அகமுடையாரின் அரசியல் பார்வை!


பொது தளத்தில், அரசியல் பங்களிப்புக்கு வேண்டுமேனால் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு முக்குலத்தோர் என்ற கட்டுமானம் தேவைப்படலாம். உண்மையில் முக்குலத்தோர் என்ற கட்டுமானத்தால் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு கொண்டிருக்கும் ஒரேவோர் இனக்குழு அகமுடையார் தான் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். அகமுடையார் முதுகில் எளிதாக சவாரி செய்யவே இந்த முக்குலத்தோர் என்ற கட்டுமானம் தேவைப்படுகிறது என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

முக்குலமாக இருக்கும் வரையிலும் அரசியலில் அகமுடையார் என்றைக்குமே தீண்டதகாதவர்கள் தான்! - இதுதான் 100% உண்மை. ஆனால் எந்த இரு(முக்)குலத்து தலைவருக்கு பின்னாலும் சாணக்கிய பின்புலமாக ஓர் அகமுடையார் தான் இருக்கின்றார் என்பது மட்டுமே ஒரு சின்ன ஆறுதல்.

அரசியல் தெளிவே இல்லாத எந்தவொரு இனக்குழுவும் என்றைக்குமே முன்னேற வாய்ப்பில்லை. ஏற்கனவே இருந்தவற்றையெல்லாம் இழந்து கொண்டிருக்கும் இந்த இனக்குழு, இன்னமும் வெறும் உணர்ச்சிவயப்படலின் அடிப்படையிலேயே எல்லாவற்றையும் அணுகுவது வேதனையான விசயம். குறிப்பாக அடுத்த தலைமுறை அரசியலை கையிலெடுக்கும் பெரும்பாலான இளைஞர்கள் யாருக்கும் தொலைநோக்குடன் கூடிய பார்வையே இல்லை. கடந்தகால வரலாற்றை பேசி பெருமை கொள்ளும் அதே சமயம், இடைக்காலத்தில் நடந்தேறிய வரலாற்றை மறந்துவிடுவதை பற்றி சொல்வதற்கொன்றுமில்லை. எதையுமே முழுதாக தெரியாமல் அரைகுறையாக கும்மியடிக்கும் என் செம்மறியாட்டு கூட்டமே இனியாவது திருந்து.

- இரா.ச.இமலாதித்தன்

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment