22 டிசம்பர் 2017

வேலைக்காரன் - விமர்சனம்!

வேலைக்காரன் க்ளைமேக்ஸில் சார்லியிடம் சிவகார்த்திக்கேயன், "நான் செய்ய வேண்டியதையெல்லாம் கரெக்டா செஞ்சிட்டேன்பா" என சொல்வது போன்ற வசனம் வருகிறது. இந்த இடத்தில் "அதான் எங்கள வச்சி நல்லா செஞ்சிட்டியேடா" என நாகை கணேஷ் தியேட்டரிலிருந்து பதில் கவுன்ட்டர் ரசிகர்களிடமிருந்தும் கோரஸாக வந்தது. படம் முழுக்க ஏறத்தாழ இருபது தடவைக்கு மேல் விசுவாசம் பட டைட்டிலுக்கான மார்கெட்டிங் ப்ரொமோஷன்களும் வந்து போகிறது.
தனி ஒருவனின் அரவிந்த்சாமி பாத்திரத்தை போல வேலைக்காரனில் பகத் பாசில் நடித்திருக்கிறார். பிரகாஷ்ராஜ், சினேகா, தம்பி ராமையா, சார்லி உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இருந்தும் யாரும் நினைவில் அழுத்தமாக பதியவில்லை. காமெடியன்களாக ரோபோ சங்கர், சதீஷ், ஆர்ஜே பாலாஜி போன்ற யாரும் கதைக்கும் - காமெடிக்கும் தேவைப்படவே இல்லை. நயன்தாரா மீதான காதலும் புரியவில்லை. வசனங்கள் எல்லாமும் தனி ரகம்; நல்ல கதைக்கரு; உணவு பொருட்களை கையகப்படுத்தி நஞ்சை திணிக்கும் கார்ப்பரேட்களின் முகத்திரையை வேலைக்காரன் கிழித்திருக்கிறார். ரசிகர்களுக்கு இப்படம் எப்படியென யூகிக்க முடியவில்லை. பெரும் எதிர்பார்ப்பில்லாமல் பார்க்க போனால், படம் பிடிக்க கூடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக