கரந்தை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கரந்தை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

07 மே 2017

செந்தமிழ் திருமகன் உமா மகேசுவரன் பிள்ளை (1883- 1941)





அகமுடையார் குலத்தோன்றல் 'தமிழவேள்' கரந்தை உமாமகேசுவரன் பிள்ளை! இவர் மட்டும் முயற்சி எடுக்காவிட்டால் சாதி வகைபாட்டியலில் முற்பட்டோர் பட்டியலில் இருந்த அகமுடையாரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைந்திருக்கவே முடியாது. இட ஒதுக்கீடே இல்லாமல் தவித்திருக்கும் சமூகமாய் அகமுடையார் இனக்குழு இன்றளவும் இருந்திருக்கும். தமிழை செம்மொழியாக்க வேண்டுமென 1919லேயே கரந்தை தமிழ் சங்கத்தின் மூலமாக தீர்மானம் நிறைவேற்றிய, தமிழ்த்தாய் வாழ்த்தை முதன்முதலாக பயன்படுத்திய பெருமைக்குரிய பெருந்தமிழருக்கு 134 வது புகழ் வணக்கம்!





சுந்தரனார் எழுதிய மணோன்மனியம் நூலிலுள்ள பாடலை, தமிழ்த்தாய் வாழ்த்தாக முதன்முதலில் அறிமுக படுத்தியவர்.

ஸ்ரீமான், ஸ்ரீமதி போன்ற அந்நிய மொழியேற்றத்தை எதிர்த்து, திருமகன், திருவாட்டி என தனித்தமிழில் திருத்தியவர்.

பத்திராதிபர், சந்தா, விலாசம், வி.பி.பி. என்பனவற்றுக்கும் பதிலாக பொழிற்றொண்டர், கையொப்பத் தொகை, உறையுள், விலை கொளும் அஞ்சல் போன்ற தனித்தமிழ் வார்த்தைகளை உருவாக்கி தந்தவர்.

1911ம் ஆண்டில் ஐந்தாம் தமிழ்ச்சங்கமாக, தஞ்சையில் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தை உருவாக்கியவர்.

பல்லாயிர கணக்கான நூல்களை விலை கொடுத்து வாங்கி, அவற்றையெல்லாம் தமிழாய்வுக்காக தனி நூலகத்தை உருவாக்கியவர்.

தமிழ்ப்பொழில் என்ற தமிழ் மொழிக்கான மாத இதழை தொடங்கி தொடர்ச்சியாக நடத்தியவர்.

பார்பனரல்லாதவர் பட்டப்படிப்பு படிக்கவே இக்கட்டான சூழல் நிரம்பிய காலக்கட்டத்தில், அகமுடையார் இனக்குழுவில் பிறந்த இவர் சட்டம் படித்து, இலவசமாக வழக்குரைஞர் பணியையும் திறன்பட சேவை செய்தவர்.

தமிழை செம்மொழியாக்க வேண்டுமென்று 1900 காலக்கட்டத்திலேயே தீர்மானம் நிறைவேற்றியவர்.

பார்பனர் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய அரசியலில், பார்பனரில்லாத கட்சியான 'நீதிக்கட்சி' தொடங்க காரணகர்த்தர்களில் ஒருவராக இருந்தவர்.

முற்பட்டோர் பட்டியலில் இருந்த அகமுடையாரை, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்து இட ஒதுக்கீடு பெற வழி செய்தவர்.

"வான வரிவைக் காணும்போ தெல்லாம் உமாமகேசுரன் புகழே என் நினைவில்வரும்" என பாரதிதாசனால் புகழப்பட்டவர்.

இப்படியான பல பெருமைகளை கொண்ட தமிழவேள் உமா மகேசுவரன் பிள்ளையவர்கள், 07.05.1883ல் அவதரித்து 09.05.1941ல் இம்மண்ணை விட்டு மறைந்தாலும், அவர் புகழ் எப்போதும் மறையாது.

புகழ் வணக்கம்!

- இரா.ச. இமலாதித்தன்

26 ஜனவரி 2016

அகமுடையாராக...

இசைஞானி இளையராஜாவை தமிழ் குடிகளான பறையர்கள், தங்களது சாதியின் அடையாளமாக அடையாளப்படுத்தி பெருமைப்படும் போது வராத கோபம், என் இனக்குழுவான அகமுடையார் உறவுகள் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை பிறப்பால் அகமுடையாரென அடையாளப்படுத்தும் போது மட்டும் சிலருக்கு கோபம் வந்து விடுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் மட்டுமல்ல; அவரின் மருமகன் ஜி.வி.பிரகாஷ்குமாரும் அகமுடையாரென பெருமைப்பட்டு கொள்வோம். தவறில்லையே?!

‪#‎

சொந்த காலில் நிற்க அகமுடையாருக்கு திராணி இருக்கிறது. ஆனால், அகமுடையார் முதுகிலேயே இத்தனை நாட்களாக சவாரி செய்தவர்களுக்கு தான் தனியாக நிற்க முடியாமல் நிலை தடுமாறும். அதனால் தான் மூச்சு தம் கட்டி என்னமோ உளறி கொண்டிருக்கிறார்கள். அனைத்து தமிழ் சாதிகளுடன் இணக்கமாக நட்போடு இருக்க விரும்புகிறோம். ஆனால் முக்குலமென சொல்லி இனியும் முதுகில் சுமப்பதை வெறுக்கிறோம்.

‪#‎

இன்னைக்கு தமிழரல்லாத யாராரோ சூப்பர் ஸ்டாரென போட்டி போட்டுக்கொள்கிறார்கள். ஆனால், அன்றைக்கே தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாராகவும், பெருந் தமிழராகவும் வாழ்ந்து மறைந்தவர், எங்கள் திருமிகு. பி.யூ.சின்னப்பா!

‪#

தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டுமென 1919ம் ஆண்டிலேயே, அகமுடையார் குலத்தோன்றலான திருமிகு. த.வே.உமாமகேசுவரன் பிள்ளையால் உருவாக்கப்பட்ட "கரந்தைத் தமிழ்ச்சங்கம்" தீர்மானத்தை நிறைவேற்றியது.

#

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்! - திருவள்ளுவர்

தனக்கு தீமை செய்யும் பரம எதிரியிடம் உடனுக்குடன் கோபப்படாமல், அந்த எதிரியை வெல்வதற்கான சரியான காலம் வரையிலும் காத்திருந்து அக்கோபத்தை மனதினுள் மறைத்து வைத்திருக்கும் தன்மை அறிவுடையாருக்கு உண்டு. இந்த குறளானது, அறிவுடையாரான அகமுடையாருக்கும் பொருந்தும்.

#

அகம்படி - அகம்படியன் - அகம்படியர் - அகம்படியான் - அகம்படியார் - அகம்படையர் - அகம்படையார் - அகமுடியர் - அகமுடியார் - அகமுடையர் - அகமுடையார் என பல்வேறு காலக்கட்டங்களில் அழைக்கப்பட்ட அகமுடையார் பேரினத்தை, முக்குலம் என்ற போர்வைக்குள் ஒளிந்து கொண்டு சில இழிபிறவிகள், குழப்பம் விளைவித்து வருகின்றனர். அகமுடையார் ஒற்றுமையை கண்டு வயிற்றெரிச்சலில் உளறும், அந்த நபர்களால் தான் அகமுடையாரின் ஒற்றுமை மென்மேலும் அதிகரித்தும் வருகிறது.

நய வஞ்சகர்களுக்கு, அகமுடையார் பேரினம் சார்பாக நன்றி!


24 செப்டம்பர் 2015

அகமுடையார் சங்கமானது முக்குலத்தோர் சங்கமான வரலாறு!


1926 ல் திருத்துறைப்பூண்டியில் முதல் அகமுடையார் சங்க மாநில மாநாடு நடைப்பெற்றது. இந்த மாநாடு உருவாக, கரந்தை திரு. உமாமகேசுவர பிள்ளை, பட்டுக்கோட்டை திரு. நாடிமுத்து பிள்ளை, திருத்துறைப்பூண்டி திரு. ராஜகோபால் பிள்ளை, நாகப்பட்டினம்-அந்தணப்பேட்டை திரு. திருஞானசம்பந்த பிள்ளை ஆகிய நால்வரும் முக்கிய பங்கு வகித்தனர்.
பிறகு, அகமுடையார் சங்க மாநில மாநாடு 1929ல் பட்டுக்கோட்டையிலும், 1931ல் மதுரையிலும், 1932ல் இராமநாதபுரத்திலும் நடந்தது.

அனைத்து மாநாட்டிலும் அந்தெந்த பகுதியை சார்ந்த பொதுவானதொரு சிறப்பு விருந்தினரை அழைப்பது வழக்கமாக்கி கொண்டிருந்ததால், இந்த நான்காவது மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக சேதுபதி மன்னர் வகையினரான, நீதிக்கட்சி அமைச்சரான திரு. சண்முகராஜ நாகநாத சேதுபதி கலந்து கொண்டார். அப்போது மாநாட்டில் சேதுபதி வைத்த கோரிக்கையை ஏற்று பின்னால் திரு. சிவனாண்டி சேர்வையின் முன்னெடுப்பால் அகமுடையார் மாநில சங்கமானது, முக்குலத்தோர் சங்கமாக பெயர் மாற்றம் பெற்றது.

டிசம்பர் மாதம் 1933 ல் நடைபெற்ற சென்னை மாநாட்டில், மாநில அகமுடையார் சங்கமானது, முக்குலத்தோர் சங்கமென முழுமையாக உருமாற்றம் பெற்றது. அந்த மாநாட்டின் பெயரானது மூவேந்தர் குல மாநாடு என பெயர் சூட்டப்பட்டிருந்தது.

இன்றைக்கு பவளவிழா கண்டு இயங்கி வரும் தமிழ்நாடு முக்குலத்தோர் சங்கத்திற்கான விதையானது, 1926 ல் உருவாக்கப்பட்ட மாநில அகமுடையார் சங்கத்திடமிருந்து கிடைத்தது என்பது தான் மறுக்க முடியாத, மறக்கடிக்கப்பட்ட வரலாறு. இந்த விருட்சத்தின் பலனான நிழலானது, விதைக்கும் - வேர்க்கும் கிடைக்கவே இல்லை என்பதுதான் வருத்தமான விசயம்.

- இரா.ச.இமலாதித்தன்