ஜல்லிக்கட்டு தடையும்! நீக்கமும்!

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைச்சதுல ஒருபக்கம் சந்தோச பட்டாலும், எல்லாருக்கும் நன்றி போஸ்டர் அடிச்சு இம்சை பண்ணுவாங்களே கஷ்டமா இருக்கு.

உண்மை என்னவெனில், இந்த வருடமும் ஜல்லிக்கட்டை தடை செய்திருந்தால் யாரும் ஒன்றுமே செய்யாமல் போஸ்டர் அடித்து அடையாள உண்ணாவிரம் இருந்திருப்பார்கள் அமைப்பு ரீதியாக. மத்திய அரசை எதிர்க்கும் இந்த பலத்தை - கூட்டத்தை அப்படியே மாநில சட்டமன்ற தேர்தலுக்கு கணக்கு காட்டி, திராவிட கட்சிக்கு அடமானம் வைத்திருப்பார்கள். ஆனால், இவர்களையெல்லாம் நம்பிய மாடு பிடி வீரர்களும், மாட்டு உரிமையாளர்களும், ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களும் ரொம்பபே ஏமாந்து நின்றிருப்பார்கள். ஜல்லிக்கட்டு இந்த தேர்தல் வாக்குறுதியில் கடைசி இடம் தான் பிடிக்கும் போல. அதனால் எதிர்பார்த்தது போல டாஸ்மாக் தான் இந்த வருட வாக்குறுதியில் முதலிடத்தில் இருக்க போகிறது.

ஜல்லிக்கட்டு நடப்பதற்கு, எல்லாருமே நாங்க தான் காரணமென மார்தட்டி கொள்கிறார்கள். ஒருவேளை ஜல்லிக்கட்டுக்கு எதிராக 'ஹிந்திய இல்லுமினாட்டிகள்' உச்சநீதிமன்றத்தை அணுகுவதற்காக கூட முன்கூட்டியே மத்தியரசு அனுமதி அளித்திருக்கலாமென சந்தேகம் வருகிறது. தோல்வியென்றால் மத்திய அரசுக்கு கண்டன போஸ்டர் அடித்து போராட்டம் செய்து ஒதுங்கி கொள்வது. வெற்றியென்றால் தங்களுக்கே நன்றி போஸ்டர் அடித்து மார்தட்டி கொள்வது; இதுதான் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் நிலைமை.

ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்திருந்தால், மீசை முறுக்கி - நெஞ்சு நிமிர்த்தி - குரல் உயர்த்தி பேட்டி கொடுத்துவிட்டு தேர்தல் அரசியலுக்குள் மூழ்கி போயிருப்பார்கள். மற்றபடி இங்குள்ள அரசியல் - சாதி அமைப்புகளால் ஒரு மண்ணும் பிடிங்கிருக்க முடியாது என்பதுதான் எதார்த்தமான உண்மை. அதனால் கொஞ்சம் ஓரமாக போய் போஸ்டர் அடிச்சு விளையாண்டு, தனக்குதானே பெருமை பட்டுக்கொள்ளுங்கள்.

- இரா.ச.இமலாதித்தன்

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment