ஓகே காதல்! ஓகே கல்யாணம்! ஓகே கண்மணி!”ஆதித்யா வரதராஜன், தாரா காலிங்கராயர், கணபதி அங்கிள், பவானி ஆன்ட்டி...” ச்சே என்ன மாதிரியான கதை மாந்தர்கள்? இவர்கள் மட்டுமில்லாமல் இவர்களோடு வரும் இன்னும் சிலரின் சிறுச்சிறு பாத்திரங்களின் நடிப்பும் சான்சே இல்ல.மணிரத்னத்தின் ஃப்ரெஷான கதைக்களத்துடன் கூடிய திரைக்கதை, ஏ.ஆர்.ரஹ்மானின் நேர்த்தியான பின்ணனி / பாடல் இசை, பி.சி.ஸ்ரீராமின் காணொளி உருவாக்கமென எல்லாமும் நச்சுன்னு பொருந்திருக்கு. முதல்நாள் திரையரங்கில் பார்க்கும் போது என்னையும் சேர்த்து ஆக மொத்தம் பத்தே பேர் தான் இருந்தனர். எத்தனை தடவ பார்த்தாலும் அலுப்பே வராத காதல் காவியமான, ஓ காதல் கண்மணி, அடுத்த தலைமுறையினரையும் காலம் கடந்து நிச்சயம் ரசிக்க வைக்கும். என்னை வெகுவாக பாதித்த காதல் திரைப்படங்களில் மெளனராகம், இயற்கை, சங்கமம், அலைபாயுதே, கல்லூரி, நீதானே என் பொன்வசந்தம் போன்றவற்றையெல்லாம் விட, இந்த ஓ காதல் கண்மணி ஒரு படி மேலாகவே மனதை கவர்கிறது. ரஹ்மான், மணிரத்னம், ஸ்ரீராம் என அனைவருமே வயதில் நாற்பத்தந்தை கடந்த பின்னாலும், இன்னமும் இளமையை கொட்டி கொடுப்பதில் தான் அடங்கிருக்கிறது இவர்களின் வெற்றியின் ரகசியம்!

- இரா.ச.இமலாதித்தன்

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment