14 ஆகஸ்ட் 2017

அகமுடையார் - திமுக - முகநூல்! - sarahah





எந்தவொரு அரசியல்வாதிகளாலும் அகமுடையார் இனக்குழு மேலெழுந்து வரவில்லை. முதன்மை பொறுப்பிலிருக்கும் எல்லா அரசியல்வாதிகளுக்கும் ஒரு சாதிய பின்புல உண்டு. அதனாலேயே அவரது சாதியை சார்ந்தோர் உயர்நிலையை அடைந்துவிட முடியாது. இது அகமுடையார் இனக்குழுவை சேர்ந்த அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும். போலி பெருமைக்கு வேண்டுக்குமென்றால் 'எங்க ஆளுக தான் அவரு!' என வருட்டு கெளரவத்தோடு காலரை தூக்கிவிட்டு கொள்ளலாம். அதனால் ஒட்டுமொத்த சாதிக்கும் ஒரு பைசா பிரோயோசனமும் இல்லை.

ஒருகாலத்தில் முற்பட்டோர் பட்டியலில்(FC) இருந்த அகமுடையார்களை, பிற்பட்டோர் பட்டியலில்(BC) சேர்க்க காரணமாக இருந்ததும் ஓர் அரசியல் தான்; அதை செய்து காட்டிய அரசியல்வாதியல்லாத தமிழ்வேள் கரந்தை உமாமகேசுவரன் பிள்ளையின் அரசியலை தான், தற்போதைய அகமுடையார் இனக்குழுவிலுள்ள அரசியல்வாதிகளிடம் எதிர்பார்க்கிறோம். இதுவரை அப்படியான அரசியல்வாதி களத்தில் இல்லை; இனி உருவாகலாம்.


- இரா.ச. இமலாதித்தன்





மற்ற சாதிகளில் அவர்களுக்கான ஒரு தலைவரை கண்டுபிடிப்பது மிகச்சிரமமாக இருக்கிறது. ஆனால் இந்த மூன்று தனித்தனி சாதிகளுக்கும் தொண்டர்களின் எண்ணிக்கைக்கு நிகராக தலைமைகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகமாவதால் தான், தன்னிருப்பை காட்டிக்கொள்ள எதையாவது செய்து சண்டை உருவாகி கொண்டே இருக்கிறது. மெல்லிய ஓர் உறைக்குள் மூன்று வெவ்வேறான கத்திகளை நுழைத்து கொண்டே இருப்பதால், இனிவரும் காலங்களிலும் இந்த சண்டை தொடருமே ஒழியே; குறையவே குறையாது.

(பி.கு: தேவர் என்பது பட்டம் மட்டுமே; அது சாதி அல்ல)


இரா.ச. இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக