13 ஜனவரி 2016

ஜல்லிக்கட்டு தடையும் இல்லுமினாட்டிகளும்!

சல்லிக்கட்டு நடக்கும் ஊர்களுக்கு நேரடியாக சென்று அங்கே வாடி வாசலில் கூடி இருப்பவர்களோடும், அங்குள்ள ஊர் பெரியவர்களோடும், நேரில் கலந்து பேசி ஊக்கம் கொடுத்து கொண்டிருக்கும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமானுக்கு நன்றி! வேறெந்த அரசியல் கட்சிகளும் நேரடியாக ஆதரவு தெரிவிக்காத நிலையில், மாடுபிடி வீரர்களையும், சல்லிக்கட்டு மாடு வளர்ப்பவர்களையும் சந்தித்து புது உத்வேகம் தரும் இம்முயற்சி கண்டிப்பாக வெற்றி பெறுமென நம்புகிறேன். ஏனெனில், திரு. சீமானின் உணர்ச்சி மிகு பேச்சுக்கு ஓர் அதிர்வு கண்டிப்பாக இருக்கும்.

#

தமிழ் தேசியம் பேசும் பள்ளர் சாதி நண்பர்கள், "ரெட்டி" என சொல்லப்படுகின்ற 'புதிய தமிழகம் கட்சி'யின் தலைவரான மருத்துவர். கிருஷ்ணசாமி பேசிய சல்லிக்கட்டு தடை பற்றிய கருத்தை ஏற்பார்களா? என்பதில் தான், தமிழ் தேசியத்தின் வெற்றி அடங்கிருக்கிறது.

#

ஆண்ட பரம்பரை - ஷத்ரியர் - மீண்டெழும் பாண்டியர் என திமிரி எழுந்து திருப்பி அடிக்கும் வீரத்தமிழர்களின் வீரத்தை சோதிக்கும் வல்லமை PETA என்ற பீப் அமைப்புக்கு இருக்கிறது. ஆனாலும் இந்த விசயத்துல் வீரம் என்ற ஒன்று எந்த தமிழ் சாதிகிட்ட இருக்குன்னு தான் இன்னும் தெரியல.

#

சென்னை - கடலூர் வெள்ளத்திற்கு, தெக்கத்திக்காரன் கூட பதைபதைத்து நிவாரணம் அனுப்பினான். ஆனால், தெக்கத்திக்காரனின் வாழ்வியல் விழாவான சல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஒரு அடையாள போராட்டம் நடத்தினானா சென்னைவாசி? ஆதரவு போரட்டம் கூட வேணாம். ஆனால் சல்லிக்கட்டுக்கு எதிர்குரல் அல்லவா கொடுக்குறான். பாரம்பரியம் மட்டுமல்ல, பாசம் கூட கிராமத்தான் கிட்ட தான் இருக்கு.

#

ஒட்டுமொத்த தமிழர்களின் வீர விளையாட்டான சல்லிக்கட்டு தடைக்கு எதிராக குரல் கொடுத்து, களத்தில் நிற்கும் 'வீரகுல அமரன் இயக்கம்' தலைவர் திரு. கி.இரா. முருகன் அகமுடையாருக்கு எம் வாழ்த்துகள்!

#

'கன்னட மராட்டியன்' ரஜினியோட மனைவி 'ஆரிய பார்பன' லதா, இந்த இருவர்களின் மருமகன் தான், 'வந்தேறி வடுகன்' தனுஷ்!
இவர்களுக்கு எப்படி தமிழனின் பாரம்பரிய சல்லிக்கட்டு மேல் பற்று இருக்கும்? தமிழில் பேசினால் மட்டும், தமிழனாகிட முடியாது என்பதற்கு இந்த மாதிரியான கோடாரி காம்புகளும் ஓர் உதாரணம்.

#

உலகிலேயே மிக அதிக அளவிலான மாட்டுக்கறியை உணவுக்காக ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முதலிடத்தை பெற்றுள்ள நாடான ஹிந்தியாவில் தான், "PETA - தி.க." போன்ற இல்லுமினாட்டிகளின் எடுபிடி பீப் அமைப்புகளும் இருக்கின்றன.

#

சத்குரு ஜக்கி வாசுதேவ், இந்த சல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசிருப்பது ஆச்சர்யமாக இருந்தாலும் அவரது பேச்சின் ஒவ்வொரு வரியோடும் உடன்பட வேண்டி இருக்கிறது. இதனால் அவரது மேலிடத்திலிருந்து என்ன பாதிப்புக்கு உள்ளாக போகிறாரோ அவர்?!



சல்லிக்கட்டை எதிர்க்கும் PETA என்ற பீப் அமைப்புக்கும், அமெரிக்க வேளாண்துறைக்கும், இல்லுமினாட்டிகளுக்கும் சம்பந்தம் இருக்கா? இல்லையா?ன்னு இதன் மூலமாக கூட தெரிஞ்சிக்கலாம்.

#

இல்லுமினாட்டிகளை அழித்தொழித்தால், இவ்வுலகில் போரும், வறுமையும், ஆட்க்கொல்லி நோயும், பொருளாதார வீழ்ச்சியும், கலச்சார சீர்கேடும் கண்டிப்பாக வராது. ஆனால் அவர்களை நாம் நெருங்கவே முடியாது. அதற்கு ஒரு சின்ன உதாரணம், சல்லிக்கட்டுக்கு அவசர அவசரமாக தடை வாங்கிய, அந்த இல்லுமினாட்டி வகையறாவான PETA என்ற அமைப்பும் தான்.

#

PETA என்ற அமைப்பின் தலைமைகம் எது? அவர்களின் நோக்கம் என்ன? உலகெங்கும் கிளைகள் வைத்து உள்ளதன் காரணம் என்ன? அவர்களை வழிநடத்துவது யார்? அந்த அமைப்பின் உறுதுணையோடு செயல்படும் துணை அமைப்புகள் எதெது? உலகின் எங்கேயோ தலைமையகத்தை கொண்டுள்ள அவர்கள் தென்தமிழ்நாட்டில் நடக்கும் சல்லிக்கட்டை தடை கேட்கும் பின்னணி என்ன? என்ற பல கேள்விகளுக்களான பதில்களை தேடிப்பாருங்கள். இல்லுமினாட்டிகளை பற்றி கொஞ்சம் புரிந்து கொள்ளலாம்.

#

இந்த தேர்தல்ல ஜெயலிதா ஜெயிக்க முடியுமா?ன்ன்னு விஜயகாந்த் கிட்ட கேள்வி கேட்ட பத்திரிகை காரங்க, "மோடி பொங்கல், மோடி சல்லிக்கட்டு" என பெயர் வைக்க சொன்ன, பொன்.ராதாகிருஷ்ணன் கிட்ட இன்னும் கேள்வி கேட்கலயா?

கோவில்களின் அர்ச்சகராக ஆகமவிதி, பசு வதை தடை, கோவில்களில் ஆடை கட்டுப்பாடு... என்ற அனைத்திலும் பார்பனர்களின் விருப்பம் தான் அரசியல் சட்டமாகி, நீதிமன்ற தீர்ப்பானது. மேலோட்டமாக பார்க்கும் போது, இவையெல்லாம் பெரும்பான்மை ஹிந்துக்களின் பாரம்பரியமாக தெரியும். மேலும் இது போன்ற தீர்ப்புகளில் ஹிந்துக்களின் பாரம்பரியம் காக்கப்பட்டதாக தெரிந்தாலும், உண்மையில் அங்கே வெற்றி பெற்றது ஆரிய பாரம்பரியமே. அதே ஹிந்து என அடையாளப்படும், தமிழர்களின் ஆதிவழிபாட்டு முறைகளில் ஒன்றான, நாட்டார் வழிபாட்டு குலதெய்வ கோவில்களில் பன்நெடும் காலம் காலமாக ஆடு-கோழி பலியிட்டு வந்ததை தடைவிதித்தது கூட அதே ஆரிய பாரம்பரியம் தான் என்பதும் குறிப்பிட தக்க விசயம். மேலும், தமிழர்களுக்கென இருக்கும் ஒவ்வொரு சமகால வரலாற்று பாரம்பரிய கூறுகளை அழித்தொழிப்பது தான் ஹிந்திய நீதிமன்றங்களில் தீர்ப்பாக இனிவரும் காலங்களில் இருக்கும் என்பதற்கு சல்லிக்கட்டும் ஓர் உதாரணம்.

#

ஒட்டுமொத்த தமிழர்களின் விளையாட்டான சல்லிக்கட்டை, முக்குலத்தோரின் வீர விளையாட்டு என பெருமை பேசும் எந்த சாதி அமைப்புக்காவது உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து போராட துணிவிருக்கிறதா? அதற்கான செயல்முறை திட்டம் ஏதாவது இருக்கிறதா? உங்களது திட்டமெல்லாம் வருடத்தில் அக்டோபர் மாதம் பசும்பொன் போவது மட்டும் தானே. அதற்கடுத்து, தேர்தல் சமயத்தில் திராவிட கட்சிக்கு காவடி எடுப்பது. இன்னும் ஒருபடி மேலே சென்று, "வாழும் வேலுநாச்சியாரே!" ன்னு ஜால்ரா போஸ்டர் அடித்து, ஜெயலலிதா காலில் விழுவது; அப்போதும் கூட உங்களது முறுக்கிய மீசையில் மண் ஒட்டுவது உங்களுக்கு தெரிவதில்லை.

