அகமுடையாரின் கனிவான கவனத்திற்கு!

இந்த பதிவு அகமுடையார் இனக்குழுவினருக்கு மட்டும்:-

தமிழகத்தில் அரசு வேலை கூட சாதி கோட்டோவின் மூலமாகவே பிரித்து கொடுக்கப்படுகிறது. கீழே அனைத்து பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் பட்டியல் இருக்கிறது. இதை கூர்ந்து கவனித்தால், முக்குலத்தோர் அரசியல் செய்யும் வீதிக்கொரு தலைவர்களின் இயலாமை என்னவென்று புரியும். முக்குலத்தோர் என அடையாளப்படுவது் கள்ளர் - மறவர் - அகமுடையார் என்ற இந்த மூன்று இனகுழுக்கள் தான். இதில் பிசி/எம்பிசி/டிஎன்சி என மூன்றிலுமே கள்ளர் - மறவர் என்ற இருகுலத்தாரும் இருப்பார்கள். ஆனால் இந்த அகமுடையார் மட்டும் பிசி பட்டியலில் மட்டும் தான் இருக்கின்றனர். முக்குலத்தோர் என அடையாளப்பட்டாலும் அரசியல் பதவியிலும் சரி, அரசாங்க சலுகைகளிலும் சரி், அனைத்திலும் புறக்கணிப்பட்ட ஒரே குலம் அகமுடையார் என்பதை எளிதாக புரிந்து கொள்ள முடியும்.

ஒரே மார்க் வாங்கிருந்தும் எம்பிசி/ டிஎன்சியில் உள்ள கள்ளரும்,மறவரும் ஓர் அரசாங்க பதவியிலோ, கல்வி ஒதுக்கீட்டிலோ இடம் கிடைத்து விடும். ஆனால் முக்குலமென மூச்சுக்கு முன்னூறு தடவை கத்தியே காலம் கழிக்கும் அகமுடையாருக்கு பட்டை நாமம் தான். முக்குலமும் ஒன்னுன்னு சொல்ற எவனும் எல்லாருக்கும் ஒரே மாதிரியான சாதி சலுகை அளிக்க வேண்டுமென்று அரசாங்கத்தை கேட்டிருக்கின்றானா? அப்படி கேட்டாலும் வெறும் விளம்பரத்திற்காக கேட்டுவிட்டு நாங்களும் தான் இந்த வருசம், இந்த தேதியில் போராடினோம்ன்னு சொல்லிட்டு, வருசத்துக்கு ஒரு தடவை அக்டோபர் மாசம் பசும்பொன்னுக்கு கிளம்பிடுவாய்ங்க. இதுதான் முக்குலம் பேசும் அரசியல்வாதிகளின் உண்மை முகம். போராடுறது முக்கியமில்லை. அந்த போராட்டத்தின் நோக்கம் வெற்றி பெறவில்லையே? அப்பறம் ஏன் வீண் விளம்பரம் பண்ணிக்கிறாய்ங்கன்னும் தெரியல. எண்ணிக்கையை கணக்கில் சொல்லி அகமுடையார் முதுகில் சவாரி செய்வதுதான் முக்குலத்தோர் என்ற அடைமொழி பயன்படுமே அன்றி, ஒருபோதும் அது அகமுடையாருக்கு பயன் தராது. இதுதான் எதார்த்தம்.

தேர்தல் சமயத்தில் திராவிட கட்சிகளிடம் உன் சாதி பெயரையும், என் சாதி பெயரையும் சொல்லி இத்தனை வாக்காளர்கள் உள்ள எங்களுக்கு ஒரு ரெண்டு சீட்டாவது பிச்சை போடுங்க அம்மா, தாயே, அய்யான்னு பிச்சை எடுப்பாய்ங்க. அதுக்கு தான் இந்த முக்குலம் தேவைப்படும். இந்த கேடுகெட்ட சாதி தலைவர்கள் இல்லையென்றால் இந்நேரம் தமிழகத்தில் இந்த மூன்று இனக்குழுவும் அழிந்திருக்குமா என்ன? உங்க அரசியல் போதைக்கு அகமுடையாரை ஏன்யா ஊறுகாய் மாதிரி தொட்டுக்கிறீங்க? எங்களுக்கான அரசியல் அங்கீகாரத்தை கூட கொடுக்க வக்கில்லாத நீங்க, தயவு செய்து எங்களையும் விடுங்கய்யா. நாங்க ஆண்ட பெருமை பேசாமல், உழைச்ச்சு பொழைச்சு அறிவை வைச்சு மேலே வந்துக்கிறோம்.

- இரா.ச.இமலாதித்தன்

http://www.tn.gov.in/rti/proactive/bcmbc/handbook-bcmbc.pdf
http://www.tnpsc.gov.in/communities-list.html#mbc
http://www.tnpsc.gov.in/communities-list.html#dc
http://www.tnpsc.gov.in/communities-list.html#bc

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment