11 மே 2015

தீர்ப்புக்கு பின்னால்...

இந்த தீர்ப்புக்கு பின்னால் தமிழக சட்டமன்ற கூட்டணியும், அதன் தொடர்ச்சியாக குறைந்த பட்சம் 20 எம்.எல்.ஏ.க்களும் பா.ஜ.க.வுக்கு கிடைக்கலாம். மக்களின் முதல்வர் என்ற கேவலமானதொரு அடைமொழியை இனியாவது விட்டொழிவார்கள் என நம்பலாம். மக்களின் வரி பணத்தால் கொண்டு வரப்பட்டு முடக்கப்பட்ட பல திட்டங்கள் இனி செயல் பட தொடங்கலாம். நட்டத்தில் இயங்கும் அம்மா உணவகங்களின் புதிய கிளைகள் இனி திறக்கப்படலாம். முக்கியமாக, அ.தி.மு.க.வின் அடிமட்ட தொண்டன் சந்தோசப்படலாம். ஆனால், உண்மையில் அரசு பதவியில் லஞ்சம் வாங்கி கொள்ளையடித்த அமைச்சர்கள் சார்ந்த கூட்டமெல்லாம், இந்த தீர்ப்புக்கு பின்னால் இனி பதவி மாற்றம் வருமேயென கதி கலங்கி நிற்கலாம். சாமானியனுக்கு ஒரு நீதி, சாக்கடை அரசியல்வாதிகளுக்கு ஒரு நீதியென பாகுபாடு பார்க்கும் இந்த இழிநிலை இனியாவது மாற்றம் பெற இளைஞர்கள் தான் முடிவெடுக்க வேண்டும். அரசியலை அவர்களே கைப்பற்ற வேண்டும். இந்த தீர்ப்பு நிச்சயமாக நேர்மையான தீர்ப்பு இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தும் இன்னும் மெளனியாய் வேடிக்கை பார்ப்பது தான் கேவலம். அது தான் எல்லாருக்கும் பழகி போய்விட்டது. வசதியாகவும் போய் விட்டது.

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக