10 செப்டம்பர் 2015

நிர்வாக ஆலோசனையாளராக, அகம்படியர்!



இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் கல்வெட்டு சிதம்பரம்
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனின் திருப்பணிக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நடராஜர் கோயில் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனின் திருப்பணி கல்வெட்டினை அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை துணைப் பேராசிரியர்களும், திராவிட வரலாற்று ஆய்வுக்கழக ஆய்வாளர்களுமான இல.கணபதிமுருகன், ஆ.முத்துக்குட்டி ஆகியோர் கண்டெடுத்துள்ளனர். கல்வெட்டு குறித்து ஆய்வாளர் இல.கணபதிமுருகன் தெரிவித்ததாவது:
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் கிழக்கு கோபுர வாயிலின் வழியாக செல்லும் போது துவார ஸ்கந்தன் சன்னதிக்கு வடபுறம் இருக்கும் நுழைவாயில், இடது நிலைவாயில் பகுதியில் காடவர் குல சிற்றரசரான இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனின் (கிபி 1243-1279) கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.

திருப்பணி கல்வெட்டு:

"ஸ்வஸ்தி ஸ்ரீ அவனி ஆளப்பிறந்த கோப்பெருஞ்சிங்கருக்காக திருநிலைக்கால் செய்வித்தார். வர முதலிகளில் பெருமாளப் பிள்ளை யான சோழக்கோனார்" என்பதே நடராஜர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு வரிகளாகும். கல்வெட்டு குறிக்கும் கோப்பெருஞ்சிங்கன் காடவர் குல குறுநில மன்னன் ஆவான். இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனுக்கே 'அவனி ஆளப் பிறந்தான்' என்ற பட்டப்பெயர் இருந்தது.

அவனி ஆளப்பிறந்தான் என்ற பட்டப் பெயர்:

நடராஜர் கோயில் கல்வெட்டில் குறிக்கப்படும் கோப்பெருஞ்சிங்கன், இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனை என்பதை 'அவனி ஆளப் பிறந்தான்' என்ற கல்வெட்டு வரி வாயிலாக உறுதிப்படுத்திக் கொள்ளலாம். இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனுக்கு நிர்வாக ஆலோசனை கூற அகம்படி முதல் என்ற நிர்வாகக் குழு உதவிவந்தது. கல்வெட்டில் வர முதலி என குறிக்கப்படும் பெருமாள் பிள்ளையாகிய சோழகோனார் அத்தகைய நிர்வாகக்குழுவில் இடம் பெற்றவர்களில் ஒருவனாவான். எனவே கோப்பெருஞ்சிங்கனின் ஆணைப்படி வர முதலி, கோயிலின் திருநிலைக்காலை செய்வித்த நிகழ்வானது இக்கல்வெட்டின் வாயிலாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை கண்டறியப்படாத கல்வெட்டு:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக