ஓர் அரசியல்வாதி உருவாகின்றான்!


கொஞ்சம் கூட கூச்சம், வெட்கம் இதெல்லாம் இருக்காதா? தன்னெழுச்சியாக இளையோர் கையிலெடுத்து வெற்றிக்கண்ட ஜல்லிக்கட்டு போரட்டத்தை, தன்னுடைய சுயலாபத்திற்காகவும், புகழ் போதைக்காகவும் சுய இன்பம் செய்து கொள்வது போல கூட்டத்தோடு கூட்டமாக சேர்ந்து கும்மியடித்து விட்டால் 'மக்கள் சூப்பர் ஸ்டார்' ஆகிவிட முடியுமா? காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதை போல, 'ஒரு கோடி ரூபாய் தரேன்!' என வாயாலேயே வடை சுட்டுவிட்டால் மக்கள் எல்லாரும் நம்பி விடுவார்களா என்ன? சூப்பர் ஸ்டாரென அடையாளப்படும் ரஜினியையே மக்கள் அனைவரும் தற்போதைய சூழலில் ஏற்று கொண்டுள்ளனரா என்பதே கேள்விக்குறி தான். தமிழ்நாட்டை பொறுத்த வரை மக்கள் ஏற்று கொண்டுவிட்டால், மாட்டு சாணம் கூட (பிடி பிள்ளையார்) கடவுள் தான். வக்கிருந்தால், சென்னைக்காரன் என பில்டப் கொடுக்கும் லாரன்ஸ், ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கி மக்கள் சூப்பர் ஸ்டாரென தன்னை நிரூபிக்கட்டும் அதையெல்லாம் விட்டுவிட்டு இந்த மானங்கெட்ட பொழப்பு எதற்கு? த்தூ...

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment