11 செப்டம்பர் 2022

90ஸ் கிட்ஸ்களின் கனிவான கவனத்திற்கு! அத்தியாம்: 1


90ஸ் கிட்ஸ்களின் கனிவான கவனத்திற்கு! அத்தியாம்: 1


கல்யாணத்துக்கு அப்பறம் சுதந்திரம் பறிபோய்டும்.

சுயமா ஒரு சின்ன முடிவு கூட எடுக்க முடியாது.

வெளியூர் இல்ல, வீட்டை விட்டு வெளிய போக கூட ஆயிரத்தெட்டு கண்டிசன்கள் வரும்.

லேட் நைட் வர முடியாது. 7.30 மணியே லேட் நைட் கணக்குல தான் வரும். வரலைலைனா ஏழரை தான்.

லீவு நாளு, திருவிழா நாளுன்னு ஃப்ரெண்ட்ஸ பார்க்க கூட வெளிய போக முடியாது.

ப்ரெண்ட்ஸோட கல்யாணமோ, கோவிலுக்கோ வெளியூர் கிளம்புறதுக்கு ப்ரெண்ட்ஸ் மட்டும் போற மாதிரி ப்ளான் பண்ற தகவல் கிடைச்ச நொடியிலிருந்து வீட்டுக்குள்ள பூகங்கம் கிளம்பும்.

கடைத்தெரு, தியேட்டர், ஹோட்டல்ன்னு அடிக்கடி போய்கிட்டே இருக்கணும். மணிபர்சையும் டயட்லேயே வச்சிக்கணும்.

சோசியல் மீடியாவுல ஒரு போஸ்ட், கமெண்ட் கூட போட முடியாது. எப்ப பார்த்தாலும் மொபைல் தானான்னு சண்டை வரும்.
 
காமெடி வீடியோக்களை கூட சலனமில்லாம சிரிக்காம பார்த்து பழகிக்கணும். சிரிச்சா போச்சு.

நிம்மதியா ஹெட்ஃபோன் போட்டு பாட்டு கூட கேட்க முடியாது. உங்க அம்மா இப்படி சொல்லிட்டாங்க, உங்க அப்பா இப்படி சொல்லிட்டாரு, உங்க குடும்பத்துல உள்ளவங்க அதை பண்ணிட்டாங்க, இதை பண்ணிட்டாங்கன்னு சொல்லிச்சொல்லி, நம்ம காதுக்கு ரெஸ்டே இருக்காது.

இவ்ளோ சொல்லியும் ஏன்னு போய் அவங்கள கேட்க மாட்டீங்களா? அவரை பாருங்க, இவரை பாருங்கன்னு உசுப்பேத்தி விட்டு கடைசியா, பொண்டாட்டி பேச்சை கேட்க ஆரம்பிச்சிட்டான்னு ஊர்முழுக்க அவதூறுகளை வாங்க வேண்டி வரும்.

பைத்தியக்காரத்தனமான க்ரிஞ்சிகளையெல்லாம் பார்த்து கேட்டு பழகுறதோட மட்டுமில்லாம, புகழ்ந்து தொலைக்கணும்.

நல்லது கெட்டதுன்னு எதுனாலும் தனியா போக முடியாது. ஜோடியா போனாலும் சிக்கல். ப்ளான் பண்ணின டைமுக்கு சீக்கிரமாவும் போக முடியாது. அங்க யாராவது அவுகள சரியாக கவனிக்கலைன்னா பாதியிலேயே ஒடியார வேண்டிருக்கும்.

மத்த பொண்ணுங்க போட்டிருக்க ஜூவல்ஸ், சாரின்னு அத்தனை மேக்கப்களையும் காட்டிக்காட்டி என்னை என்னைக்காவது இப்படி பண்ணிக்க விட்டுருக்கீங்களான்னு எல்லார் முன்னாடியும் வரும் முனுமுனுப்பையெல்லாம் யாருக்கும் தெரியாம சிரிச்சே சமாளிக்கணும்.

ஒரே நேரத்துல ரெண்டு மூனு பங்ஷன் வந்தா, எந்த பங்க்‌ஷனுக்கு போகணும்னு நாம முடிவு பண்ண முடியாது.
 
காசு இருக்கோ இல்லையோ, லீவு கிடைக்குதோ இல்லையோ பொண்டாட்டியோட தூரத்து சொந்தக்காரர்களின் பங்க்‌ஷனுக்கு ரெண்டு நாள் முன்னாடியே ட்ரெயினோ, பஸ்ஸோ புக் பண்ணி போய்ட்டு, எதையாவது பெருசா செய்யணும்.

பெத்தவங்கள விட வாக்கப்பட்டவங்க குடும்பத்தை தான் தாங்கி பிடிக்கணும். மத்த குடும்பம் மாதிரி நாங்க இல்ல. எங்க குடும்பம் அப்படி, இப்படி என்கிற பில்டப்களுக்கு ஆமாம் சாமி போடணும்.

பொண்டாட்டி வீட்டு சொந்தக்காரங்க தான் நல்லவங்கன்னு சொல்றது இல்லாம, நம்மளோட சொந்த பந்தமெல்லாம் மோசமானவங்கன்னும் சொல்ல பழகிக்கணும்.

எங்கப்பா தான் சூப்பர்ஹீரோன்னு பில்டப் கதைகளை சொல்ற மனைவிகிட்ட எதிர்கேள்வி கூட கேட்க முடியாது. கேட்டா அதுவே தனி பஞ்சாயத்தா நாலஞ்சு நாள் போகும்.

மனைவியோட சொந்தக்காரங்க தான் நமக்கும் சொந்தக்காரங்க. நம்ம இத்தனை நாளு பழகுன ப்ரெண்ட்ஸ்ல இருந்து சொந்தக்காரன் வரைக்கும் மனைவிக்கு பிடிக்கலைனா குட்பை தான் சொல்லணும்.

                                                                                                   (2ஆம் அத்தியாயம் தொடரும்...)

- இரா.ச. இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக