13 மார்ச் 2015

சினிமாவுக்கு பின்னாலும் அரசியலே

கிட்டத்தட்ட பதினோறு வருசங்களுக்கு முன்னாடி ”சண்டியர்”ன்னு பெயர் வைக்க கூடாதுன்னு மிரட்டல் விட்ட புதிய தமிழகத்தின் தலைவர் கிருஷ்ணசாமிக்காக ”விருமாண்டி”ன்னு பெயரை மாற்றி படத்தை வெளியிட்டார் கமல்ஹாசன். கோடி கணக்குல பணத்தை செலவு பண்றவனுக்கு தானே வலி தெரியும். எத்தனை பைனான்சியர்கிட்ட எவ்வளவு வட்டிக்கு பணத்தை வாங்கி படத்தை தயாரிப்பாளர் தயாரிச்சாரோ? கடனை வாங்கி ஒரு படம் வெளியீட்டுக்கு தயாரானாலும் கூட தியேட்டர் கிடைக்கிறதுல்ல. அப்படியே தியேட்டர் கிடைச்சாலும் வெடிகுண்டு மிரட்டல் விட்டு, தியேட்டர் பக்கம் வர ஒன்னு ரெண்டு கூட்டத்தையும் பயமுறுத்தியே காலி பண்ணிடுறாய்ங்க. இந்த மாதிரி இவ்வளவு சிக்கல்களுக்கு மத்தியில் படத்தை ஒருவழியா வெளியிட்ட பிறகும், அந்த படம் ஓரளவுக்காவது ஓடுமா? ஓடாதா?ன்னு பிரசவ வலி போல மொத்த பட யூனிட்டும் துடிச்சிக்கிட்டு இருக்கிறப்போ, அரசியல்வாதிகளினாலும் இடையூறும் வந்துடுது.

தேர்தல் நேரத்துல அதிமுக, திமுகன்னு மாறி மாறி காலில் விழுந்து ஒன்னு ரெண்டு சீட்டுகளை பிச்சை வாங்கி எம்.எல்.ஏ. / எம்.பி ஆனதுக்கு பிரயோசனமா, மக்களுக்கு ஏதாவது உருப்படியா நல்லது பண்ண பாருங்கய்யா. நீங்க அரசியல் பண்றதுக்கு சினிமாவை தொழிலாக செய்து பிழைப்பை நடத்தும் லைட்மேன் தொடங்கி துணை நடிகன் வரையிலான சினிமா தொழிலாளர்களின் வயித்துல ஏன்யா அடிக்கிறீங்க? உழைக்கும் வர்க்கத்திடம் சாதி வெறியை தூண்டி, இழிவானதொரு அரசியல் வியாபரம் செய்யுறப்பவே இந்த மாதிரி அலப்பறைய கொடுத்திங்கன்னா, உண்மையாவே நேர்மையான அரசியல் செய்தால் என்னவெல்லாம் பண்ணுவீங்க? ஷப்பா... நினைச்சாலே கண்ண கட்டுது. சாதி அரசியல் செய்றப்போ ”மன்னர் பரம்பரை”ன்னு சொல்லி மேடை போட்டு ஊர்வலம் போறது. போற வழியில ஏதாவது ஒரு தகராறுல அடிதடி சண்டையா ஆய்டுச்சுன்னா ”தாழ்த்தப்பட்டவர்களின் மீது தாக்குதல்”ன்னு அந்தர் பல்டி அடிக்கிறது. இந்த மாதிரி கேவலமான அரசியல் செய்து கொண்டிருக்கும் இவ்வேளையில், சண்டியருக்கு பிறகு மீண்டும் பதினோறு வருடஙகள் கழித்து ”கொம்பன்” என்ற படத்திற்கு தடை விதிக்க வேண்டுமென்று அதே கிருஷ்ணசாமி அறைகூவல் விடுக்கின்றார். காரணம் என்ன? தேர்தல் நெருங்கிடுச்சு. இப்படி ஏதாவது பண்ணி ஊடகங்களில் கட்சி பேரு வந்தால் தானே, அதிமுக, திமுக கிட்ட ஒன்னு ரெண்டு சீட்டு கேட்க வசதியா இருக்கும்.

தமிழ் தமிழ்ன்னு பேசுற கிருஷ்ணசாமிக்கு வக்கிருந்தால், தேர்தலில் தமிழகமெங்கும் தனித்து நின்று வெற்றி பெறட்டுமே. எதற்காக சினிமா தொழிலாளர்களை சீண்டி பார்த்து அரசியல் செய்ய வேண்டும். ஏற்கனவே பட தயாரிப்பாளர்களில் பாதி பேரு காணாம போய்ட்டாங்க. மீதமிருக்கும் தயாரிப்பாளர்களை தக்க வைக்க, மூனு மாசம் படம் பிடிப்பே கிடையாதுன்னு கலைப்புலி தாணு சொல்லிருக்காரு. இதுல இப்படியும் இடைஞ்சல் கொடுத்தால் சீரியல் தான் பார்த்துக்கிட்டு கிடக்கணும்.

கொம்பன் - இம்மண்ணின் மைந்தர்களின் படம். தமிழ் பண்பாட்டு கலச்சாரத்தை பிரதிபலிக்கு படம். இதை எதிர்க்க எவனுக்கும் அறுகதை இல்லை. சென்சார் போர்டே அனுமதி வழங்கிய பின்னால், மத்த எந்த அரசியல் ப்ரோக்கருக்கும் அடிபணிய அவசியமில்லை. ”கொம்பன்” வெற்றி பெற வாழ்த்துகள்!

(Komban Official Page)

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக