ஒரு நாயகன் உதயமாகிறான்!யாரை எத்தனை மாதங்கள் காதலிப்பது என்பதை கூட தனிமனித உரிமையோடு அணுகிய நயன்தாராதான், இனிவரும் நாட்களில் யாரோடு ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டுமென்பதையும் முடிவு செய்ய வேண்டுமே தவிர; நாம் அல்ல! 'உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல், தோன்றின் புகழோடு தோன்றுக' என்ற குறள்களுக்கேற்ப சூப்பர் சரவணா ஸ்டோர்ஸின் அதிபர் சரவணன் சொன்னதில் எந்த தவறுமில்லை; பவர் ஸ்டார் சீனிவாசன் கூட சமீபத்தில் சூப்பர் ஸ்டார் தான் எனக்கு போட்டியென சொன்னதையும், முன்பொரு தடவை இதே மாதிரி சொல்லிருந்த லிவிங் ஸ்டார் லிவிங்ஸ்டனையெல்லாம் கடந்து தானே வந்திருக்கிறோம். வேகமாக சுழலும் காலச்சக்கரத்தில் தன்னை நிலைநிறுத்த தெரிந்தவை மட்டுமே தாக்குபிடிக்குமென்பதற்கு 'துள்ளுவதோ இளமை' தனுஷ் கூட ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு தான். இதுவும் கடந்து போகும்!

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment