கருப்பு இம்மண்ணின் பெருமைமிகு அடையாளம்!நிறத்தால் கருப்பானவன் என்பதில் எனக்கு பெருமையே. இம்மண்ணின் பூர்வகுடிகளின் இயல்பான நிறமே கருப்பு தான். அதனால் பிறப்பால் இம்மண்ணின் மைந்தனென அடையாளப்படுவதும் கூட இந்த கருப்பு தான். ஆரியர்கள் போன்ற அந்நியர்கள் தான் கருப்பில்லாத நிறத்தில் மனம் முழுக்க கருத்த எண்ணங்களோடு எம்மண்ணை சூழ்ச்சியால் ஆக்கிரமித்தனர். அரப்பா நாகரீகத்தை அழித்தொழித்த வரலாற்று பெருமையை தன்னகத்தே கொண்டவர்களின் வழிவந்த தருண்விஜய் போன்றோர்கள், எம்மைப்போன்ற கருப்பர்களோடு சகித்துக்கொண்டு எம் மண்ணில் ஏன் வாழ/ஆள வேண்டும்? கைபர் போலான் கணவாய் வழியே கால்நடையாக நாடோடியாய் கடந்து வந்தது போலவே, இப்போதும் மீண்டும் தங்களது சொந்த பகுதிக்கே கிளம்பிச்செல்லலாமே?

ராமனும், கண்ணனும் என்ன நிறமென்பதை சகிப்புத்தன்மையுடைய வந்தேறிகள் நினைவூட்டிக்கொள்ள வேண்டும். கலப்பில்லாத நிறம் கருப்பு என்பதையும் இனிமேலாவது அந்த அந்நியர்கள் உணர வேண்டும். "இன்றைய ஹிந்தியா முழுமைக்குமுள்ள நிலத்திற்கு சொந்தக்காரர்கள், இம்மண்ணின் மைந்தர்களான பூர்வகுடி தமிழர்கள் தான்!" என்பதை 'வந்தேறி' பற்றிய கேள்விக்கு, நிறத்தால் சிவப்பாய் இருந்த பீமராவ் அம்பேத்கர் அன்றைக்கே இவ்வுண்மையை ஊரறிய சொல்லிருப்பதே தமிழர்களின் பாரம்பரியத்திற்கான சாட்சி. வந்தேறிகளே எங்களையும், எம் மண்ணையும், எம் பண்பாட்டையும், எம் ஆன்மீகத்தையும், சுரண்டியது போதும்; எங்களைப்போன்ற கருப்பர்களை விட்டு வெளியே கிளம்புங்கள்!

சிவப்பாய் இருக்கும் இவர்கள் செய்யும் கூத்துகளுக்கெல்லாம் முட்டுக்கொடுக்கின்ற தமிழக பாஜக தலைமையாக இருந்த பொன்.ராதாகிருஷ்ணனுக்கும், தற்பொழுது தலைமையாக இருக்கும் தமிழிசை செளந்தரராஜனுக்கும் இல்லாத சகிப்புத்தன்மையா தருண் விஜய்க்கு இருக்கிறது? வேண்டுமென்றால், சிவப்பாய் இருக்கின்ற சு.சுவாமியையோ, ஹெச்.ராஜாவையோ இங்கே தலைமையாக்குங்கள் பார்ப்போம். 'கருப்பு' தான் இம்மண்ணின் அடையாளம். அதை நாளைவொருநாள் தமிழக தலைமை பதவிக்கான சரியான தலைவராக (ஒருவர்) வரும்போது 'கருப்பை' பற்றி தருண் விஜய் புரிந்து கொள்வார்.

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment