குறைகளை சுட்டிக்காட்டுவதில் தவறில்லை!

பெரும்பான்மை சாதியை சார்ந்தவன் என்ற முறையில் தானே தைரியமாக ஒரு சாதிக்கட்சியை உருவாக்கின்றனர். அந்த பெரும்பான்மை சாதியின் ஓட்டுகளுக்காக தானே திராவிட கட்சிகளும் ஒட்டுமொத்த 234 தொகுதிகளில் யாசகம் போல ஓரிரு தொகுதிகளை ஒதுக்குகின்றன. அந்த சாதிக்கட்சியை யாரை நம்பி, யார் பெயரை சொல்லி, யாருடைய படத்தை போட்டு, எந்த கொள்கைக்காக உருவாக்கினார்களோ, அதையெல்லாம் வெகு எளிதாக மறந்துவிட்டு தனிப்பட்ட பொருளாதார பிரச்சனைக்காக எதிரியிடம் சரணாகதி அடையும் சுயநலவாதிகளின் கீழ்த்தரமான போக்கை, அந்த சாதியை சார்ந்தவன் என்ற முறையில் சுட்டிக்காட்டுவது சரியான முறையே. அதற்காக நீ அந்த அமைப்பில் இருக்கிறாயா? இல்லை நீ எந்த சாதிக்கட்சியில் இருக்கின்றாய்? நீ ஏதாவது கட்சியை நடத்தி பார்த்திருக்கியா? என்று சொல்வதெல்லாம் ஏற்க முடியாத ஒன்று. அப்படி பார்த்தாலும், ஒரு சாதி அமைப்பில் உள்ளவன், அடுத்த அமைப்பை விமர்சிப்பதும் தவறு தானே? தன் சுயநலத்திற்காகவும் - புகழுக்காகவும் - பணத்திற்காகவும் ஒட்டுமொத்த சாதியையும் அடகு வைக்கும் நபர்களை, அந்த சாதியை சார்ந்தவனே சுட்டிக்காட்ட கடமைப்பட்டவனாகிறான். மாறணும்!

- இரா.ச.இமலாதித்தன்

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment