25 பிப்ரவரி 2016

தடம் புரளும் நடிகர் கருணாஸ் அகமுடையார்!


கடந்த 21-02-2016 அன்று மதுரை, காந்தி மியூசிய அரங்கில் நடிகர் கருணாஸ் அகமுடையாரின் பிறந்தநாள் விழா, ”முக்குலத்தோர் முகவரி” என்ற இதழ் வெளியீட்டு விழா, சாதனையாளர் விருது வழங்கும் விழா என முப்பெரும்விழா முக்குலத்தோர் புலிப்படை சார்பில் நடைபெற்றது.
நடிகர் கருணாஸ் அகமுடையார், முக்குலத்தோரே இல்லை என்று சொல்லி அவர் வீட்டு முன்பாக “தமிழ்நாடு தேவர்பேரவை” என்ற அமைப்பின் சார்பில் மறியல் போராட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டு சிலர் கைதாகிய பழைய சம்பவங்களை நடிகர் கருணாஸ் அகமுடையார் மறந்துவிட்டதாக இந்த விழாவின் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. மேலும், முகநூலிலும் இந்த சர்ச்சை கள்ளர் – மறவர்களால் எழுப்பப்பட்டு, அவருடைய சாதிச்சான்றிதழை அவர் சார்ந்த அகமுடையார் சமுதாய உறவுகளான எங்களை போன்றவர்களால் வெளியிடப்பட்டு, இவருக்காக மல்லுக்கு நின்ற வரலாறையும் நடிகர் கருணாஸ் அகமுடையார் வெகு எளிதாக மறந்துவிட்டதாகவும் தெரிகிறது.

விழாவை பார்வையாளர் முதல் வரிசையிலிருந்து இயக்கிக்கொண்டிருந்த எவரும் நடிகர் கருணாஸ் அகமுடையாரை, “முக்குலத்தோரே இல்லை” என்ற பிரச்சனை வந்தபோது வாய்மூடி மௌனம் காத்தவர்கள் மட்டுமல்ல; ”அவர் அகமுடையார் என்றாலும் கூட இன்னொரு சாதியில் கல்யாணம் பண்ணியவர் தானே” என்று நடிகர் கருணாஸ் அகமுடையாரை இளக்காரம் பேசியவர்களும் தான். மேலும், கருணாஸ் அகமுடையார் வீட்டு முன்பு போராட்டம் நடத்தியவர்களுக்கு ஆலோசனை சொன்னவர்களின் வழிகாட்டுதலில் தான் அந்த விழா நடந்தேறியது.

இதெல்லாம் நடிகர் கருணாஸ் அகமுடையாருக்கு தெரியுமா?
நடிகர் கருணாஸ் அகமுடையார் சாதனையாளர் விருது வாங்கியவர்களில் ஒருவர், ”நடிகர் கருணாஸ் பின்னால் முக்குலமும் அணிவகுத்து வரவேண்டும் என்றும், கருணாஸ் மற்ற தலைவர்களைப்போல் போய்விடமாட்டார், நிற்பார்” என்று பேசியதை தன் பேச்சில் குறிப்பிட்டு பெருமை பேசிய கருணாஸ் அகமுடையாருக்கு, அந்த விருதுபெற்றவர் முக்குலத்தோர் அமைப்புக்கள் அத்தனையிலும் மாறி மாறி, தாவித்தாவி சலுகை அனுபவித்து விட்டு, இருந்த அமைப்பின் தலைமையை புறம்பேசித் திரிபவர் என்பதும் நடிகர் கருணாஸ் அகமுடையாருக்குத் தெரியுமா? அவர் தான், மாமன்னர் மருதுபாண்டியரை இழிவுபடுத்தி தொடர்ச்சியாக சாதியக்கூட்டங்களில் பேசிவருபவர் என்பதும் கருணாஸ் அகமுடையாருக்கு தெரியுமா?என்று கூட தெரியவில்லை.

முக்குலத்தோரில் கள்ளர் - மறவர் என தனியாக அமைப்பு நடத்தி வருபவர்களுக்கு கூட அவ்விழாவில் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. ஆனால் அகமுடையார் என அமைப்பு நடத்திய யாருக்கும் எந்தவொரு விருதும் வழங்கப்படவில்லை. ஒப்புக்காக, முக்குலத்தோர் அமைப்புக்களில் அங்கம் வகிக்கும் அகமுடையார்களில் இருவருக்கு பெயரளவுக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. ஆனால் மாமன்னர் மருதுபாண்டியர் பெயரிலோ, அகமுடையார் என்ற பெயரிலோ தனி அமைப்பாக நடத்திவரும் எந்தவொரு அமைப்பினைச் சேர்ந்தவர்களும் விருது வழங்கும் இப்பட்டியலில் இல்லை என்பது திட்டமிட்ட ஒதுக்கல் என்பது கருணாஸ் அகமுடையாருக்குத் தெரியுமா?

மொத்தத்தில் நடிகர் கருணாஸ் அகமுடையார் தன்னை சாதியத்தலைவனாக அடையாளப்படுத்தி முக்குலத்தோர் அரங்கில் பவனிவர பின்புலமாயிருந்த அகமுடையார் சமுதாயத்தை அவமதிக்கும் வகையில் அந்த விழா இருந்தது என்பதை இப்போதைக்கு அவர் உணர வாய்ப்பில்லை.
இப்படி தொடர்ச்ச்சியாக நடிகர் கருணாஸ் அகமுடையார் அவர்கள், ஒட்டுமொத்த அகமுடையார்களை புறக்கணித்தாலும் கூட, எந்தவொரு பிரச்சனையோ, அரசியல் சறுக்கல்களோ இக்கட்டான சூழல்களோ அவருக்கு ஏற்படும்போதெல்லாம் அகமுடையாராகிய நாங்கள் அவருக்கு தோள் கொடுப்போம். இதை அவர் இன்று மறந்திருக்கலாம்; ஒருவேளை அப்படியொரு சூழல் உருவாகும் போது, அவருக்காக செயலாற்றி நினைவூட்டுவோம் அகமுடையாராக! என்னதான் எங்களை புறக்கணித்தாலும், நடிகர் கருணாஸ் அகமுடையாருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக