14 ஆகஸ்ட் 2017

அகமுடையார் அரசியல்! - sarahah




முக்குலத்தோர் என்ற போலியான கட்டமைப்பின் மீது நம்பிக்கையில்லை. தேவர் என்ற பட்டத்தையும், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரையும் மையப்படுத்திய அரசியல் என்றைக்குமே தனித்த அரசியலை உருவாக்காது. கடைசி வரை திராவிட கட்சிகளோடு கை கோர்த்து, அகமுடையார் என்ற தனிப்பெரும் இனக்குழுவிற்கு கொடுக்கப்பட வேண்டிய பகிர்வு கிடைக்கவிடாமல் செய்ததற்கு போலியான முக்குலமே காரணம். உண்மையாகவே கள்ளர் - மறவர் என்ற அந்த இருகுலத்தோருக்கான அரசியல் லாபத்திற்காகவே அகமுடையார் இனக்குழு பகடைக்காயாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாயக்கர்களால் கிடைக்கப்பட்ட பாளையங்களும் - பட்டங்களும், மறவர் - கள்ளர்களுக்கு ஒரு ஆண்டபரம்பரை வரலாற்றை உருவாக்கி கொடுத்திருக்கலாம். அகமுடையாருக்கு அப்படியான கட்டமைக்கப்பட்ட அங்கீகாரம் தேவையேயில்லை. ஏனெனில் அகமுடையார்கள் குற்றப்பரம்பரையும் கிடையாது; பாலை நிலத்தவர்களும் கிடையாது.

மக்கள் தொகை அடிப்படையில் அகமுடையாரை விட கள்ளரும் மறவரும் குறைவான எண்ணிக்கையில் உள்ளனர். இன்னும் சொல்லப்போனால் கள்ளர், மறவரின் மொத்த அடர்த்தியே அகமுடையாரின் எண்ணிக்கைக்கு ஈடாகாது என்பதே எதார்த்தம். நிலைமை இப்படியிருக்க இம்மூவரில் சிறுபான்மையான மறவரிலிருந்து தான், அகமுடையார் தோன்றியதாக பொய் பரப்புரை செய்யும் காரிய கிறுக்கர்களுக்கு அடிப்படை அறிவில்லாமல் இருக்கலாம் என்பது தெளிவு. மேலும் பெரும்பான்மை இனக்குழுவிலிருந்து தான் சிறுபான்மை இனக்குழு உருவாகுமே தவிர, சிறுபான்மை இனக்குழுவிலிருந்து பெரும்பான்மை இனக்குழு உருவாகவே முடியாது.

மறவர் என்போர் பெண் வழி சமூகம். திருமண உறவு என்பதே தாய் வழியின் கிளை/கொத்துகளை வைத்தே அமைகிறது. தஞ்சை கள்ளர்கள் ஆண் வழி சமூகம் என்றாலும் கூட ஒரே பட்டத்தை கொண்டவர்களுக்குள் திருமண உறவில்லை. இதைத்தவிர அம்பலம் பட்டமிடும் கள்ளர், பிரான்மலை கள்ளர் என்ற ஒவ்வொரு கள்ளர்களுக்கும் தனித்த பாரம்பரியம் உண்டு. மறவர்களில் ஆப்பநாடு, கொண்டையன் கோட்டை என பல பிரிவுகள் இருந்தாலும் செம்பி நாட்டு மறவர்கள் மட்டுமே அகமுடையாரில் ஆதிகாலம் தொட்டு மண உறவு கொண்டிருக்கின்றனர். அதற்கும் கூட அரச ரீதியாக தொடர்புகள் உண்டு.

எதார்த்தம் இப்படி இருக்க, கள்ளர் மறவரோடு எவ்வித தொடர்புமில்லாத அகமுடையார்களை ஒரே குலமாக அடைப்பது பச்சைத்துரோகம். தமிழ் தேசிய கொள்கையோடு எந்த இனக்குழுவை சேர்ந்த தமிழன் ஆட்சியமைக்க நினைத்தாலும், தமிழகமெங்கும் அனைத்து மாவட்டங்களிலும் பரந்து விரிந்து வாழும் அகமுடையார்களின் ஆதரவின்றி சாத்தியமாக போவதில்லை; இது வெறும் சுயசாதி பெருமை அல்ல. களநிலவரம் இது தான். முதலியார் - உடையார் - அதிகாரி - மலையமான் - பிள்ளை - சேர்வை - தேவர் என பல்வேறு பட்டங்களோடு இருந்தாலும் அந்தெந்த பகுதிகளில் தனித்த அரசியல் பலத்தோடு அகமுடையார்கள் இருக்கிறார்கள் என்பதை அரசியல் ஆய்வாளர்கள் புரிந்து கொண்டிருக்கலாம். கண்டிப்பாக தமிழ் தேசியத்தின் பக்கம் அகமுடையார் இனக்குழுவின் ஒட்டுமொத்த பார்வையும் விழும். அன்று முதல் தமிழராட்சி இம்மண்ணில் எழும்.

(பின் குறிப்பு: முக்குலத்தோர் என்பதற்கான எவ்வித ஆதாரமும் கி.பி. 1930க்கு முன்பாக கிடையாது. இல்லாத முக்குலத்தை பற்றிய 2015ல் எழுதப்பட்ட சிறு கட்டுரை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

http://emalathithan.blogspot.in/2015/09/blog-post_24.html

அகமுடையார் சங்கமானது முக்குலத்தோர் சங்கமான வரலாறு!

1926 ல் திருத்துறைப்பூண்டியில் முதல் அகமுடையார் சங்க மாநில மாநாடு நடைப்பெற்றது. இந்த மாநாடு உருவாக, கரந்தை திரு. உமாமகேசுவர பிள்ளை, பட்டுக்கோட்டை திரு. நாடிமுத்து பிள்ளை, திருத்துறைப்பூண்டி திரு. ராஜகோபால் பிள்ளை, நாகப்பட்டினம்-அந்தணப்பேட்டை திரு. திருஞானசம்பந்த பிள்ளை ஆகிய நால்வரும் முக்கிய பங்கு வகித்தனர்.

பிறகு, அகமுடையார் சங்க மாநில மாநாடு 1929ல் பட்டுக்கோட்டையிலும், 1931ல் மதுரையிலும், 1932ல் இராமநாதபுரத்திலும் நடந்தது.

அனைத்து மாநாட்டிலும் அந்தெந்த பகுதியை சார்ந்த பொதுவானதொரு சிறப்பு விருந்தினரை அழைப்பது வழக்கமாக்கி கொண்டிருந்ததால், இந்த நான்காவது மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக சேதுபதி மன்னர் வகையினரான, நீதிக்கட்சி அமைச்சரான திரு. சண்முகராஜ நாகநாத சேதுபதி கலந்து கொண்டார். அப்போது மாநாட்டில் சேதுபதி வைத்த கோரிக்கையை ஏற்று பின்னால் திரு. சிவனாண்டி சேர்வையின் முன்னெடுப்பால் அகமுடையார் மாநில சங்கமானது, முக்குலத்தோர் சங்கமாக பெயர் மாற்றம் பெற்றது.

டிசம்பர் மாதம் 1933 ல் நடைபெற்ற சென்னை மாநாட்டில், மாநில அகமுடையார் சங்கமானது, முக்குலத்தோர் சங்கமென முழுமையாக உருமாற்றம் பெற்றது. அந்த மாநாட்டின் பெயரானது மூவேந்தர் குல மாநாடு என பெயர் சூட்டப்பட்டிருந்தது.

இன்றைக்கு பவளவிழா கண்டு இயங்கி வரும் தமிழ்நாடு முக்குலத்தோர் சங்கத்திற்கான விதையானது, 1926 ல் உருவாக்கப்பட்ட மாநில அகமுடையார் சங்கத்திடமிருந்து கிடைத்தது என்பது தான் மறுக்க முடியாத, மறக்கடிக்கப்பட்ட வரலாறு. இந்த விருட்சத்தின் பலனான நிழலானது, விதைக்கும் - வேர்க்கும் கிடைக்கவே இல்லை என்பதுதான் வருத்தமான விசயம்.)

- இரா.ச. இமலாதித்தன்

emalathithan.sarahah.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக