14 ஆகஸ்ட் 2017

அகமுடையார் பற்றி - sarahah



அகமுடையாருக்கான பூர்வீகமென்று பார்த்தால் பலவிதமான கலவையான ஊகங்கள் உண்டு. நடுநாடு என்ற திருக்கோவிலூர் உள்ளிட்ட காஞ்சிபுரத்துடன் கூடிய பல்லவ நாடும், அகம்படி குலத்தை சேர்ந்த வாணர்கள் தலைமையிடமாக ஆண்ட வாணாதிராயமதுரை என்ற மானாமதுரையை சுற்றிய கேரளத்தை உள்ளடக்கிய மலைநாடுடன் கூடிய தென் தமிழகமும் உண்டு. 13ம் நூற்றாண்டில் மானாமதுரைக்கு அருகிலுள்ள தஞ்சாக்கூர் என்ற பகுதியை தலைமையிடமாக கொண்டு ஆண்ட தஞ்சைவாணன் என்கிற சந்திரவாணன் என்ற வாணர் குல அகம்படி இனத்தவரின் பூர்வீகம் கூட பல்லவ தேசமென்றும் பொய்யாமொழிப்புலவரால் இயற்றப்பட்ட தஞ்சைவாணன் கோவையில் சொல்லப்படுகிறது. தஞ்சைதான் அகமுடையார்களை இணைக்கும் மையப்புள்ளி. சேர+பாண்டிய+பல்லவம் என அனைத்து தேசத்திலிருந்தும் பல்வேறு காலகட்டங்களில் அகமுடையாரின் இடம்பெயர்வு நடந்திருக்கிறது என்பது என்னுடைய தனிப்பட்ட ஊகம்.

emalathithan.sarahah.com

நிச்சயமாக மரபு வழி போர்க்குடியினர் அகமுடையார் தான் என்பதில் மாற்று கருத்தே இல்லை; வேட்டுவருக்கும் அகமுடையாருக்கும் எவ்வித தொடர்புமில்லை. போர்ச்சூழலற்ற காலநிலை மாற்றம் நிகழும் போது வேளாண்மையையும் அகமுடையார்கள் தனதாக்கி கொண்டனர். அகமுடையார்களில் உழுவித்த வெள்ளாளர்களாக பூகோள ரீதியாக வட தமிழகத்தில் தான் முதன்முதலாக மாறி போனார்கள். தெற்கிலுள்ள அகமுடையார்களே கடைசி வரை போர் மரபோடே வாழ்ந்து, மிக சமீபத்தில் வேளாண்மை பக்கம் மாறினர். டெல்டா பகுதியிலுள்ள அகமுடையார்கள், இரண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் வேளாண்மை பக்கம் திசை திரும்பி இருக்கிறார்கள்.

emalathithan.sarahah.com

தொழுவ வெள்ளாளர் என்பதே சரி; துளு நாட்டிற்கோ அல்லது துளு மொழிக்கோ எவ்வித சம்பந்தமும் அகமுடையாருக்கு இல்லை. அகமுடையாருக்குள்ள பட்டங்களான சேர்வை - தேவர் - உடையார் - மலையமான் - அதிகாரி - பிள்ளை போன்ற பட்டங்களை போலவே முதலியார் என்பதும் பட்டமே. பட்டங்களை வைத்து மற்ற சாதியோட உறவாட முடியாது. ஏனெனில் சேர்வை பட்டம் எட்டு சாதிகளுக்கு உண்டு. தேவர் பட்டம் மூன்று சாதிகளுக்கு உண்டு. உடையார் பட்டம் இரண்டு சாதிகளுக்கு உண்டு. குறிப்பாக பிள்ளை பட்டமோ எழுபதுக்கும் மேற்பட்ட சாதிகளுக்கு உண்டு. அதுபோலவே முதலியார் என்ற பட்டம் செங்குந்தர்களுக்கும், தஞ்சை கள்ளர்களுக்கும் உண்டு; இதில் வடக்கிலுள்ள அகமுடையார்களில் முதலியார் பட்டமே பெரும்பான்மையாக இருக்கிறது. இந்த முதலியார் மற்றும் பிள்ளை பட்டம் கொண்ட அகமுடையார்களுக்கு துளுவ(தொழுவ) வெள்ளாளரென்றும், அகமுடையார் என்றும் சாதிச்சான்றிதழ் வழங்கப்படுகிறது; காரணம் இரண்டும் ஒன்று என்பதால் தான். இந்த இருவிதமான சாதிச்சான்றிதழ் வைத்திருந்தாலும் மண உறவு இவர்களுக்குள் காலங்காலமாக உண்டு. அதனால் இதில் குழப்பிக்கொள்ள ஒன்றுமே இல்லை. நீங்கள் அகமுடையார் என்பதையே எடுத்துக்கொள்ளலாம். ஒருவேளை துளுவ வெள்ளாளர் என்றாலும் அதில் தவறேதுமில்லை. இரண்டும் ஒன்றே.

emalathithan.sarahah.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக