ராஜராஜசோழனின் சதயவிழா!அருண்மொழித்தேவன் என்கிற உடையார் ஸ்ரீ ராஜராஜ தேவரின் 1029வது சதயவிழா வாழ்த்துகள்!

ஸ்வஸ்தி ஸ்ரீ
திருமகள் போலப் பெருநிலச் செல்வியும்
தனக்கே உரிமை பூண்டமை மனக்கொளக்
காந்தளூர்ச் சாலை கலமறுத் தருளி
வேங்கை நாடும் கங்க பாடியும்
நுளம்ப பாடியும் தடிகை பாடியும்
குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும்
முரட்டொழில் சிங்களை ஈழமண்டலமும்
இரட்ட பாடி ஏழரை இலக்கமும்
முந்நீர் பழந்தீவு பன்னீரா யிரமும்
திண்திறல் வென்றித் தண்டாற் கொண்ட தன்
எழில்வளர் ஊழியுள் எல்லா யாண்டும்
தொழுதகை விளங்கும் யாண்டே
செழியரைத் தேசுகொள் ஸ்ரீ கோவி ராஜ கேசரி வன்ம ரான
ஸ்ரீ இராசராச தேவர்க்கு யாண்டு!


- இராஜராஜ சோழனின் மெய்க்கீர்த்தி.

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment