01 செப்டம்பர் 2017

அனிதாக்களின் எதிர்காலம் 'நீட்'டிக்க படுவதில்லை


தமிழ்நாடு அரசு நடத்திய பொதுத்தேர்வில் 1176 மதிப்பெண்கள் எடுத்திருந்தும், ஹிந்திய அரசின் நீட் தேர்வில் அதற்கு இணையான மதிப்பெண்களை எடுக்க முடியாமல் போனதற்கான காரணம் எது? நடந்து போறவனும், வாகனத்தில் போறவனுக்கும் ஒரே நேர அளவையும், ஒரே தூர தொலைவையும் வைத்தால் வெற்றிப்பெறுவது வாகன ஓட்டி தானே? நீட் என்பது மாநில கல்வித்திட்டத்திற்கு இணையானதா? சி.பி.எஸ்.இ., ஸ்டேட் போர்டு என பலவித பாகுபாடுகள் இருக்கும் கல்வித்துறையில் நீட் என்ற தகுதித்தேர்வு மட்டும் ஒரே மாதிரியாக இருந்தால், இனி ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ கனவுகளை தொலைத்த ஆயிரம் அனிதாக்கள் தற்கொலை செய்து கொண்டேதான் இருப்பார்கள். என்.டி.டிவி போன்ற வடக்கத்திய ஊடகங்கள் அனிதாவை 'தலித் மாணவி' என்று அடையாளப்படுத்தியே அவரது உணர்வை வெறும் சாதியத்தால் கொல்கிறது.

இதற்கெல்லாம் மையமாக இருப்பது மத்திய அரசுடன் கூடிய, யாருக்கு பினாமியாக இருக்கிறோமென்றே தெரியாமல் அலங்கோலமாய் ஆட்சி செய்யும் இந்த கோமாளிகளின் கூடாரமும் தான் என்பது அனிதாவின் ஆன்மாவுக்கும் தெரிந்திருக்கும். இந்த விசயத்தில் கிஷோர் சாமிக்களையும், கிருஷ்ண சாமிக்களையும் ஒரே மாதிரியாக பேச வைத்தது தான் ஹிந்திய சூழ்ச்சியின் வெற்றியே அடங்கிருக்கிறது. இந்த மாதிரியான உணர்வுப்பூர்வமான விசயத்திலும் கூட, தலித்தியவாதிகளின் கொண்டை வெளியே வருவதை பார்க்கும் போதுதான் எரிச்சலும் கோபமும் வருகிறது. தாழ்வு மனப்பான்மையை எளிய மாணவர்களின் மனதில் விதைத்து, அதை சிறுபான்மையினரான ஒரு குறிப்பிட்ட இனத்தவர்கள் மட்டும் தங்களுக்கான அறுவடையாக்கி கொள்ளும் அந்த ஈனபுத்திக்கும் ஆழ்ந்த வாழ்த்துகள்!

- இரா.ச. இமலாதித்தன்

#BanNEET

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக