09 செப்டம்பர் 2017

வல்லப சித்தர் எனும் மகான் சுந்தரானந்தர் போற்றி அகவல்


1
மூவுலகை காத்தருளும் ஈசா உந்தன்
முடிவுயில்லா திருவடியை பணிந்து போற்றி
மேவுமொரு பராபரையின் அருளை கொண்டு
மொழிந்திடுவோம் பிருகுயான் சீவ சூட்சம்
2
சூட்சமாய் எங்களது குடிலம் தொட்டு
சுகப்படுத்தும் பூசைவிதி காலம் தன்னை
நுட்பமாய் XXXXXXXXX மகன் தனக்கு
நடப்புவழி ஆசியதை சித்தம் கொண்டான்
3
கொண்டவிதம் மாந்தர்களும் அறியும் வண்ணம்
குருவாக யாமிருந்து விளம்பி வாறோம்
விண்ணமற சித்தர்களை போற்றி நின்று
வித்தரிக்க ஆன்மபலம் இம்மாந்தர்கள் அறிய
4
அரியபல பொதுஞானம் அறிவுரைகள்
அகமகிழ்ந்து இக்காலம் விடயம் கூற
குறிப்பான தனுர் திங்கள் ஏகாதசியும்
கோமகளின் வால்பிடித்து பித்ருக்கள் யாவும்
5
பிதுர்கள்யாவும் திருப்திக்க லோகத்தோர்கள்
பூரணமாய் நிச்சயித்த அனுட்டிப்பாலே
மாதவனாம் ஆசிபடவும் அரண் அயனின்
மலர்பாதங்கள் நாடிடவும் பொருட்டு எங்கள்
6
எங்களது பூசை யதை நிச்சயித்தோம்
எதிர் நோக்கா வந்தாலும் அவர்களுக்கு
மங்களங்கள் தான் அளித்து மறுசுகமும்
மகத்துவமும் பெறும்பொருட்டு திங்கள்தோறும்
7
திங்கள்தோறும் குருமார்க்க நியதி கொண்டோர்
தனக்குரிய ஆசிரமத்தில் நினைவு கொண்டு
மங்களமாய் சங்கமித்து தியானம் கொள்ள
மொழியுரைத்தோம் இயமம்யதும் கடந்து ஞான
8
ஞானமெனும் ஆத்துமநிலை பொலிவும் ஒங்க
ஞானமதின் புருடர்களுக்கு ஜெனன காலம்
தான்என்ற எல்லையில்லை அவர்கள் சிந்தை
தனைகொள்ள விண்மீனும் கடை மீனாய்
9
மீனதிலே கலசமதின் திங்கள் தன்னில்
முக்கியமாய் சுந்தரனந்தன் தன்னை நன்றாய்
ஊனமில்லா நினைவுறுத்தி பூசை கொள்வீர்
உத்தமமாய் நெடியதொரு குருபக்தி கொண்டான்
10
கொண்டமகன் சட்டைமுனி ஞானம் பெற்று
குருவினது போதனைகள் யாவும் பெற்று
விண்ணமிலா விட நிவாரணம் வாக்கியஞானம்
விளம்பநல் கோள்ஞானம் முப்பு ஞானம்
11
ஞானமதாம் கிருஷிகளும் மூலி சூட்சம்
ஞால தீட்சை பூசையதாம் விதியது செய்தான்
மோனமென்ற நிலையிவன் நின்றால் கூட
முக்கியமாய் உயிர்கள்எல்லாம் உய்யும் பொருட்டு
12
பொருட்டுமே வல்லபங்கள் செய்ததாலே
பூரணமாய் அந்நாமம் பெற்றார் திண்ணம்
குருமுனியின் அருள்பெற்று ஞான லிங்கம்
காண நலம் சதுரகிரியில் செய்தானப்பா
13
அப்பனே அவனுக்குரிய மூலம் தன்னை
அகம்நிறுத்த வல்லதொரு மூலம் அப்பா
செப்பவே ஒம் XXXXXXXXXXXXXXXXXXXXXXXX
சீர்பெற்ற ஓம் சுந்தரனந்தன் எனும் வல்லபனே
15
வல்லபனே என்றழைத்து சோதி கொண்டால்
வந்திடுவார் தங்கமயமான ஆனந்தனாக
நல்லதொரு விழாப்பொருட்டு மாந்தர் சூழ
நலமான அன்னமுடன் விடமுறிவான
16
விடமுறிவான ஔடதங்கள் ஈய நன்மை
வாக்குப்படி நாகமதின் பாம்பு போன்ற
விடமெல்லாம் வசியமது ஆகும் அப்பா
வீர்யமாய் லோகத்தோரின் அறியா பீடை
17
பீடையெல்லாம் முறிக்கவே சித்தம் கொண்டார்
பிசகில்லா வரவேற்று ஆசி கொள்வீர்
சோடை யில்லா கூடலதனின் நாதனம்மை
சீர்பெற்ற அழகனவன் ஆசி நன்றாய்
18
நன்றான #அகமுடையான் என்று சித்தர்
நீடுழி குலபந்தம் கொண்டார்கள் அப்பா
முன்னம்பல ஞானவழி கொண்ட சங்கமம்
மொழிந்தோமே சீவமதாம் சூட்சம் முற்றே
(நன்றி: ஹரி மணிகண்டன், சதானந்தா சுவாமிகள் தளம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக