13 செப்டம்பர் 2022

ஆண்ட பரம்பரையில் வந்த இங்கிலாந்த ராணி!






இந்திய மண்ணை அடிமைப்படுத்திய ஆங்கிலேயரை எதிர்த்த நேதாஜிக்கு ஒரு பக்கம் சிலை திறக்கிறோம். மறுபக்கம் அந்த ஆங்கிலேய அரச வம்சத்தை சேர்ந்த ஒரு மூதாட்டி இறந்ததற்காக நாடு முழுதும் துக்கம் அனுசரித்து அரைக்கம்பத்தில் தேசியகொடியை பறக்க விடுறோம். இது இந்திய கொள்கை.

தமிழ்நாட்டிலோ, எல்லா சாதியிலும் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்த சுதந்திரப்போரட்ட வீரர்களை, தேசபக்தி நாயகர்களை விழா எடுத்து கொண்டாடுகிறோம். ஆனால், அவர்களை சூழ்ச்சியால் வீழ்த்தி கொன்றொழித்த ஆங்கிலேய மன்னர் வம்சத்தை சேர்ந்த வயது முதிர்வால் இறந்து போன மூதாட்டிக்கும் இரங்கற்பா படிக்கின்றோம்.

இதெல்லாம் என்ன மாதிரியான டிசைன்?

தமிழ்நாட்டில் மன்னர் பரம்பரை, ஆண்ட பரம்பரை என சொல்பவர்களை கடுமையாக எதிர்க்கும் எல்லா குரூப்களும் இங்கிலாந்து ராணிக்கு ராஜவிசுவாசம் காட்டுகின்றனர். 1801ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதியில் மாமன்னர் மருதுபாண்டியர்கள் மட்டுமில்லாது அவர்களது குடிவழி உறவினர்கள் என திருப்பத்தூரில் 500க்கும் மேற்பட்ட தமிழர்களை, தேச பக்தர்களை, மண்ணின் மைந்தர்களை கொன்றொழித்தன் பின்னணியில் இந்த இங்கிலாந்து ராணியின் குடும்பமும் உண்டென என்பது கூடவா தெரியாது? இதையெல்லாம் கேட்டால், முரட்டு முட்டு தான் கொடுக்கிறார்கள். ஒருபோதும் நம் வரலாற்றை மறக்காதீர்கள். அது கடந்த காலத்தை மட்டும் நினைவு படுத்தவில்லை. எதிர்காலத்தை எச்சரிக்கை செய்யும் வல்லமையும் அதற்குண்டு.

- இரா.ச. இமலாதித்தன்


பிற்சேர்க்கை:

இந்த சாதி ஒளிப்பு போராளிகள், தலித்திய போராளிகள், பகுத்தறிவு போராளிகள், ஆண்டப்பரம்பரை எதிர்ப்பு போராளிகள், ஆணவக்கொலை என பெயர்மாற்றம் செய்த போராளிகள், கருஞ்சட்டை, நீலச்சட்டை, பச்சை சட்டை, சிவப்புசட்டை என வண்ணப்போராளிகளெல்லாம் சேர்ந்து, இந்தியா உள்பட நூற்றுகணக்கான நாடுகளை அடிமைப்படுத்திய அந்த மன்னர் பரம்பரையை சேர்ந்த ராணிக்கு விதவிதமா இரங்கல் பா படிச்சாட்டாங்க. இந்நேரம் அந்த மகாராணியின் ஆன்மா சாந்தி அடைஞ்சிருக்கணும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக