14 ஆகஸ்ட் 2017

அரசியல் ஆளுமைகளை அகமுடையார் என்பதால் ஏற்கிறோமா?- sarahah



ஐயா தளிக்கோட்டை ராசுத்தேவர் பாலு ஆகட்டும், அண்ணன் ஜாம்பவனோடை கருப்பு முருகானந்தம் ஆகட்டும் டெல்டாவிலிருந்து அரசியல் களம் கண்டு, மிகப்பெரும் பதவிகளையும் பொறுப்புகளையும் அவர்களது கட்சியில் பெற்றிருக்கின்றனர். டெல்டாவின் அரசியல் என்பதே கள்ளரான சசிகலா குடும்பத்தின் பிடியில் இருந்த போது, அங்கிருந்து மற்ற சாதியை சேர்ந்தோர் மேலெழுவது அவ்வளவு எளிதான விசயமில்லை. அதிலும் டெல்டாவை பொறுத்தவரை தேவர் என அறியப்படும் அகமுடையார்களுக்கும் - கள்ளர்களுக்கும் எல்லா விசயங்களும் எதிரெதிர் துருவங்களில் தான் இருக்கின்றன; அதில் அரசியல் முதன்மையானது. குறிப்பாக சசிகலாவின் குடும்பத்தை பொறுத்தவரை அகமுடையார்கள் அரசியலில் மேலெழுவதை தடுப்பதற்காகவே தனித்த எச்சரிக்கையோடு காய் நகர்த்தி கொண்டிருக்கும் வேளையில், சுயம்பாக எழுந்து தாக்குபிடித்து தேசிய கட்சியின் மாநில பொறுப்பை ஏற்றிருக்கும் அந்த ஆளுமையை கொண்டாடமல் இருக்க முடியவில்லை. கடந்த சட்டமன்ற/ நாடாளுமன்ற தேர்தலில் அண்ணன் கருப்பும், ஐயா டீ.ஆர்.பி.யும் எதிரெதிர் அணிகளாக தான் களம் கண்டார்கள் என்பது தனிக்கதை.

டெல்டாவிலுள்ள அகமுடையார் அனைவருமே ஏதோவொரு வகையில் தூரத்து உறவினராகவே இருப்பார்கள் என்பது இங்குள்ள அனைவருக்கும் தெரிந்த விசயம் தான். டெல்டாவில் அகமுடையாரில் கோட்டைப்பற்று உட்பிரிவை சேர்ந்தவர்களே பெரும்பான்மை என்பதாலும், தளிக்கோட்டையை சுற்றியும், ஜாம்பனோடையை சுற்றியும் எனக்கு உறவினர்கள் இருப்பதாலும், அவர்களுக்கு இந்த இருபெரும் தலைவர்களும் உறவினர்கள் என்பதாலும், உறவு அடிப்படையில் பொது விசயங்களில் ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பது தவறில்லை என்றே தோன்றுகிறது. மேலும் அரசியலை ஏற்பது என்பது வேறு; அவர்களது ஆளுமையை போற்றுவது என்பது வேறு. தமிழ் தேசிய ஆதரவாளனான எனக்கு, மு.கருணாநிதியின் தளபதியென அறியப்படும் டீ.ஆர்.பாலு ஐயாவும், தமிழகத்தின் மோடியென அடையாளப்படும் கருப்பு முருகானந்தம் அண்ணனும் உறவினர்களாக தெரிகிறது. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

- இரா.ச. இமலாதித்தன்

emalathithan.sarahah.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக