காவிரித்தாயின் கோரத்தாண்டவம்!


'காவிரித்தாய்க்கு பாராட்டு விழா' எடுத்த பொறம்போக்குகளின் நிலங்களில் ஹெலிபேடு அமைக்க ஆயிரம் ஏக்கர் நிலங்களை கூட ஆக்கிரமித்து தார் சாலையையும், சுற்று வட்டாரத்திலெல்லாம் கான்கிரீட்டையும் போட்டுக்கொள்ளட்டும். ஆனால், ஜெயலலிதா சுற்றுப்பயணம் சென்ற இடங்களில் விவசாய நிலங்களை ஏக்கர் கணக்கில் ஆக்கிரமித்து அழித்ததை எந்த பசுமை தீர்ப்பாயமும் கண்டு கொள்ளாது. ஜெயலலிதாவின் தேர்தல் பரப்புரையை காண வந்த இடத்தில் நடைபெற்ற பல உயிரிழப்புக்காக எந்த மனித உரிமை ஆணையமும் வாயை திறக்காது. இதுதான் ஜெயலலிதாவின் ஆணவத்திற்கு அடித்தளமாகவும் அமைகிறது.

காவிரியின் மைந்தனாக ஒருங்கிணைந்த தஞ்சையான நாகையில் ஒரு விவசாய பெருங்குடியில் பிறந்த என்னைப்போன்ற பலருக்கு, ஹெலிபேடுக்காக ஏக்கர் கணக்கில் விவசாய நிலத்தை ஆக்கிரமித்து அம்மண்ணின் அடிப்படை வளத்தையே அழித்தொழித்த ஜெயலலிதா, என்றைக்குமே அந்நியராகத்தான் தெரிவார். ஒருபோதும் காவிரித்தாயாக தெரிய மாட்டார். காலம் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லும்; அந்த காலமும் நிச்சயம் வரும்.

- இரா.ச. இமலாதித்தன்

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment