகமுடையாரின் எழுச்சி உரை!

அகமுடையார் சங்க பாடல்கள் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது!

ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து அகமுடையார் மடத்தை மீட்ட, ஆதமங்கலம் லட்சுமணன் அகமுடையாருக்கு ரூ.10,000/- நன்கொடை அருணாச்சால முதலியாரால் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அகமுடையார் சங்க பொதுசெயலாளர் முனைவர் தி.அரப்பா அவர்களின் அரசியலுரை!

வருங்கால சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.செந்தில் அகமுடையாரின் எழுச்சி உரை!

நிறுவனத்தலைவர் திரு. ஸ்ரீபதி செந்தில்குமார் அவர்களின் சிறப்புரை!

அகமுடையார் மாநாட்டு மலர், தம்பிக்கோட்டை எம்.கே.செந்தில் அவர்களின் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

அகமுடையார் மாநாட்டு விழா மேடையை அலங்கரித்து கொண்டிருக்கும் அனைவருக்கும், மருது பாண்டியர்கள் படம் பதித்த காலண்டர் வழங்கப்பட்டது.

கமுதி நாராயணமூர்த்தி அவர்களால் அகமுடையார் மாநாட்டு தீர்மான உரை!



தென் மண்டலத்தை பொறுத்தவரை 90%க்கும் மேற்பட்ட அனைத்து அமைப்புகளுக்கும் முறையான மாநாட்டு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. மேலும், மதுரை - திண்டுக்கல் - தேனி - இராமநாதபுரம் - சிவகங்கை உள்ளிட்ட அனைத்து அகமுடையார் சங்கங்களின் பிரதிநிதிகளும் திருவண்ணாமலை மாநாட்டு மேடையில் அமர்ந்திருந்து சிறப்பித்தார்கள். குறிப்பாக மதுரை திருமங்கலம் கீழமண்டு - மேலமண்டு அகமுடையார் சங்கங்கள் சார்பாக அச்சங்கங்களின் பொறுப்பாளர்களான திரு.மருதுபாண்டியன் மற்றும் துர்கா தேவனுக்கு நேரடியாக அழைப்பு கொடுக்கப்பட்டது. இந்த மாநாட்டு அழைப்பிதழானது இம்முறை அனைத்து அகமுடையார் சங்கங்களுக்கு நேரடியாக கொடுக்கப்பட்டதே தவிர சங்க உறுப்பினர்களுக்கு என தனிப்பட்ட முறையில் அழைப்பிதழ் அளிக்கவில்லை. அழைப்பிதழ் பெற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து தலைவர்களும் மேடையில் அமர இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. வரமுடியாத சங்க பிரதிநிதிகள் தொலைபேசியிலும் கடிதம் மூலமாகவும் வாழ்த்துகள் தெரிவித்திருந்தனர். 90%க்கும் மேற்பட்ட அனைத்து அகமுடையார் சங்க தலைவர்களின் பெயர்கள், மாநாட்டு விழா அழைப்பிதழில் போடப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடதக்க விசயம்.
இதில் இன்னும் சந்தேகம் இருந்தால் தெளிவு பெற அழைக்கவும்.

திரு. தி.அரப்பா (9943713797)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக