முதலியார் அரசியலால் ஏ.சி.எஸ் ஏமாற்றப்படுவார்!

அனைத்து முதலியார் பிள்ளைமார் சமுதாய ஒருங்கிணைப்பு கூட்டம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், வேலூர் வி.ஐ.டி. வேந்தர் ஜி.விஸ்வநாதன், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கே.கணேஷ், சோழிய வேளாளர் சங்க தலைவர் ஜெயபால், இம்பா நிறுவன தலைவர் ஆர்.அருணாசலம், திரைப்பட டைரக் டர் ஆர்.கே.செல்வமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் துளுவ வேளாளர், சோழிய வேளாளர், செங்குந்தர் உள்பட பல்வேறுபிரிவுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டனர்.

"தமிழக அரசியலில் ஆண்ட பரம்பரை மீண்டும் எழ வேண்டும் என்ற நோக்கத்தோடு, அனைத்து முதலியார் பிள்ளைமார் கூட்டமைப்பு சார்பில், அமைப்பு ரீதியாக ‘பேரறிஞர் அண்ணாவின் கூட்டமைப்பு’ என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டமைப்பிற்கான 9 பேர் கொண்ட குழு விரைவில் தேர்வு செய்யப்பட்டு ஒரு மாநாடு நடத்த இருக்கிறோம்.இந்த புதிய குழு தேர்வு செய்யப்பட்ட பிறகு, தமிழக சட்டமன்ற தேர்தலை எவ்வாறு சந்திப்பது என்ற வியூகம் அமைக்கப்படும். புதிய கூட்டமைப்பு வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழகம் தழுவிய மாற்றத்தை உருவாக்கும். புதிய நீதி கட்சி வேறு, இந்த புதிய கூட்டமைப்பு என்பது வேறு."

- ஏ.சி. சண்முகம்

முக்குலத்து அரசியலில் இருந்து தெற்கத்திய அகமுடையார்கள் தனித்த அடையாளத்தோடு செயல்படுவது போலவே, முதலியார் அரசியலில் இருந்து வடக்கத்திய அகமுடையார்களும் தனித்து களமிறங்கும் இவ்வேளையில், வெண்ணெய் திரண்டு வரும்போது பானையை உடைத்த கதை போல ஏ.சி.எஸ் செயல்படுவது வேதனையான விசயம். ஏ.சி.எஸ் பின்னால் இன்னமும் அவரை நம்பி நிற்கும் உணர்வுள்ள அகமுடையார்களை இப்படி இழிவுபடுத்துவது பச்சை துரோகம். ஏ.சி.எஸ் போன்றோரின் இச்செயலை அனைத்து அகமுடையார் பேரினமும் கண்டிப்பார்களென நம்புகிறேன்.

- இரா.ச.இமலாதித்தன்

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment