நாகை மைந்தர் தான் தென்னிந்தியாவின் முதல் சூப்பர்ஸ்டார்!எம்.கே.தியாகராஜ பாகவதர் நடிப்பில் 1944ம் ஆண்டு வெளிவந்த ‘ஹரிதாஸ்’ திரைப்படம் தொடர்ச்சியாக மூன்று வருடஙகள் ஓடியது. இந்த சாதனையை இதுவரை யாரும் முறியடித்ததில்லை. மேலும், திரையுலகில் 1934ம் ஆண்டு நுழைந்ததிலிருந்து மொத்தமாகவே 14 படங்களில் மட்டுமே நடித்த எம்.கே.பாகவதரின் பெரும்பாலான படங்கள் வருடகணக்கில் ஓடி தொடர் சாதனைகளை படைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. தென்னிந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டாரும் - எங்க நாகப்பட்டின மாவட்டத்து காரருமான எம்.கே. தியாகராஜ பாகவதர் (Mayavaram Krishnamurthy Thyagaraja Bhagavathar) நினைவு நாளான (01 நவம்பர் 1959) இன்று, நாகப்பட்டினத்து காரனாய் பெருமையோடு அவரை நினைவுகூறுகிறேன்.

- இரா.ச.இமலாதித்தன்

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment