29 ஜூலை 2016

மாவலி மாவேந்தன்

மாவலி யென்பானொரு மாபெருஞ் சேரவேந்தன்,
மானமிகுந் தமிழ மறவனன்றோ.
பாவலரும் பின்னரே பகையொடு சேர்ந்தவனைப்
பழித்துவரும் மடமைத் திறமும் நன்றோ

நாவலந் தீவிலெங்கும் நாயகச்செங் கோலோச்சி
நன்மை பலவுஞ் செய்த காவலனே
யாவரும் எதிர்க்கினும் யானைத்திரளைக் கொல்லும்
யாளிபோல் வெல்லும் பெருமாவலனே

தேவருக் கென்றும்பல தீமைசெய்து வந்ததால்
திருமாலின் அடியினால் தீர்ந்தான் என்பார்
தேவுரையே மாற்றிலும் திருப்பற்று வாய்மை வண்மை
திடமாயவன் கொண்டதைத் தேர்ந்து முன்பார்

மாவலி மரபிலே வந்த சீர்த்தியைக் கிள்ளி
வளவனுந் தேவியாக மணந்திருந்தான்
மாவலி மருகராம் வாணகோ வரையரும்
வளவன்கீழ்ச் சிற்றரசாய் இணைந்திருந்தார்

ஆரியத்தை யெதிர்த்த அருந்தமிழ் வேந்தரெல்லாம்
அசுரரென்றே பண்டைநாள் அழிக்கப்பட்டார்
சீரிய அறிவியல் செழித்துவரு மிந்நாளும்
செந்தமிழ்த் தலைவரே பழிக்கப்பட்டார்

திருவோண நாளிலின்றும் குடிகளின் நலங்காணத்
திரும்பிவரும் மாவலி என்று சொல்வார்
அருளோடும் அவன்அந்நாள் அரசுபுரிந்த வுண்மை
அறிவிக்கும் இதுவொன்றே கண்டு கொள்வீர்

- ’மொழிஞாயிறு’ ஞா.தேவநேயப் பாவாணர்,
(”இசைத் தமிழ்க் கலம்பகம்”, 51. மாவலி மாவேந்தன்)

சைவ 'நந்தி தேவரே' சமணத்தில் 'ரிஷப தேவரா'கவும் இருக்கிறார். அந்த ரிஷபதேவரின் மகனுடைய பெயர்தான் 'பாகுபலி'. அப்படிப்பட்ட மாவீரனின் பெயரில் வெளிவந்த 'பாகுபலி' படத்தின் இரண்டாம் பாகத்தின் பெயர் அகமுடையாரின் மரபுவழித்தோன்றலான வாணாதிராய வம்சத்தை சேர்ந்த 'மகாபலி' என்ற பேரரசனின் பெயரை வைப்பார்களென நினைக்கிறேன்.

#வெட்டுமாவலிஅகம்படி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக