09 செப்டம்பர் 2022

காசுக்காக காலை நக்கும் உலகம்!

”ஃப்ரெண்ட் விசயத்துல கணக்கு பார்க்க மாட்டேன். கணக்கு விசயத்துல ப்ரெண்ட்டே பாக்க மாட்டேன்” என சிறுத்தை படத்தில் பாதி மொட்டை அடித்து பணம் பிரிக்கும் காட்சியில் சந்தானத்திடன் கார்த்தி சொல்வாப்ள. அந்த மாதிரி காசு விசயத்தில் அனைவருமே கார்த்தி வகையறா தான்!

இதே கார்த்தி, சிறுத்தை போன்றதொரு திரைப்படத்தில்
மட்டுமில்லாது, தெலுங்கு திரைப்பட விழாவில் கூட “எனக்கு தமிழ் ஆடியன்ஸை விட டெபனட்டா தெலுகு ஆடியன்ஸ தான் பிடிக்கும்!” என பிசினஸிற்காக கூச்சமே படாமல் சொல்வாப்ள. அது போலத்தான் இங்கே பலரும்.
இதில் அப்பா, அம்மா, மாமனார், மாமியார், அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, மச்சான், சகலை, நாத்தனார், ஓப்பிடியா என எந்த வேறுபாடும் இல்லை. இடத்துக்கு தகுந்தாற்போல எல்லாரும் பணம் காசு வச்சிருக்க ஆளுக்கு தான் பல்லாக்கு தூக்குவாங்க. செருப்படி வாங்குறதுல கூட காசு இருக்கவன் தங்க செருப்பால அடிச்சா, ரெண்டு அடி எக்ஸ்ட்ராவா கேட்டு வாங்கிப்பாங்க.
”என்ன பண்ணி தொலைக்கிறது. காசுக்கு எச்சில் விட்டு, வசதி படைத்தவனின் காலை நக்கும் இந்த சொந்தக்கார நாய்களை நம்ம வீட்ல நடக்குற நல்லது கெட்டதுக்காக சகித்து கொள்றோம்” என மனதிற்குள் புழுங்கி கொள்வர்களே இங்கு அதிகம். ”காசுக்கு பீ திங்கிறதை காரணங்காட்டி நாம் ஒதுங்கி போனாலும், ’சொந்தம் பந்தம்ன்னு யாருமே இல்ல போல’ என ஊருதெருவுல உள்ளவன் நம்மள காறி துப்புவானுங்களே” என்ற பயத்தில் தான் முக்கால்வாசி பேர் இந்த ஈனக்கூட்டத்தை சகித்துக்கொண்டு போகிறார்கள்.

ஒருவன் கஷ்டப்படுகின்ற காலங்களிலோ, சாதாரண நிலையிலோ, அவனிடமிருந்து தூர நின்று கண்டும் காணாமாலும் கடந்து சென்று விட்டு, திடீரென காசு பணம் பதவி புகழென என கஷ்டப்பட்டவன் செட்டிலான காலங்களில் அவனது காலை நக்கி பிழைக்கும் நயவஞ்சகர்களுக்கு பெயர் சொந்தக்காரர்கள்!

- இரா.ச. இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக