12 செப்டம்பர் 2022

நாய்கள் ஜாக்கிரதை!


நாகரீக நாய் வளர்ப்பு கதை!

கொஞ்சம் காசு பணம் வந்துட்டா பொட்டி மாதிரி வீடு கட்டி, லோன்ல காரை வாங்கி நிப்பாட்டுறதோட மட்டுமில்லாம பெருமைக்கு நாயை வேற வளர்க்க ஆரம்பிச்சிடுறாங்க. எல்லா சூழலையும் தாங்கிக்கிற நம்ம நாட்டு நாயை விரட்டி விட்டுட்டு, எங்கேயோ ஆயிர கணக்குல பணங்கொடுத்து நாய்ங்கிற பேர்ல ஒன்னை வாங்கி வாசல்ல கட்டி போட்டுறாங்க. அது பூனைக்குட்டியா? கன்னுக்குடியா, பன்னிக்குட்டியா, கழுதைக்குட்டியான்னு கண்டுபிடிக்க முடியாத உருவத்துல இருக்கு.

நாய் வளர்க்கிற பேர்ல இவனுங்க அடிக்கிற இம்சை தாங்க முடியல. அந்த நாய்க்கு வாய்ல நுழையாத பேரு வச்சு, அதுகிட்ட கூட இங்க்லீஷ்லயே பேசி பழகுறாய்ங்க. அதுக்கு தனி தட்டு, தனி அரிசி, தனி சமையல், தனி தீனின்னு உடம்பு முடியாதவங்கள பாத்துக்கிற மாதிரி பொத்தி பொத்தி வளர்க்குறாங்க. அது அந்த வீட்ல உள்ள சோம்பேறிகள விட மோசமா வளர்ந்து நிக்குது. வேளாவேளைக்கு டான்'ன்னு மணி அடிச்சா பசி வந்து கத்த ஆரம்பிச்சிடுது. நாய்ன்னா குரைக்கும்ன்னு சொல்வாங்க. இதுக்கு அதெல்லாம் வரதே இல்ல. எல்லாத்துக்கும் ஒரே கத்தல் தான். பசிச்சாலும், வீட்டுக்குள்ள யார் வந்தாலும், கொஞ்சினாலும் ஒரே ரகமான காட்டுக்கத்தலை தவிர ஒன்னும் அதுக்கு தெரியல.

பகல்ல அங்கேயும் இங்கேயும் ஓடி கிட்டு படுத்தே கிடக்கிற நாய், நைட்ல அந்த வீட்ல உள்ளவங்க தூங்குறதுக்கு முன்னாடியே இது தூங்க ஆரம்பிச்சிடுது. மாசத்து ரெண்டு தடவை டாக்டர்கிட்ட காமிக்கிறது, தினமும் காலைல அந்த நாயை வாக்கிங் அழைச்சிட்டு போய், டாய்லெட் பிரச்சனைய முடிச்சுட்டு, குளிப்பாட்டி, துவட்டி விட்டு சர்வண்ட் மாதிரி இந்த புது பணக்கார பார்ட்டிகளின் லூட்டிகளை காண கண் கோடி வேண்டும். அற்பனுக்கு வாழ்ந்த மாதிரி வெளி வேசம் போட்டுக்கொண்டு ஆடிக்கொண்டிருக்கும் பில்டப் ஆசாமிகளின் நாகரீக நாய் வளர்ப்பை பற்றி தனி நாவலாகவே எழுதலாம். அவ்ளோ இருக்கு அதுக்குள்ள கதை!

- இரா.ச. இமலாதித்தன்


90ஸ் கிட்ஸ் Vs நாகரீக நாய் வளர்ப்போர்!

90ஸ் கிட்:-

ஏன் சார் நாயையே இப்படி பொத்தி பொத்தி வளர்க்குறீங்களே? உங்க தாய் தகப்பனையெல்லாம் வேற மாதிரி கவனிச்சிருப்பீங்கள்ள சார்?!

நா.நா.வ:-

இல்ல தம்பி. அவங்களுக்கு கிராமத்த விட்டு வர பிடிக்காதுங்கிறதுனால, அந்த குடிசை வீட்லேயே விட்டுட்டு வந்துடுங்கன்னு என் வொஃய்ப் சொன்னாங்க. அதான் சரின்னும் பட்டுச்சு. அங்கேயே ரெண்டு பேரும் கடைசி காலத்த ஓட்டிட்டாங்க தம்பி.

90ஸ் கிட்:

நாய்க்கு ஒன்னுன்னாலே துடிதுடிச்சு போறீங்க. அப்போ, உங்க அம்மா அப்பாவையெல்லாம் அடிக்கடி போய் பார்த்துட்டு, டாக்டர் செக்கப்லாம் பார்த்துருப்பீங்கள்ள சார்?

நா.நா.வ:

நீங்க சொல்ற மாதிரி கவனிச்சிக்கலாம்ன்னு தான் தம்பி பார்த்தேன், ஆனா முடியல. சொல்லி வச்ச மாதிரி ரெண்டு பேருமே ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு போறப்பதான் தம்பி இறந்தாங்க. கொழுந்தியா பையனுக்கு கல்யாணம், சகலை பொண்ணுக்கு சடங்குன்னு வொஃய்ப் சைடுல உள்ளவங்க ஃபங்ஷனுக்கு போனதுனால ரெண்டு பேரோட டெத்க்கு கூட கடைசி நேரத்துல தான் தம்பி போக முடிஞ்சிச்சு.

90ஸ் கிட்:

அதுனால என்ன சார்! வொஃய்ப், நாய் மேல நீங்க வச்சிருக்க பாசத்துல உங்கள யாருமே அடிச்சிக்க முடியாது; சூப்பர் சார்.

- இரா.ச. இமலாதித்தன்



செல்லப்பிராணி வளர்ப்பு பிரியர்!

வீட்டுக்குள்ள ஹாலில் ஏசியை போட்டுட்டு, அங்கேயே நாயையும் படுக்க வச்சிட்டு, கதவுக்கு வெளியே ஷூ ஸ்டாண்ட் கிட்ட டவுசரோட ஒருத்தர் வாட்ச்மேன் மாதிரி உட்கார்ந்து இருக்காரே அவர்தாங்க செல்லப்பிராணி வளர்ப்பு பிரியர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக