வேதாரண்யம் மகோதய அமாவசையும் - அகமுடையார் நலச்சங்கமும்!


”தை மாதம் - திங்கட்கிழமை - திருவோணம் நட்சத்திரம்” இந்த மூன்றும் கூடி 27 ஆண்டுகளுக்கு பிறகு 2016ல் 28ம் ஆண்டில் வந்து இருக்கும் இந்த அமாவசையே, மகோதய அமாவாசை என்கிறோம்.

நேற்று திருமறைக்காடு என்கிற வேதாரண்யத்தில் மகோதய அமாவாசையை முன்னிட்டு பல லட்சக்கணக்கான ஆன்மீகத்தில் நாட்டமுள்ள கேரளா - கர்நாடகா - ஆந்திரா என பல்வேறு மாவட்டங்களையும் மாநிலங்களையும் சேர்ந்தவர்கள் வந்திருந்தனர். கோடிக்கரை கடலில் மூழ்கி நீத்தார் வழிபாடு செய்துவிட்டு, பிறகு ஐந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடி வேதாரண்யத்திலுள்ள திருமறைக்காட்டு நாதரையும் வழிபட்டு சென்றனர்.

இத்தனை லட்சம் மக்கள் கூடுங்கிற இடத்தில், ஒரு லட்சம் வாகனங்கள் நிறுத்த இடத்தை பல்வேறு இடங்களில் ஒதுக்கிருந்தது அரசாங்கம். ஆனால், அங்கு வந்தவர்களின் பசியை போக்க, கோவில் நிர்வாகமோ, அரசாங்கமோ, ஆன்மீக அமைப்புகளோ எந்தவித அன்னதான ஏற்பாடுகளை செய்யவில்லை. அப்படி இருந்தும் ஒரு லட்சம் பேருக்கும் மேற்பட்ட ஆன்மீக பற்றாளர்களுக்கு ”வேதாரண்யம் அகமுடையார் நலச்சங்கம்” சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டு கொண்டிருந்தது. பார்க்கவே ரொம்ப பெருமையா இருந்தது. மாமன்னர் மருதுபாண்டியர் படங்களோடு ப்ளக்ஸ்களும், அகமுடையார் சங்கம் என்ர பேட்ஜ் அணிந்த அனைவரும், பல்வேறு மாநிலத்தை சேர்ந்த லட்ச கணக்கான மக்களுக்கு அன்னதானம் வழங்கி ஒட்டுமொத்த அகமுடையார்களுக்கும் பெருமை சேர்த்தனர்.

அறநலத்துறையை வைத்திருக்கும் அரசாங்கமே செய்ய மறந்த ஜீவகாருண்யத்தை தன்னலமின்றி செய்த, வேதாரண்யம் அகமுடையார் நலச்சங்கத்திற்கு எம் வாழ்த்துகளும் நன்றிகளும்!

- இரா.ச.இமலாதித்தன்

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment