28 மார்ச் 2017

அரசியலுக்கு லாயக்கற்ற கருணாஸ்!




ஏற்கனவே, 'இரட்டை இலை' சின்னத்தில் நிற்பதற்காகவே, தன்னை அரசியலில் அடையாளப்படுத்திய அமைப்பின் பெயரான 'முக்குலத்தோர் புலிப்படை' என்பதையே வெறும் 'புளிப்படை'யாக மாற்றி சமத்துவ காவலனாக இரட்டை வேடம் போட்ட போதே உடனிருந்தவர்களின் ஆதரவும் குறைந்து போனது. இங்கே கவனிக்கப்பட வேண்டிய விசயம் என்னவெனில், முக்குலத்தோர் என்பதே போலியான ஒரு கூட்டமைப்பு; அந்த வார்த்தையால் கள்ளர் - மறவர் என்ற இருகுலத்தோர் மட்டுமே பயன்பெற்று வருகிறார்கள்; இந்த எதார்த்த கள நிலவரங்களையெல்லாம் அகமுடையாரான கருணாஸ் கடைசிவரை புரிந்து கொள்ளவே இல்லை. அதற்கடுத்து, கூவத்தூரில் கூத்தடித்த கோமாளிகளின் தேவைகளுக்காக கண்டதையெல்லாம் 'சேவை' செய்த போதே கொஞ்சம் நஞ்சமிருந்த மானமரியாதையும் போச்சு.

இனிமேல் அந்த லெட்டர்பேடு அமைப்பில் தலைவராக இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? இதே கருணாஸை, தமிழ்நாடு தேவர் பேரவையினர் கடுமையாக போரட்டம் நடத்தி எதிர்த்த போது, அகமுடையார் இனக்குழுவை சார்ந்தவரென்பதால் எவ்விடத்திலும் விட்டுகொடுக்காமல் ஆதரவளித்த எங்களை போன்றவர்களையும், கூவத்தூர் கூத்துகளால் கேவலப்படுத்திய கருணாஸை இம்முறை எதிர்க்கிறோம். உணர்வை தூண்டும் வெறும் பேச்சை மட்டுமே முதலீடாக வைத்து சமூக அரசியலில் நீடித்திருக்க முடியாதென்பதை கருணாஸ் இனியாவது உணரட்டும். சுயசாதிக்கென்று இருக்கும் விவேகத்தோடும், அகமுடையார் என்ற உண்மையான அடையாளத்தோடும், விஷால் போன்ற அந்நியரின் துணையுமின்றி தமிழ்தேசிய அரசியலில் புது அவதாரமெடுக்க வாழ்த்துகள்!

- இரா.ச. இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக