19 ஜனவரி 2016

என் பார்வையில் இந்த வாரம்!

இன்று, ஐதராபாத் கல்லூரி மாணவர் ரோஹித் வெமுலாவை தற்கொலை செய்ய வைத்த, பண்டாரு தத்தாத்ரேயா போன்ற வந்தேறிகளின் ஆரிய வெறி கருத்துகளை வளரவிட்டால், நாளை தமிழ்நாட்டிலும் பிராமணரில்லாத (சூடு - சொரணை - மானம் - அறிவுள்ள) அனைத்து சாதி மாணவர்களும் தூக்கில் தொங்கும் நிலை தான் ஏற்படும்.

#

தலித் என்று சொல்லக்கூடாதுன்னு சொல்லிக்கிட்டு இருக்கிங்க. இன்னொரு பக்கம், இப்போ தந்தி டிவியின் ஆய்த எழுத்து விவாதத்தில் கலந்து கொண்டுள்ள அனைவருமே தலித் என்று தானே சொல்லி கொண்டிருக்கிறார்கள். சிவகாமி - ஹரிஹரன் - ரவிக்குமார் என அனைவருமே மூச்சுக்கு முந்நூறு தடவை தலித் என்றுதான் சொல்லி கொண்டிருக்கிறார்கள். குறைந்த பட்சம் ஊடகங்களுக்காவது கண்டனத்தை தெரியபடுத்துங்கள்.

#

கலிங்கப்பட்டிக்கு பக்கத்து ஊரான குறிஞ்சாக்குளத்தை பற்றி வாயை திறக்காத வைகோ, உலக நாடுகளை பற்றியெல்லாம் தோள் உயர்த்தி பேசிக்கொண்டிருக்கிறார்.தன் பல்லாயிர ஆண்டு வரலாற்றை வடுகர்களால் இழந்து சாலையோரம் தனித்து கிடக்கும், காந்தாரி அம்மனுக்கு கோவில் கட்ட தமிழர்கள் தோள் கொடுப்போம்.

#

ஒருபக்கம் 'தமிழ் தேசியம், தமிழ் இனக்குழுக்களின் ஒற்றுமை' என வாய் கிழிய பேசிக்கொண்டு, இன்னொரு பக்கம் அடுத்த சாதிக்காரனின் முதுகு மேல மிக எளிதாக சவாரி செய்ய முனைகிறார்கள். இனி, 'அகமுடையார்' பற்றி மட்டும் பேசிட்டு, தனி வழியில போய்டலாம் போல...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக