நாம் தமிழர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாம் தமிழர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

06 மே 2019

யார் தமிழர்?

திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில், தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழர்களுக்கே 90 சதவீத முன்னுரிமை என்பது உறுதி செய்யப்பட்டு - தமிழக இளைஞர்கள் மட்டுமே வேலை வாய்ப்பு பெறுகின்ற நிலையை உருவாக்குவோம்!

- மு.க.ஸ்டாலின்.

வரவேற்கிறோம். ஆனால், யார் தமிழர்? என்பதை எதை வைத்து முடிவு செய்வீர்கள். , யார் தமிழர்? தமிழரை எப்படி இனம் காண்பீர்கள்? டிஎன்ஏ பரிசோதனை நிலையம் வைத்திருக்கின்றீர்களா? இதெல்லாம் ஒருகாலத்தில் சீமானிடம் அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள். தமிழ்த்தேசிய அரசியலை கேலிசெய்கிறோமென்ற மனப்பான்மையில், திராவிடவாதிகள் கேட்ட இது மாதிரியான கேள்விகளுக்கு திராவிடத்தலைவரான ஸ்டாலினே இனி பதில் சொல்லி அவர்களுக்கு புரிய வைக்கலாம். ஏனெனில், அதற்கான காலம் இப்போது கனிந்திருக்கிறது.

யார் தமிழர்?


அ. தாய்மொழியை தமிழாக கொண்டவர்.

ஆ. குலதெய்வ (நாட்டார்) வழிபாடுகளை பின்பற்றுபவர்.

இ. பட்டத்தாலோ, வேறுவகையிலோ இனக்குழு (சாதி) அடையாளமுடையவர்.

இந்த மூன்றையும் வைத்து யார் தமிழரென்பதை எளிதாக அடையாளம் காண முடியும். குறிப்பாக, சாதியை மறைத்து தமிழரை அடையாளம் காணவே முடியாது. ஏனெனில் இம்மண்ணின் மைந்தர்களான தாய்த்தமிழ் உறவுகளை விட வேற்றுமொழிக் காரர்களும், வேற்றினத்தவர்களும் தான், தங்கள் அடையாளங்களை மறைத்து நம் தாய்மொழியை வாய்மொழியாக நன்றாக பேசுகின்றனர். தமிழ் இனத்தை அடையாளம் காண சாதியும், தாய்மொழியும், குலசாமி வழிபாடுகளுமே முதன்மையானது. இந்த மூன்றில் எதை விட்டுக்கொடுத்தாலும் யார் தமிழர் என்பதை கணக்கிடவே முடியாது.

தமிழருக்கான வரையறையில், குலதெய்வ வழிபாடு தேவையற்றது; அதைச் சேர்த்தால் நிறைய குழப்பம் வருமென பலர் சொல்வதை கேட்கலாம். ஆனால், பல தமிழ்ச்சாதியிலும் குழப்பம் ஏற்பட்டு விட்டது. விஸ்வகர்மா அடையாளம் தமிழ்ச்சாதி அடையாளத்தை சிதைக்கிறது தானே? அதுபோல யாதவர், தலித் அடையாளங்களும்...
இங்கே பலருக்கும் பழனி எட்டுக்குடி முருகனும், திருப்பதி வேங்கடமுடையாரும் தான் குலசாமி ஆகிவிட்டது. ஆரம்பத்தில் அவர்களும், நாட்டார் வழிபாடுகளே செய்திருக்க வேண்டுமென்பது என் பார்வை. உருது இசுலாமியர், ஆங்கிலோ இண்டியன் கிருஸ்துவர்களும் தமிழராக கணக்கிட முடியாதென்பதால், பெற்றோரின் தாய்மொழி தமிழாக இருக்க வேண்டுமென்பதே இதற்கெல்லாம் பொருத்தமாக இருக்கும்.

- இரா.ச. இமலாதித்தன்


24 டிசம்பர் 2017

நாம் தமிழரின் - ஆர்.கே.நகர் தேர்தல்!




ஹிந்திய தேசிய கட்சியையெல்லாம் ஓரங்கட்டி விட்டு, 3860 வாக்குகள் பெற்று தமிழ் தேசிய கட்சியாக வளர்ந்து நின்று, இத்தேர்தல் மூலமாக தமிழக கட்சி பட்டியலில் மூன்றாமிடத்தை பிடித்திருக்கும் நாம் தமிழர் கட்சிக்கு வாழ்த்துகள்! அதிலும் குறிப்பாக மத்திய மாநில ஆட்சியாளர்களின் ஆதரவில்லாமல், வாக்கு வங்கியுள்ள மற்ற அரசியல் கட்சிகளோடு கூட்டணியும் இல்லாமல் தனித்து பெற்றிருக்கும் இவ்வெற்றி போற்றுதலுக்குரியது.

08 நவம்பர் 2017

செந்தமிழனுக்கு அகவை வாழ்த்துகள்!





யார் தமிழன்? என்ற மாற்றோரின் ஏளனப்பேச்சையே தன் வசமாக்கி 'நாம் தமிழர்' என்ற கம்பீர அடையாளத்தோடு, சமகால தமிழ்தேசிய அரசியலில் தலைவனாய் திகழும் 'மருது சீமை'யில் பிறப்பெடுத்த எம் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு, 48வது அகவை திருநாள் வாழ்த்துகள்!

24 மே 2017

பொதுவெளியில் நாம் தமிழராக இருப்போம்!


தமிழ், தமிழரென பேசும் திரு.சீமானை அந்த தமிழர்களே ஏற்கவில்லையென தமிழரல்லாத கே.டி.ராகவன் சொல்லிருக்கிறார். சினிமா இயக்குனர் என்பதுதான் திரு.சீமானின் அடையாளமென்றும் சொல்லிருக்கிறார்; பூநூல் மட்டுமே அரசியல் அடையாளமாக இருக்க வேண்டுமென நினைக்கும் பொதுபுத்தியில் செருப்பால் அடித்து, களம் காணும் திரு.சீமான் எத்தனையோ இளந்தமிழர்களை நாம்தமிழராக இயக்கி கொண்டிருக்கும் தமிழ் இயக்குனர் தான் என்பதில் எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சியே. வா, போ என பேசுவதுதான் தமிழ் கலாச்சராமாயெனவும் கே.டி.ராகவன் கேட்டிருக்கிறார். அன்பு அதிகமுள்ள உறவுமுறைகளுக்குள் வா, போ மட்டும் தான் இருக்கும். இந்த ஆண்டான் அடிமை தன்மையை உருவாக்கிய ஆரிய வந்தேறிகளின் வர்ணாசிரமம் இங்கே இல்லாமல் இருந்திருந்தால், இதே வா,போ என்ற ஒருமைதான் இம்மண்ணில் இன்றும் உயிர்ப்போடு அன்பின் அடையாளமாய் மாறியிருக்கும்.

தென் தமிழகத்திலுள்ள தன் சொந்த ஊருக்குட்பட்ட தொகுதியை விட்டுவிட்டு, வட தமிழகத்திலுள்ள மேனாள் அமைச்சர் தொகுதியில் ஒரு வோட்டுக்கு ஆயிரக்கணக்கான ரூபாய்கள் பட்டுவாடா செய்யப்பட்ட சூழலில், தன் மக்களிடமே பணம் வசூலித்து களம் கண்ட திரு.சீமான் தோற்றதில், அவருக்கு எந்த இழப்புமில்லை. தமிழனுக்காக போராடிய திரு.சீமானை, அந்த தமிழர்களே ஏற்றுக்கொள்ளாமல் தோற்கடித்து விட்டனர் என தொலைக்காட்சி விவாதங்களில் கண்டவனெல்லாம் பேசும் நிலைக்கு ஆளாக்கி விட்டோமேயென நினைத்து அத்தொகுதியின் வாக்களர்கள் தான் வருத்தப்பட வேண்டும்; ஏனெனில் இது அவர்களுக்கான தோல்வி. திரு.சீமான் பேச்சுக்காகவே கூட்டம் கூட ஆயிரக்கணக்கான பேர் இங்குண்டு. ஆனால் ராகவன் போன்றோர்களின் பேச்சைக்கேட்க கூட இம்மண்ணில் ஆளில்லை என்பதே எதார்த்த களநிலவரம். மாற்றுக்கருத்துகளும், விமர்சனங்களும் கூட திரு.சீமான் மீது சிலருக்கு இருக்கலாம். ஆனால் பொதுவெளியில் தமிழர் போலவே இயங்கி கொண்டிருக்கும் தமிழரல்லாதவர்களிடம் எப்போதுமே அண்ணன் சீமானை விட்டுக்கொடுக்க கூடாது; நாம் தமிழர்!

- இரா.ச. இமலாதித்தன்

24 ஏப்ரல் 2016

சூறையாடப்படும் தமிழ்!




அன்று, யாழ் நூலகத்தை 'சிங்களவன்' தீயிட்டி சூறையாடினான். இங்கு, திருக்குறள் மன்ற நூலகத்தை 'திராவிடன்' சூறையாடுகிறான்.
'நாம் தமிழர்' என உணராத வரை, நாம் இனவழிப்பு செய்யப்பட்டு கொண்டே இருப்போம்...

23 மார்ச் 2016

நாம் தமிழரின் இலச்சினை!


நாம் தமிழர் கட்சியின் ஆட்சிக்காலத்தில், தமிழ்நாட்டு அரசின் இலச்சினையாக உருபெற போகும் சின்னத்தை வடிவமைத்த, எம் நாகை மண்ணின் மைந்தனும், உறவின்முறை சகோதரனுமாகிய சதீஷ் சிங்காரவேலுக்கு என் வாழ்த்துகள்!

11 மார்ச் 2016

நாம் தமிழர் கட்சிக்கும் வாழ்த்துகள்!

விஜயகாந்த் கிட்ட, அதிமுக என்ன மாதிரியான 'பேக்கரி டீலிங்' செய்ததென தெரியவில்லை. இது இப்படியே போனால், நிச்சயமாக அடுத்த தேர்தலில் 'முரசு' சின்னத்தின் நிலையும் 'பம்பரம்' போல ஆகிவிடும்.
விஜயகாந்த் மீதான விமர்சனத்தை அவர் இந்த முடிவால் தகர்த்தெறிந்திருக்கலாம். ஆனால் நட்டம் தேமுதிகவுக்கு தான் என்பதும், தனித்து களம் காண்பதென்பதால் நேரடியாகவே அதிமுகவுக்கு மட்டும் தான் மிகப்பெரிய லாபம் என்பதையும் விஜயகாந்தை இயக்கும் பிரேமலதா தேர்தல் முடிவுக்கு பின் புரிந்து கொள்வார்.

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதை விட, இப்போதே நமஸ்காரம் செய்து கொள்ளலாம் சூரியனை! என்பதுதான் தேமுதிகவை சார்ந்த பல மாவட்ட செயலாளர்களின் ஏக்கமாக இருக்கிறது என்பதை பிரேமலதா புரிந்திருந்தால் இதுபோன்ற முடிவை விஜயகாந்த் அறிவித்திருக்க மாட்டார்.
நான்கில் இரண்டு திராவிட கட்சிகள் இந்த தேர்தலோடு ஓரம்கட்டப்படலாம் என்பது மட்டும் தான் ஒரே ஆறுதல். மேலும், இதனால் மறைமுக லாபம் அடைய போகும் நாம் தமிழர் கட்சிக்கும் வாழ்த்துகள்!

- இரா.ச. இமலாதித்தன்

29 பிப்ரவரி 2016

தமிழன் தொலைத்த ஆதி விளையாட்டு!

உலகின் மூத்த இனமான தமிழர்களின் வீர விளையாட்டுகளில் கபாடியும் ஒன்று. ஆனால் இன்றைக்கு ஹிந்தியர்களின் விளையாட்டாக உலகிற்கு அறியப்படுகிறது. தற்போது சில வாரங்களாக நடைபெற்று வரும் 'ப்ரோ கபாடி' என்ற லீக் போட்டிகளில் விளையாடும் அனைத்து அணிகளிலும் ஹிந்தியின் ஆதிக்கம் தான் அதிகம் இருக்கிறது. அநேகமாக பாஸ்கர் என்ற பயிற்சியாளரை தவிர மற்ற அணிகளின் பயிற்சியாளர்களோ, வீரர்களோ தமிழரே இல்லையென்றே நினைக்கிறேன். காலப்போக்கில் கபாடி என்பது ஹிந்தியத்தின் விளையாட்டாக மாறிவிடும். அப்போது நம் தமிழ்நாட்டு திராவிடர்கள் அந்த விளையாட்டை எதிர்ப்பார்கள்.

எப்படி, 'ஆசீவகம்' என்ற நம் ஆதி வழிபாட்டு ஆன்மீக முறைகளையும், 'மாயோன் - சேயோன்' என்ற நம் மொழி சார்ந்த நம்மின கடவுள்களை வந்தேறிய ஆரியர்கள் கைப்பற்றி அவர்களுடைய வழிபாட்டு தெய்வமாக்கி கொண்ட போது, அதை கைப்பற்ற வக்கில்லாமல், நாத்திகம் என்ற பெயரில் தமிழர்களின் ஆதி ஆன்மீகத்தை எதிர்க்கும் திராவிடர்கள் போல, கபாடியும் நிலையும் மாறிப்போகலாம்.

இப்படியாக ஆரிய வந்தேறிகளாலும், திராவிட துரோகிகளாலும் நம்மை விட்டு நம் பாரம்பரியக்கூறுகள் ஒவ்வொன்றாய் கூறுபோட்டு களவாடப்படுகிறது, நமக்கே தெரியாமல். இதுபோல தமிழர் இழந்ததையெல்லாம், ஒவ்வொன்றாய் மீட்டெடுப்போம்; நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்போம்!

- இரா.ச. இமலாதித்தன்

23 பிப்ரவரி 2016

என்னமோ ஏதோ!

-01-

இக்கட்டான வேளையிலும் கூட  ஆளுங்கட்சிக்கு ஜால்ரா அடிக்கும் அடிமைகளை, ஜெயா நியூஸ் அல்லாத மற்ற நியூஸ் சேனல்களில் மக்கள் புலம்புவதை மட்டும் பார்க்க சொல்லுங்க. அவர்களின் வலியும், வேதனையும் புரியக்கூடும்.

-02-

மூச்சுக்கு முன்னூறு தடவ கூறு போட்டு விஜய் டிவியில வித்துக்கிட்டு இருந்த அந்த ஹைடெக் சிட்டி 'அருண் எக்ஸல்லோ' இருந்த இடத்த, இப்போ போட் ஹவுஸாவா மாத்திட்டாங்க?

-03-

கோவிலெங்கும் வாட்சப்போடு தான், அனைத்து கோவில்களிலும் தரிசனம் செய்து கொண்டிருந்தனர், இளவட்டமெல்லாம்!

-04-

கடவுள் மறுப்பாளராக காட்டிக்கொண்ட வடுகர் ஈ.வெ.ரா.வை இரட்சிக்க வந்த கடவுள் போல அர்சித்த காலமெல்லாம் தலைகீழாய் மாறிபோனது. ஆரியருக்காக ஆங்கிலேயன் சூட்டிய ஹிந்து என்ற மாயை உடைத்து வீரத்தமிழர்களாக முன்னிற்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆரியனுக்காக திராவிடன் என்ற போர்வையில் வடுகர்களும், திராவிடனுக்கு எதிராக ஆன்மீகம் என்ற பெயரில் பிராமணர்களும், தமிழர் முதுகில் ஏறி பயணித்த பாதையெல்லாம் முடிவுற தொடங்கி இருக்கிறது.
இவற்றிற்கெல்லாம் சீமானும் ஒரு காரணம் என்பது தான் மறுக்க முடியாத உண்மை. வெற்றியோ தோல்வியோ களத்தில் நிற்பதில் தான் அரசியல் ஆண்மை அடங்கிருக்கிறது. அந்த வகையில், சாதி மத ஆதரவின்றி அனைத்து தொகுதிகளிலும் தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சிக்கு வாழ்த்துகள்!

-05-

கடந்த நாலரை வருடங்களாக பள்ளம் படுகுழிகளோடு நாறிப்போயிருந்த சாலைகள் அனைத்தும், தேர்தலுக்காக அவசரகதியில் அரைவேக்காட்டு தனமாய் தார் பூசப்பட்டு மாறிப்போயிருக்கின்றன. கட்சி வேறுபாடின்றி அனைத்து அரசியல்வாதிகளும் தெளிவாகத்தான் இருக்கின்றனர். ஆனால் அதை உணர வக்கற்ற வாக்காளர்களான மக்கள் தான், இலவசங்களுக்காக கையேந்தி மதிமயங்கி கிடக்கின்றனர்; டாஸ்மாக், ரேசன் கடையென!

-06-

எனக்கு தெரிந்து பெரும்பாலானோர் மகாமகத்திற்காக எங்க டெல்டாவின் புண்னியபூமியான கும்பகோணத்திற்கு சென்று வந்து கொண்டிருக்கின்றனர். அனைவருக்கும் ஆன்மீக நாட்டம் பெருக்கெடுத்து விட்டதா? என தெரியவில்லை. நானும் கூட நேற்றைக்கு முந்தைய நாள் சென்று வந்தேன்.
அண்மைகாலமாக கோவில் வழிபாட்டுத்தலங்களில் மக்கள் கூட்டம் அதிகமாகி கொண்டே இருக்கிறது. குறிப்பாக இளைஞர்களும் பக்தி மார்க்கத்தில் அதிக ஆர்வம் காட்டி வருவதையும் அறியமுடிகிறது. இந்த மண்ணின் தன்மை படிப்படியாக அதன் பூரணத்தை அனுபவிக்க தொடங்கி இருப்பதாகவே உணர்கிறேன்.

நன்றி இறைவா!


06 நவம்பர் 2015

வைகோ - சீமானின் அரசியல் நகர்வு!

திரு. வைகோ தாயாரின் மறைவுக்காக திரு. சீமானின் இரங்கல் அறிக்கையும், கலிங்கப்பட்டிக்கே சென்று நேரில் அஞ்சலி செலுத்தியதையும், அரசியல் காய் நகர்த்தலாகவே பார்க்கின்றேன். ஒருமுறை ஈழ ஆதரவு திரைப்படத்தின் சிறப்பு காட்சியை ஒரே திரையரங்கினுள் அருகருகே திரு.வைகோவும் - திரு. சீமானும் அமர்ந்திருந்து பார்த்திருந்தும், இருவரும் முகம் பார்த்து கூட பேசிக்கொள்ளவில்லை. அதே போல எங்கள் நாகப்பட்டினத்தில் சில மாதங்களுக்கு முன்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைத்த பொது கூட்டத்தில் திரு. சீமான் அவர்களின் பேச்சில் கூட முழுக்க முழுக்க திரு. வைகோவின் ஒவ்வொரு அரசியல் நடவடிக்கையையும் விளக்கமாக சாடி விமர்சித்து பேசினார்.

அப்படி இருந்தும் இப்போதைய அரசியல் சூழலில் தெய்வத்திருமதி வை.மாரியம்மாளின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டது, தன் மீதான தெலுங்கு அமைப்புகளுடைய எதிர்ப்பின் வீரியத்தை திசை திருப்பவே என எண்ணுகிறேன். மேலும், திரு. வைகோவோடு இணக்கமாக இருந்த விடுதலைகளத்தை சேர்ந்த திரு. நாகராஜன் போன்றோரெல்லாம் திரு. சீமானின் இந்த அரசியல் காய் நகரத்தலை நிச்சயமாக எதிர்பார்த்திருக்கவே மாட்டார்கள்.

விவேகமுள்ள வீரம் கண்டிப்பாக வெற்றிக்கு வித்தாகும். வாழ்த்துகள், திரு. சீமான்!

- இரா.ச.இமலாதித்தன்.

27 அக்டோபர் 2015

நாம் தமிழரே மாற்று!



நாம் தமிழர் கட்சியிடமிருந்து அனைத்து கட்சிகளும் கற்றுக்கொள்ள வேண்டிய விசயங்களில் முதன்மையானது, சுவரொட்டி, பதாகைகளில் தான். யாருக்காக, எந்த நிகழ்வுக்காக பதாகை-சுவரொட்டி வைக்கிறோமென்ற செய்தியே வெளித்தெரியாமல், தலைமையை துதி பாடி, தலைமையின் பெயரும் படமும் மட்டுமே பெரிதாக இருக்கும். அவர் அழைக்கிறார், இவர் அழைக்கிறாரென இருக்குமே தவிர, யார் விழாவிற்கு, எந்த நிகழ்விற்கு என்பதே தெரியாமல் போய்விடும்.

முதலில், ஒரு தலைவனை ரொம்பவே மெனக்கெட்டு பெரிய பிம்பமாய் நிலை நிறுத்துகிறார்கள். பிறகு தங்களால் உருவாக்கப்பட்ட மாபெரும் தலைவனென்ற வெறும் பிம்பத்தோடு அருகே நின்று படம் பிடித்து படம் காட்டுகிறார்கள்.

இந்த விதத்தில் நாம் தமிழரே மாற்று.

04 டிசம்பர் 2014

நாம் தமிழரின் சாதி ஒழிப்பு!



நீதியரசரான கிருஷ்ணய்யரை பெயருக்கு பின்னால் அய்யர்ன்னு சேர்த்து சொல்றதை தப்புன்னு சொல்லல. ஆனால், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் பெயரை சுருக்கி முத்துராமலிங்கனார்ன்னு சொல்லும்போது தான் உங்க சாதி ஒழிப்பு கொள்கையில் காறி துப்ப தோணுது. அட த்தூ!

13 ஜூன் 2014

சீமானின் தமிழ்தேசியமும் சாதி ஒழிப்பும்!

திரு.சீமான் ஏன் ஈழத்து அகதி பெண்ணை திருமணம் செய்யப்போறேன்னு சொல்லிட்டு வசதியான வீட்டு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்? இது அவரது தனிப்பட்ட வாழ்க்கைன்னு சொல்லுவீங்க. சரி, திரு. சீமான் ஏன் ஜெயலலிதாவிற்கு ஜால்ரா அடிக்கின்றார்? தன் சாதி சார்ந்த தந்தி டிவிக்காக பகுதிநேர ஊழியர் போல செயல்படுகிறாரே, காரணம் என்ன? தனது சாதிக்காரரான ஆதித்தனார் உருவாக்கிய நாம்தமிழர் கட்சியின் பெயரை அப்படியே இவரும் எடுத்துகொண்டாரே ஏன்? தமிழில் சொல்லுக்கா பஞ்சம்? ஜெயலலிதாவை திரு.சீமான் எப்படி பார்க்கிறார்? தமிழராகவா? தமிழரல்லதவராகவா? இல்லை தன்னுடைய தலைவராகவா?

இந்த அதிமுக ஆட்சியில் திரு.சீமானின் எந்த வித தமிழர் சார்ந்த நடவடிக்கையும் சொல்லும்படியாகவே இல்லையே? ஏன்? இதையெல்லாம் கேட்கும் நான் தெலுங்கனோ கன்னடனோ மலையாளியோ அல்ல. இனத்தால் தமிழன் - சாதியால் தேவன் - பிரிவால் அகமுடையான். சாதி பிரிவை ஏன் சொன்னேன் என்றால், சட்டுன்னு வழக்கமா எல்லாரையும் சொல்ற மாதிரி என்னையும் தெலுங்கன்னு சொல்லுவீங்க. சீமானே சொல்லிருக்காரு, ஒருவனை தமிழன் என்பதை அறிந்து கொள்ள, முதலில் அவனுடைய சாதி பெயரை கேள் என்று! ஏனென்றால், சீமானும் சாதித்தமிழனே...

இதே சீமான், அரசியல் சார்ந்த அமைப்பு தொடங்கும் முன் உ.பி கிறிஸ்துவ தேவலாய பிரச்சனையின் போது, தமிழ்நாட்டிலுள்ள ஹிந்து பெண்களின் தாவணியை உருவ சொன்ன்னவர் தானே? அப்படிப்பட்ட சீமான் அடிப்படையில் மதவாதி, பிறகு சாதிய சார்பு வாதி. அதையெல்லாம் மறந்துவிட்டு சீமானை ஒட்டுமொத்த தமிழ்தேசியத்தின் அடையாளமாக பார்க்க முடியவில்லை. ஏனெனில் சீமான் வருங்கால முதல்வர் என்ற கனவோடு, வருங்காலபிரதமர் கனவில் இருந்த ஜெயலலிதாவோடு மறைமுக கூட்டணியில் இருக்கின்றார். தேர்தலில் பார்பனாரான ஜெயலலிதாவுக்கு களமாடுவதுதான் சீமானைன் தமிழ்தேசியத்தின் ஆரம்பநிலை கொள்கையென்றால், அதை கண்ட மொழிக்காரனும் விமர்சிக்கத்தான் செய்வான்.

முதலில், சீமான் தன்னுடைய (நாடார்)சாதி, (கிருஸ்துவ)மத அடையாள சார்புகளை விட்டு முழுமையாக வெளியாகட்டும். அதன்பிறகு கழுத்து நரம்பு தெறிக்க மேடையில் முழங்கட்டும். அண்ணன் பிரபாகரனோடு படம் எடுத்து கொண்டதை தவிர சீமான் சாதித்தது ஒன்றுமில்லை என்பதே எதார்த்தம். இந்த எதார்த்தத்தை புரியாமல் விசிலடிச்சான் குஞ்சுகள் போல இணையத்தில் உளறிக் கொட்டுபவர்கள் இனியாவது திருந்துவார்களென நம்புவோம்.

- இரா.ச.இமலாதித்தன்