#

சல்லிக்கட்டு தடைக்கு எதிராக வந்த தீர்ப்பை எப்படி எதிர்கொள்வது? சல்லிக்கட்டை இந்த வருசம் எப்படி நடத்துவது? இனி வரும் வருடங்களிலும் தடை இல்லாமல் சல்லிக்கட்டை நடத்த என்ன மாதிரியான செயல்பாட்டு அணுகுமுறைகளை கையாளுவது? இது மாதிரியான அத்தியாவசிய விசயங்களை பலதரப்பட்ட தமிழ் அமைப்புகளும் போட்டியரசியல் இல்லாமல் ஓரிடத்தில் ஒன்றுகூடி விவாதித்து நிரந்தர தீர்வை எட்ட முன்வர வேண்டும். ஆனால் யார் ஒருங்கிணைப்பது? அவர்கள் எங்களை விட சிறிய அமைப்பு; நாங்கள் அவர்களை விட பழைமையான அமைப்பு; அவர்கள் ஊடக புகழுக்காக செய்கிறார்கள்; இப்படி ஏதாவதொரு காரணத்தை குறையாக சொல்லி தனித்தனி அணியாக பயணிப்பார்கள், கேட்டால் இலக்கு ஒன்றுதான் என கைகளை உயர்த்துவார்கள். த்தூ!

#

இந்த வார ’நீயா நானா’வில் சல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசிய திரு. சேனாதிபதியுடைய ஒவ்வொரு வார்த்தைகளும் நச்! ரொம்ப நாளுக்கு பிறகு நீயா நானாவில் ஒரு நல்ல விவாதமாக அமைந்தது.

#

நான் சொல்றது கற்பனையாகவும் தெரியலாம்; உண்மையாகவும் இருக்கலாம். அது அவரவர் பார்வையை பொறுத்தது.

விசயம், இல்லுமினாட்டி மற்றும் சல்லிக்கட்டு பற்றியது தான்.
இயக்குனத் ஷங்கர் ஓர் இல்லுமினாட்டி ஆதரவாளர் என்று வைத்து கொள்வோம். அதனால் தான், "ஐ" என்ற இல்லுமினாட்டி படத்தை பல கோடி செலவில், உலகின் அதிகபட்ச மொழிகளில் மொழிபெயர்த்து அந்த "ஐ" படத்தை வெளியிட்டார்.

இங்கே ஐ என்பது Eye என்ற கண்ணை குறிக்கலாம். அல்லது I For Illuminati என்றும் குறிக்கலாம். இங்கு கண் என்பதுதான் இல்லுமினாட்டிகளின் அடையாள சின்னம்.

அந்த "ஐ" படத்தின் நாயகி 'எமி சாக்சன்' கூட அந்நிய நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இல்லுமினாட்டிகளின் ஆதரவாளராக இருக்கலாம். இந்தியரும் அல்லாத தமிழரும் அல்லாத இந்த எமி ஜாக்சன் தான் முதன்முதலாக சல்லிக்கட்டை தடை செய்ய ட்விட்டரில் வலியுறுத்திய திரை நட்சத்திரம்.
இன்றைக்கு சல்லிக்கட்டுக்கு தடை வாங்கியிருக்கும் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் "PETA" என்ற இல்லுமினாட்டிகளின் கட்டுப்பாட்டிலுள்ள இந்த அமைப்பின் ஆதரவாளர்களில் எமி ஜாக்சனும் ஒருவர்.

அப்படிப்பட்ட இல்லுமினாட்டிகளின் ஆதரவாளரான எமி ஜாக்சன் நடித்த 'தங்கமகன்' என்ற திரைப்படத்தின் கதாநாயகன் தனுஷ் தான், இன்றைக்கு சல்லிக்கட்டை முற்றிலுமாக தடை செய்ய சொல்லி வற்புறுத்தியுள்ளார்.
நான் மேலோட்டமாக சொல்லிருக்கும் இந்த விசயம் பலருக்கு புரியுமாயென தெரியவில்லை. ஆனால்,

நான் சொல்றது கற்பனையாகவும் தெரியலாம்; உண்மையாகவும் இருக்கலாம். அது அவரவர் பார்வையை பொறுத்தது.

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக